சுஜூதின் நன்மை

சொர்க்கத்தில் முஹம்மது நபியோடு கூட இருக்க நஃபிலான சுஜூதுகளும் வழி செய்கின்றன.

ஒரு வருடத்தில் தொழப்படும் ராதிபான (முன்பின்) சுன்னத்துக்களின் எண்ணிக்கை 4380 ஆகும் என ஒரு அறிஞர் கணித்துக் கூறி இருந்தார்.

அடேங்கப்பா! எவ்வளவு பெரிய கூலி என நாம் சிந்திக்க நல்லதோர் தருணம்.

சோம்பலை உதறி விட்டு சுஜூதின் மூலம் சொர்க்கத்தில் வீடுகள் பெற்று இறைத்தூர் முஹம்மது நபியோடு கூட இருக்க உஷாராகுவோம்.

நபி (ஸல்) அவர்களோடு சொர்க்கத்தில் கூட இருக்க ஆசைப்பட்ட தோழரிடம்: 
قال ﷺ :عليك بكثرة السجود فإنك لاتسجد لله سجدة إلا رفعك الله بها درجة وحط عنك بها خطيئة ( رواه مسلم)
நீ ( உபரியான) சுஜூதை அதிகப்படுத்திக் கொள். ஏனெனில் நீ அல்லாஹ்வுக்காக நீ ஒரு சுஜூத் செய்கின்ற போது அல்லாஹ் உனது ஒரு அந்தஸ்தை உயர்த்தி, உனது ஒரு  பாவத்தை அழித்து விடுகின்றான் என அவரிடம் கூறினார்கள். (முஸ்லிம்)

ஒரு அடியான் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நிலை சுஜூத் ஆகும். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள். அது ஏற்றுக் கொள்ளப்படும் என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (முஸ்லிம்)

சுஜூத் ஒரு அடியானுக்கு ஈருலகப் பயனைத் தேடித்தரும் தரும் உயர்ந்த வணக்க வழிபாடுகளில் ஒன்றாகும்.

ஆகவே அந்த வணக்கத்தை தூய மனதோடு நிறைவேற்ற வேண்டும்.

அல்லாஹ்வை அன்றி முகஸ்துதியாக மனிதர்களுக்காகவோ மரணித்த இன்னொருவருக்கோ செய்து அதனால் நரகத்தை தேடிக் கொள்ள ஒரு முஸ்லிம் முயற்சிக்கக் கூடாது. 

ஆதம்  நபிக்கு வானவர்கள் செய்த இறை கட்டளையான சுஜூதை அவ்லியாவின் மண்ணறையில் செய்கின்ற பாவமான சுஜூதிற்கு ஆதாரமாக எடுத்து பாவம் செய்யக் கூடாது .

அல்லாஹ்வுக்காக செய்யப்படும் தூய்மையான சுஜூதிற்கு வானவர்கள் பாதுகாப்பு அளிப்பர்:

சுஜூத் இறை பணிவின் உச்ச கட்ட வணக்கமும் வழிமுறையுமாகும்.

அல்லாஹ்வுக்காக சுஜூத் செய்கின்ற  அவனது  அடியார்கள் தமது ஏழு உறுப்புக்களின் மூலம் அவன் முன்னிலையில் தமது உச்சகட்ட பணிவை வெளிப்படுத்துகின்றனர்.

இதுவே அவர்களை பிற மத வணக்கங்களில் இருந்து வேறுபடுத்தும் வணக்கமாகும்.

அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமான அமலும் நிலையும் சுஜூதாகும்.

அவ்வாறே, அடியான் சுஜூத் செய்கின்ற போது ஷைதான் ஓரமாகி ஒதுங்கி நின்று அழுகின்ற அமலும் அந்த சுஜூதே.

மறுமை நாளில்  இறை விசுவாசிகளான தனது உம்மத்தை நரக விடுதலை செய்யக் கோரி அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் வீழ்ந்து மன்றாடும் ஷஃபாஅத் மன்றாட்டமும் சுஜூத் மூலமே நடை பெறும்.

அந்த உயரிய வணக்கத்தை அல்லாஹ் ஒருவன் பணித்த பிரகாரன் அவனுக்கு நிறைவேற்றுவதோடு அந்த வணக்கத்தை மண்ணறையில் மக்கிப் போன மாந்தர்களுக்கு செய்வது ஹராமாகும் என்பது மத்ஹபு மற்றும் ஹதீஸ் சார் அறிஞர்களின் ஏகோபித்த சரியான முடிவாகும்.

கஃபாவில் ஒரு நிகழ்வு

இறைத் தூதர் (ஸல்) அவர்கள்  புனித கஃபாவின் தரையில் சுஜூத் செய்வதை பொறுக்க முடியாதவனாக இருந்த அபூஜஹ்ல் அவர் சுஜூத் வணக்கத்தில்  ஈடுபடுவதைக் கண்டால் இறைத் தூதரின் பிடரியில் மிதிப்பதாக சபதமும்  செய்தான்.
அவ்வாறு செய்யத் துணிந்த அவனுக்கு நடந்த சம்பவம் சுஜூத் செய்வோரைத் தடுத்து துன்புறுத்தும் அபூஜஹ்லின் வாரிசுகளுக்கும் பாடமாகும். அது பற்றி கீழே படியுங்கள்.

