அல்லாஹ்வுடன் அடியான் நடந்துகொள்ளும் ஒழுங்கு

ஹதீஸ் தெளிவுரை

அரபு: அப்துர் ரஹ்மான் இப்னு பஹ்த் அல்வுத்ஆன் அத்தவ்ஸிரிய்

தமிழில்: இம்தியாஸ் யூசுப்


அல்லாஹ்வுடன் அடியான் நடந்துகொள்ளும் ஒழுங்கு

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُومُ مِنَ اللَّيْلِ حَتَّى تَتَفَطَّرَ قَدَمَاهُ، فَقَالَتْ عَائِشَةُ: لِمَ تَصْنَعُ هَذَا يَا رَسُولَ اللَّهِ، وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ؟ قَالَ: أَفَلاَ أُحِبُّ أَنْ أَكُونَ عَبْدًا شَكُورًا من حديث المُغِيرَةَ بْنَ شُعْبَةَ، يَقُولُ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي حَتَّى تَرِمَ، أَوْ تَنْتَفِخَ قَدَمَاهُ)

صحيح البخاري (135 – 6)

நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய இரு பாதங்களும் வீங்குகின்றளவு இரவில் நின்று வணங்குபவராக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள். அல்லாஹ் உங்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டானே எனக் கேட்டபோது, நான் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்பக் கூடாதா எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) | நூல்:புகாரி, முஸ்லிம்


இந்த ஹதீஸின் வழிகாட்டல்கள்:

1. அல்லாஹ்வுக்காக அடிமைத்துவத்தை காண்பிப்பது அடியானின் மிக உயர்ந்த அந்தஸ்தினையும் கண்ணியத்தையும் காட்டக் கூடியதாக இருக்கும். அல்லாஹ்வுக்கு (க்கட்டுப்பட்டு) தன்னுடைய அடிமைத்துவத்தினை உறுதிப்படுத்துவதில்தான் அடியானின் பூரணத்துவமும் அமையப் பெற்றிருக்கிறது.

தன்னுடைய ரப்புக்காக அடிமைத்துவத்தை அடியான் காண்பிக்கின்ற போதெல்லாம் அவனது பூரணத்துவம் அதிகரித்து அந்தஸ்தும் உயர்வடைகிறது. (இதற்கு மாறாக) அல்லாஹ்வின் அடிமைத்துவத்திலிருந்து விடுதலை பெறுவதில்தான் பூரணத்துவம் உள்ளது என எவன் கருதுகிறாரோ அவன் படைப்புகளில் மிக அறிவீனனும் வழிகேடனுமாவான். அல்லாஹ்வுக்குரிய அடியானாக அவன் இருக்கவில்லையானால் மற்றவர்களுக்கே அடிமையாக இருக்கிறான் என்பது அர்த்தமாகும்.

2. அல்லாஹ் தன்னுடைய நபிமார்களின் அடிமைத்துவம் (அல்லாஹ் வுக்குகட்டுப்பட்டு இருந்ததைப்) பற்றி குர்ஆனில் பலஇடங்களில் குறிப்பிட்டுள்ளான். இது அடிமைத்துவத்தின் உயர் அந்தஸ்தினையும் அதன் சிறப்பினையும் காட்டுகின்ற ஆதாரங்களாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

وَاذْكُرْ عِبَادَنَا إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ أُولِي الْأَيْدِي وَالْأَبْصَارِ

(நபியே!) வலிமையும் அறிவும் மிக்க எமது அடியார்களான இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோர் குறித்தும் நீர் நினைவுகூர்வீராக. (38:45)

وَاذْكُرْ عَبْدَنَا دَاوُودَ ذَا الْأَيْدِ إِنَّهُ أَوَّابٌ

இன்னும் வலிமை மிக்க எமது அடியார் தாவூதை நீர் நினைவுகூர்வீராக. நிச்சயமாக அவர் அதிகம் (மன்னிப்புக் கோரி அல்லாஹ்வின்பால்) மீள்பவராக இருந்தார். (38:17)

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ فَكَذَّبُوا عَبْدَنَا وَقَالُوا مَجْنُونٌ وَازْدُجِرَ

அவர்களுக்கு முன்னர் நூஹுடைய சமூகத்தாரும் பொய்பித்தனர். அவர்கள் எமது அடியாரைப் பொய்பித்து பைத்தியக்காரர் என்று கூறினர். மேலும் அவர் அச்சுறுத்தப்பட்டார். (54:9)

3. தன்னுடைய (கட்டளைக்கு முழுமையாக கட்டுப்பட்டு செயலாற்றிய)நபி முஹம்மத் (ஸல்) அவர்களுடைய அடிமைத்துவப் பண்பை மிக உயர்ந்த நிலையில் அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான். அதில்:

