இஸ்லாத்தில் ஒவ்வொரு வணக்கத்துக்கும் பிரத்தியேகமான முறையும் வழிகாட்டலுமுண்டு. அகீகா, உல்ஹிய்யாவாக மாற முடியாது போல் பொதுவான ஸதகா குறிப்பான ஸகாதுல் பித்ர் ஆக முடியாது.
எமது சமூகத்தில் சிலர் மகாஸிதுஷ் ஷரீஆவை தவறாக விளங்கி ஒவ்வொரு வணக்கத்தின் முறையை மாற்றியமைத்து மக்களை குழப்பியடித்து வருவது பாரதூரமான பாவமாகும்.
வணக்கங்கள் எப்போதும் தவ்கீபிய்யா வாக இருப்பதால் அதாவது அல்லாஹ் மற்றும் ரஸுலின் உருவாக்கமாக இருப்பதால் இடையில் எமது கருத்துக்களை இடைச்செருகல்களாக புகுத்தி வணக்கங்களில் மாற்றம் செய்வதோ, அவற்றின் நோக்கங்களாக சிலவற்றை நாம் வகுத்து காலத்துக்கு ஏற்றால் போல் அமைய வேண்டுமென அவ்வணக்க முறைகளை மாற்றியமைப்பதோ ஒருக்காலும் அனுமதி கிடையாது. இவ்வாறு செய்வது அல்லாஹ் மற்றும் ரஸுலின் அதிகாரத்தை கையில் எடுத்த பாரிய குற்றத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
வணக்கங்களை அடையாளப்படுத்துவது உட்பட அதன் முறைகள், ஆழ அகலங்கள் அனைத்தும் அல்லாஹ் மற்றும் ரஸுலினால் வழிகாட்டப்பட வேண்டியவே தவிர நாம் வணக்கங்களை உருவாக்க முடியாது. அத்தோடு ஷரீஆ சட்டவாக்க அதிகாரம் இருவருக்கும் மட்டுமுரியது என்பதை விளங்கி இஸ்லாம் வரையறுத்த சட்டதிட்டங்கள், வணக்க வழிபாடுகளை முறையாக உள்ளால் உள்ள படி நடைமுறைப்படுத்த முயல்வோமாக!
-Azhan Haneefa