வீட்டுப் பணியும் வணக்கமே!

கேள்வி :

ஒரு முஸ்லிம் பெண் தனது அதிகமான பொழுதை தன் குடும்பத்திற்காக பணிபுரிவதிலும் சமையலறையிலுமே கழிக்கிறாள். றமழானில் பகல் பொழுதில் மேலதிக அமல்களில் ஈடுபட நேரம் கிடைப்பதில்லை. இப்பெண்ணுக்கு தங்களது வழிகாட்டல் என்ன?

பதில் :

குடும்பத்துக்காக பணிபுரிவதும் ஒரு வணக்கமாகும். தன் பெற்றோர், கணவர், பிள்ளைகள் ஆகியோரின் வேலைகளை கவனிப்பதும் வணக்கமாகும். வேலைகளுக்கிடையே கிடைக்கும் சிறிது நேரத்தையேனும் பயன்படுத்தி அவளால் முடிந்த அமல்களில் ஈடுபடலாம். இத்தகைய வேலைகளைச் செய்துகொண்டே தனக்கு தெரிந்த திக்ருகளை ஓதுவது மேலதிக நன்மை தரக்கூடியதாகும்.

- அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் ஆலுஷ்ஷெய்க்

கேள்வி :

றமழானில் இரவு வணக்கத்தில் ஈடுபட வேண்டுமென ஆசைப்படுகிறேன். ஆயினும் இரவு வரை வீட்டு வேலைகளில் ஈடுபடுவதால் இரவு வணக்கத்தில் ஈடுபட முடிவதில்லை. இரவு வணக்கம் புரிய வேண்டுமென்ற எனது எண்ணத்திற்கு நற்கூலி கிடைக்குமா?

பதில் :

ஆம். ஒருவரின் நல்ல எண்ணத்திற்கு நிச்சயம் நற்கூலி கிடைக்கும். இப்பெண் தன் மீதுள்ள கடமைகளில் ஒன்றான குடும்பப் பணியில் ஈடுபடுகிறாள். குடும்பப் பணி என்பது இரவுத் தொழுகையை விடச் சிறந்ததாகும். எனவே அல்லாஹ் இப்பெண்ணுக்கு முழுமையான நற்கூலியை வழங்கப் போதுமானவன்.

- அஷ்ஷெய் இப்னு உஸைமீன் (றஹ்)

@ பதாவா நூர் அலத் தர்ப்

-ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)
Previous Post Next Post