- அஷ்ஷெய்க் முஹம்மத் நாஸிருத்தீன் அல் அல்பானீ
அஸ்ல் செய்வது – அதாவது பென்ணுறுப்பின் வெளியில் விந்தை வெளிப்படுத்துவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது. இது குறித்து பல ஹதீஸ்கள் வந்துள்ளது.
“குர்ஆன் இறங்கிக்கொண்டிருந்த காலத்தில் நாங்கள் அஸ்ல் செய்வோராக இருந்தோம்” என்று ஜாபிர் அறிவித்தார். [புஹாரி, முஸ்லிம், ]
மற்றோர் அறிவிப்பில் “நாங்கள் நபியின் ﷺ காலத்தில் அஸ்ல் செய்வோராக இருந்தோம், அது நபி ﷺ அவர்களுக்கு தெரிய வந்தது ஆனால் அவர் எங்களை தடுக்கவில்லை” என்று அறிவிக்கிறார் [முஸ்லிம் ]
அபூ சயீத் அல் குத்ரி அறிவிக்கிறார், “ஒரு மனிதர் நபியிடம் ﷺ வந்து ‘என்னிடம் ஒரு பெண் அடிமை உள்ளார். அவளிடம் நான் அஸ்ல் செய்கிறேன், ஆண்களுக்கு தேவைப்படுவது எனக்கும் தேவையாக உள்ளது . ஆனால் யூதர்கள் அஸ்ல் செய்வது சிறிய சிசுக்கொலை என்கிறார்கள்?’ என்றார். அதற்க்கு நபி ﷺ ‘யூதர்கள் பொய் சொல்கிறார்கள், யூதர்கள் பொய் சொல்கிறார்கள். அல்லாஹ் ஒரு உயிரை படைக்க நாடினால், நீ அதை மாற்ற முடியாது.’ என்றார்கள். [நஸாயீ, அபூ தாவூத், தஹாவீ, அஹ்மது ஆகியோர் ஸஹீஹான ஸனதுடன் அறிவிக்கிறார்கள்]
ஜாபிர் அறிவிக்கிறார்: ஒரு மனிதர் நபியிடம்ﷺ வந்து “என்னிடம் ஒரு அடிமைப்பெண் இருக்கிறார் அவள் எங்களுக்கு உதவுகிறார், எங்கள் பேரீத்த தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறாள். சில நேரம் நான் அவளிடம் செல்கிறேன், அவள் கர்பமாவதை நான் விரும்பவில்லை” என்று கூறினார். அதற்க்கு நபி ﷺ “நீங்கள் நாடினால் அஸ்ல் செய்யுங்கள். ஆனால் அல்லாஹ் அவளுக்கு விதித்தது அவளுக்கு கிடைத்தே தீரும்” என்றார்கள். சில காலம் கழித்து அவர் நபியிடம் ﷺ வந்து “அந்த பெண் கர்ப்பமாகி விட்டார்” என்றார். நபிﷺ “அல்லாஹ் அவளுக்கு விதித்தது நடக்கும் என்று நான் கூறினேன் அல்லவா” என்றார்கள். [முஸ்லிம், அபூ தாவூத்,அஹ்மத், பைஹகீ ]
– திருமண மற்றும் இல்லற சட்டங்கள்