قالَ أَبُو جَهْلٍ: هلْ يُعَفِّرُ مُحَمَّدٌ وَجْهَهُ بيْنَ أَظْهُرِكُمْ؟ قالَ فقِيلَ: نَعَمْ، فَقالَ: وَاللَّاتِ وَالْعُزَّى لَئِنْ رَأَيْتُهُ يَفْعَلُ ذلكَ لأَطَأنَّ علَى رَقَبَتِهِ، أَوْ لأُعَفِّرَنَّ وَجْهَهُ في التُّرَابِ، قالَ: فأتَى رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ وَهو يُصَلِّي، زَعَمَ لِيَطَأَ علَى رَقَبَتِهِ، قالَ: فَما فَجِئَهُمْ منه إلَّا وَهو يَنْكُصُ علَى عَقِبَيْهِ وَيَتَّقِي بيَدَيْهِ،  (2797)
فقالَ: إنَّ بَيني وبينَه لخَندَقًا مِن نارٍ وهوْلًا، أي: خوفًا وأمْرًا شديدًا، وأجنحةً: جمعُ جناحِ الطائرِ، الملائكةُ الَّذينَ يَحفظونَه، فقالَ صلَّى اللهُ عليه وسلَّم: لو دَنا مِنِّي، أي: قَرُبَ عندي لَاختطَفَتْه الملائكةُ، أي: استَلَبَتْه بِسرعةٍ عُضوًا عُضوًا، والمعنى: لَأخذَ كلُّ مَلكٍ عضوًا مِن أعضائِه

உங்களுக்கு முன்னிலையில் முஹம்மது தனது முகத்தை (கஃபாவின்) மண்ணில் படுத்து கிறன்றாராமே” என்று அபூஜஹ்ல் கேட்ட போது   குழுமியிருந்தவர்கள் “ஆம்!” என்றனர். அதற்கவன் “லாத்து, உஸ்ஸா கடவுள்கள் மீது சத்தியமாக! நான் அவரை (சுஜூத் செய்யப்) பார்த்தால் அவரது பிடரியின் மீது கால் வைத்து அழுத்தி அவரது முகத்தை மண்ணோடு மண்ணாக ஆக்கி விடுவேன்” என்று சபதிமிட்டான் . சிறிது நேரத்திற்குப் பிறகு (சுஜூத் செய்த) நபி (ஸல்) அவர்களிடம் வந்தான். நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவன் நபி (ஸல்) அவர்களின் பிடரியை மிதிக்க முயன்ற மறுகணமே அவன் பின்னோக்கியவனாக  தனது இரு கைகளாலும் தற்காப்பவன் போல தன்னைக் காப்பாற்றிக் கொண்டு பின்வாங்கினான். இதனை அவதானித்த மக்கள் “அபூ ஜஹ்லே! என்ன நேர்ந்தது?” என்று கேட்டனர். 
قالَ: فقِيلَ له: ما لَكَ؟ فَقالَ: إنَّ بَيْنِي وبيْنَهُ لَخَنْدَقًا مِن نَارٍ وَهَوْلًا وَأَجْنِحَةً. فَقالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: لو دَنَا مِنِّي لَاخْتَطَفَتْهُ المَلَائِكَةُ عُضْوًا عُضْوًا 

அதற்கு அவன் “எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான பெரும் கிடங்கையும், மிகப்பெரிய பயங்கரத்தையும், பல இறக்கைகளையும் பார்த்தேன்” என்று (பதறிக் கொண்டு) கூறினான். பிறகு நபி (ஸல்) அவர்கள் “அவன் எனக்கருகில் நெருங்கியிருந்தால் வானவர்கள் அவனை  ஒவ்வொரு உறுப்பாக பதம் பார்த்திருப்பார்கள் எனக் கூறினார்கள்.

இதன் பின்னணியில்தான்

قالَ: فأنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ، لا نَدْرِي في حَديثِ أَبِي هُرَيْرَةَ، أَوْ شيءٌ بَلَغَهُ، : {كَلَّا إنَّ الإنْسَانَ لَيَطْغَى أَنْ رَآهُ اسْتَغْنَى إنَّ إلى رَبِّكَ الرُّجْعَى أَرَأَيْتَ الذي يَنْهَى عَبْدًا إذَا صَلَّى أَرَأَيْتَ إنْ كانَ علَى الهُدَى أَوْ أَمَرَ بالتَّقْوَى أَرَأَيْتَ إنْ كَذَّبَ وَتَوَلَّى}، يَعْنِي أَبَا جَهْلٍ، {أَلَمْ يَعْلَمْ بأنَّ اللَّهَ يَرَى، كَلَّا لَئِنْ لَمْ يَنْتَهِ لَنَسْفَعًا بالنَّاصِيَةِ، نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ، فَلْيَدْعُ نَادِيَهُ سَنَدْعُ الزَّبَانِيَةَ، كَلَّا لا تُطِعْهُ}[العلق من 6: 19].  أخرجه مسلم

ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும். நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின் காவலாளிகளான) ஸபானிய்யாக்களை  அழைப்போம். என்ற வசனத்தோடு மேலும் பல வசனங்கள் இறங்கின. (அல்குர்ஆன் 96:17, 18)
ஆதார நூல்கள் - முஸ்லிம், திர்மிதி, முஸ்னத் அல்பஸ்ஸார் மற்றும் பல நூல்கள்)

விளக்கம்:

இந்த சுஜூத் நாம் தொழுகைகளிலும் நன்றி கூர்ந்தும் செய்கின்ற சுஜூதாகும். மரணித்தோருக்காக அவர்களது மண்ணறைகளில் செய்யப்படும் சுஜூதை  இது குறிக்காது.

யா அல்லாஹ்! சோம்பேறித்தனத்தில் இருந்தும் முகஸ்துதியில் இருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். உனக்காக அதிகமதிகம் சுஜூத் செய்கின்ற பாக்கியத்தை நமக்கு தந்தருள்வாயாக! ஆமீன்.

தொகுப்பு- 
எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி

Previous Post Next Post