துவாக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு ஏற்ற சிறப்பான நேரங்கள், நிலைகள் மற்றும் இடங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. லைலதுல் கத்ர் (ரமதானின் இறுதிப்பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகள்)
2. இரவின் கடைசிப்பகுதி
3. ஃபர்ள் தொழுகைக்குப்பின்
4. பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் உள்ள நேரம்
5. ஒவ்வொரு இரவில் (குறிப்பிடப்படாத) ஒரு நேரம். [நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இரவில் ஒரு நேரம் உள்ளது, அதில் ஒரு முஸ்லிம் இம்மை, மறுமையின் நற்பாக்கியங்களை கேட்டு, அவை கொடுக்கப்படாமல் இருப்பதில்லை. இது ஒவ்வொரு இரவிலும் நடக்கிறது.’ முஸ்லிம் 757)
6. ஐவேளைத் தொழுகைக்கான அழைப்பு நேரத்தில்
7. மழை பெய்யும்போது
8. அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக படைகள் முன்னேறிச் செல்லும்போது
9. வெள்ளிக் கிழமையில் ஒரு குறிப்பிடப்படாத நேரம் (பெரும்பாலும், ஜும்மா தினத்தின் அஸர் தொழுகைக்கு பிறகு உள்ள நாளின் இறுதி நேரம் அல்லது ஜும்மா குத்பாவுக்கும், தொழுகைக்கும் இடையில் உள்ள நேரம்).
10. ஸம் ஸம் நீரை தூய எண்ணத்துடன் குடிக்கும்போது
11. ஸஜ்தாவின்போது
12. நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: “எவர் உறக்கத்திலிருந்து விழித்து, - வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை, துணை எவரும் இல்லை, அரசாட்சி அவனுக்கே உரியது, அனைத்துப்புகழும், மகத்துவமும் அவனுக்கே உரியது. மேலும், வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இலர். அவன் மிகப் பெரியவன் அவனை விட உயர்ந்த ஆற்றலோ சக்தியோ கிடையாது.” என்று கூறி விட்டு,, “அல்லாஹும்மஃஃபிர்லீ (யா அல்லாஹ், என்னை மன்னிப்பாயாக” என்று அல்லது அல்லாஹ்விடம் வேறு ஏதாவது துவா கேட்டால், அவருக்கு அல்லாஹ் பதிலளிப்பான், அவர் ஒளு செய்து விட்டு, தொழுதால், அவருடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும்.” [புகாரி]
13. ஒருவர் ஒளு செய்து விட்டு உறங்கி, கண் விழிக்கும்போது கேட்கும் துவா
14. யூனுஸ் நபி (அலை) அவர்களின் துவா:
لَا إِلَهَ إِلَّا أنْـت سُـبْحانَكَ إِنِّي كُنْـتُ مِنَ الظّـالِميـن
“உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”. [அல் குர்’ஆன் 21:87] 15. ஒருவர் இறந்த பிறகு மக்கள் கேட்கும் துவா.
16. அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு, நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி விட்டு கேட்கும் துவா.
17. அல்லாஹ்வின் மிகப்பெரிய பெயர்களுடன் கூடிய துவா [இப்னு மாஜா 3856] 18. ஒரு முஸ்லிம் தன்னுடைய இஸ்லாமிய சகோதரருக்காக, அவர் இல்லாத போது கேட்கும் துவா
19. அரஃபாத் தினத்தன்று கேட்கும் துவா
20. ரமதானில் கேட்கும் துவா
21. அல்லாஹ்வை நினைவுகூரும் சபையில் இருக்கும்போது
22. துன்பத்தின் போது:
إِنّا للهِ وَإِنَا إِلَـيْهِ راجِعـون ، اللهُـمِّ اْجُـرْني في مُصـيبَتي، وَاخْلُـفْ لي خَيْـراً مِنْـها
நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நம்முடைய இறுதி மீளுதல் அவனிடமே. யா அல்லாஹ், என்னுடைய துன்பத்திற்காக எனக்கு கூலி வழங்குவாயாக, இதற்குப் பகரமாக இதை விட சிறந்தை எனக்கு வழங்குவாயாக.
23. ஒருவருடைய உள்ளம் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையுடன் அர்ப்பணிப்பில் இருக்கும்போது.
24. கொடுமைக்கு ஆளானவர், கொடுமைக்காரருக்கு எதிராக செய்யும் துவா
25. ஒரு தந்தை தன் மகனுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ செய்யும் துவா.
26. ஒரு பயணியின் துவா
27. நோன்பாளி அவர் நோன்பு திறக்கும் வரை
28. நோன்பு திறக்கும்போது
29. துன்பத்தில் இருப்பவருடைய துவா
30. நீதிமிக்க அரசரின் துவா
31. நன்னடத்தையுடைய மகன் தன் பெற்றோருக்காக கேட்கும் துவா
32. ஒளு செய்த பிறகு, நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பின்வரும் துவாவை ஓதினால், சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும், அவர் விரும்பிய எந்த வாயிலின் வழியாகவும் அவர் உள்ளே நுழையலாம்:
“அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு (வணக்கத்துக்க்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை என்று நான் சாட்சி சொல்லுகிறேன். மேலும் நான், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், தூதரும் என்று சாட்சி கூறுகிறேன்.)” [அந்நஸாயீ 148] 33. ஹஜ்ஜின் போது, சிறிய ஜமராவுக்கு கல் எறிந்த பின்
34. ஹஜ்ஜின் போது, நடு ஜமராவுக்கு கல் எறிந்த பின்
35. க’பாவுக்குள்ளும், க’பாவின் பகுதியான ஹிஜ்ர் வளைவிலும்
36. ஸஃபா மலைக்கு மேல்
37. மர்வா மலைக்கு மேல்
38. மஷ்’அர் அல் ஹரம் (முஸ்தலிஃபாவில்)
ஒரு விசுவாசி எந்நேரத்திலும், எங்கிருந்தாலும், தன்னுடைய ரப்பிடம் துவா கேட்டுக்கொண்டேயிருப்பார். அல்லாஹ் அஸ்ஸவஜல் கூறுகிறான்:
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. [2:186] ஆனால், இந்த நேரங்கள், சந்தர்ப்பங்கள், இடங்கள் எல்லாம் அதிகப்படியான கவனம் செலுத்துவதற்க்காக உள்ளன.
ஹிஸ்னுல் முஸ்லிமுடைய ஆசிரியர் Dr. சை’த் இப்னு அலி இப்னு வஹ்பல் கஹ்தானி அவர்களுடைய ‘அத்துவாவு மின் அல் கிதாபி, வஸ்ஸுன்னா’ என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.