தஃவாவின் நிலை

وَأَنَّهُ لَمَّا قَامَ عَبْدُ اللَّهِ يَدْعُوهُ كَادُوا يَكُونُونَ عَلَيْهِ لِبَدًا

நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார் (முஹம்மத்) அல்லாஹ்வை அழைப்பதற்காக நின்றபோது (ஜின்களாகிய)அவர்கள் (செவியுறும் ஆர்வத்தால்) அவரிடம் கூட்டமாக நெருங்கி வருகின்றனர். 72:19

வஹி இறங்கிய நிலை

فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى

(அல்லாஹ்) வஹியை அறிவித்ததை அவனின் அடியார்(முஹம்மது)க்கு அவர் (ஜிப்ரீல்) அறிவித்தார். (53:10)

(இஸ்ரா) இராவழிப் பயணம்

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ

(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்று புறச் சூழலை நாம் பாக்கியம் பொருந்தியதாக ஆக்கிய அந்த மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில் அழைத்துச் சென்றவன் தூய்மையானவன். நமது அத்தாட்சிகளிலிருந்து அவருக்கு நாம் காண்பிக்கவே (இவ்வாறு செய்தோம்) நிச்சயமாக அவன் செவியுறு பவன், பார்ப்பவன். (17:1)

4.அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே (இபாதத்) வணக்கம் புரிந்து அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது என்பதே மனு, ஜின்கள் படைக்கப்பட்டதன் நோக்கமாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ

மனு, ஜின்களை என்னை வணங்குவதற்காக அன்றி நான் படைக்கவில்லை. (51:56)

இவ்வசனத்தில் ‘‘என்னை வணங்குவதற்காக என்று அல்லாஹ் குறிப்பிடுவது (வணக்கங்களின் மூலம்) என்னை ஒருமைப்படுத்துவது என்பதாகும். எனவே ஒவ்வொரு வணக்கத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. இதுவே தவ்ஹீதுல் உலுஹிய்யா என்பதன் அர்த்தமாகும். இக்கொள்கைக்காகவே அல்லாஹ் இறைத் தூதர்களை அனுப்பி வேதங்களையும் இறக்கி வைத்தான்.

وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ

அல்லாஹ்வை வணங்குங்கள். மேலும் (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்) தாகூத்தை விட்டும் விலகிக் கொள்ளுங்கள் எனக் கூறும் தூதரை ஒவ்வொரு சமூகத்திலும் நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம். (16:36)

அல்லாஹ்வைத் தவிர யாரும் அழைக்கப்படக் கூடாது. அல்லாஹ்விடமேயன்றி யாரிடமும் பாதுகாப்பு கோரக் கூடாது. அல்லாஹ்வுக்கேயன்றி (எவருக்கும்) அறுத்துப் பலியிடப்படக் கூடாது. அல்லாஹ்வுக்கேயன்றி நேர்ச்சை செய்யப்படக் கூடாது. உண்மையாகவே அல்லாஹ்வுக்கேயன்றி (எவருக்கும்) அஞ்சப்படக் கூடாது. இதுவே கலிமதுத் தவ்ஹீத் எனும் லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் அர்த்தமாகும்.

5. இபாதத் என்பதற்கு மார்க்க ரீதியான வரையறை யாதெனில்,

“அடியானின் வெளிப்படையான உள்ரங்கமான சொல்களிலும் செயல்களிலும் அல்லாஹ் பொருந்திக் கொள்கின்ற அவன் விரும்புகின்ற அனைத்து காரியங்களையும் உள்ளடக்கின்ற பொதுவான வார்த்தையே இபாதத் எனப்படும்” (நூல்: மஜ்மூஉ பத்வா 10-149).

தவ்ஹீதின் பால் அழைப்பு விடுத்தல் ஷிர்க்கை தடுத்தல் துஆ கேட்டல் – திக்ரு செய்தல் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசித்தல் அல்லாஹ்வின் மீது பொறுப்புச்சாட்டுதல் அவனது அருளில் ஆசை கொள்ளுதல் அவனது தண்டனையை அஞ்சுதல் தொழுதல் – ஸகாத் கொடுத்தல் – நோன்பு பிடித்தல் – ஹஜ் செய்தல் இறைநிராகரிப்பாளர்கள் மற்றும் முனாபிக்குகள் (எதிர்த்து வரும்போது அவர்களுடன்) ஜிஹாத் செய்தல் பெற்றோருக்கு நன்மைபுரிதல்
இரத்த பந்தங்களை அண்டி நடத்தல் போன்ற அத்தனை விடயங்களும் “லாஇலாஹ இல்லல்லாஹ்” என்ற வார்த்தையில் உள்ளடங்கியுள்ளது.

6. அடிமைத்துவத்திற்கான மூன்று கடமைகள் உள்ளன. அக்கடமைகளின்றி எந்த வணக்கமும் வணக்கமாக அமையாது.

முதலாவது: அல்லாஹ்வுக்காக நேசம் கொள்வது. அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்துடனே அவனை வணங்கப்படக் கூடியவனாக ஏற்பதும், மற்றவர்கள் மீதுள்ள நேசத்தை விட அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தை முற்படுத்துவதும் கடமையாகும்.

இரண்டாவது: அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வது. அல்லாஹ்; மீதுள்ள அச்சத்துடனே அவனை வணங்கப்படக் கூடியவனாக ஏற்பதும் இம்மை-மறுமையில் அவனது தண்டனைப் பற்றி அஞ்சுவதும் கடமையாகும்.

மூன்றாவது: அல்லாஹ்வின் மீது ஆதரவு வைப்பது. அல்லாஹ்விடமுள்ள கொடை மற்றும் பாவமன்னிப்புக்கான கூலியின் மீது ஆதரவு வைத்து, அவனை வணங் கப்படக் கூடியவனாக ஏற்பதும் கடமையாகும்.

7. இபாதத்களில் ஏதேனும் ஒன்றை அல்லாஹ் அல்லாதவர்களுக்காக செய்வது பெரும் இணைவைப்பாகும். உதாரணமாக துஆ கேட்பது, பாதுகாப்புக் கோருவது, அறுத்துப் பலியிடுவது, நேர்ச்சை செய்வது, சிரம் பணிவது போன்ற இபாதத்களில் ஒன்றை அல்லாஹ் அல்லாதவர்களுக்காக செய்வதாகும்.

“அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் பாவம் எது? என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அல்லாஹ் உன்னை படைத்திருக்கும்போது அவனுக்கு இணையாக ஒன்றை ஆக்குவதாகும்” எனக் கூறினார்கள் என இப்னு மஸ்ஊத் (ரழி) அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ் கூறுகிறான்:

فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ

நீங்கள் அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு இணையாளர் களை ஏற்படுத்தாதீர்கள். (2:22)

8. உள்ளத்தாலும் நாவினாலும் உறுப்புகளாலும் அல்லாஹ்வுக்கு நன்றி கூறுவது கடமையாகும். அதன் கருத்தாவது:

அல்லாஹ்வுடைய அடியானின் நாவில் அல்லாஹ் அருள் புரிந்ததற்கான அடையாளமாவது, அவன் அல்லாஹ்வை புகழ்வதும் அவனது அருளை ஏற்றுக்கொள்வதுமாகும். அவனது உள்ளத்தில் அருள்புரிந்ததற்கான அடையாளமாவது, உள்ளத்தால் அந்த அருளை அவன் ஏற்றுக்கொள்வதும் அருள் புரிந்தவனான அல்லாஹ்வை நேசிப்பதுமாகும். உறுப்புகள் மீது அருள்புரிந்ததற்கான அடையாளமாவது, அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு வழிப்பட்டு நடப்பதாகும். (நூல்: மதாரிஜுஸ் ஸாலிகீன் 2-254)

இமாம் இப்னுல் கையிம்(ரஹ்) கூறுகிறார்கள்: நன்றி செலுத்துதல் ஐந்து அடிப்படைகள் மீது நிறுவப்பட்டுள்ளது. நன்றி செலுத்துபவன் நன்றி செலுத்தப் படக்கூடியவனான அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுதலும் அவனை நேசித்தலும், அவனுடைய அருட்கொடைகளை ஏற்றுக் கொளளுதலும், அவனைப் புகழ்தலும், அவன் வெறுக்கின்றவற்றில் அவைகளை பயன்படுத்தாமல் இருப்பதுமேயாகும். (நூல்: மதாரிஜுஸ் ஸாலிகீன் 2-254)

9. உள்ளும் புறமும் அல்லாஹ் தன்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற நிலையே வணக்கத்தின் மிக உயர்ந்த நிலையாகும்.

“இஹ்ஸான்” என்றால் என்ன என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது “அல்லாஹ்வை நீர் பார்ப்பதுபோல் அவனை வணங்க வேண்டும். அவனை நீ பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான்” எனக் கூறி னார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ் தன்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என எவர் உணர்கிறாரோ அவர் தன் வணக்கத்தை தூய்மையாகவும் பூரணத்துவத்துடனும் இஹ்லாஸுடனும் செய்வார். மேலும் மக்கள் அவரை அவதானிப்பதையோ பொறுப்படுத் துவதையோ கருத்திற் கொள்ளமாட்டார்.
Previous Post Next Post