மன்ஹஜ் என்றால் என்ன? ஸலஃப் மன்ஹஜ் அறிஞர்களின் பெயர் வரிசை


மன்ஹஜ் என்றால் வழிமுறை, பாதை, பாடத்திட்டம், நடைமுறை, அணுகுமுறை என்றெல்லாம் அகராதிப் பொருள் ஆகும்(அல் மவ்ரித்). ஸலஃப் என்றால் முந்திச் சென்றவர்கள், முன்னோர்கள் என்பது பொருளாகும். மன்ஹஜ் அஸ் ஸலஃப் என்றால் முந்தியவர்களின் வழிமுறை என்பதாகும். யார் இந்த முந்தியவர்கள்? குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றும் உலமாக்களின் ஏகோபித்த அபிப்பிராயத்தின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்த ஸஹாபாக்கள் அவர்களை அடுத்து வந்த தாபிஈன்கள், தபவுத் தாபியீன்கள் என்று மூன்று சிறந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த நன்மக்கள்.

நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னர் ஒரு கூட்டம்  ஷியாக்களாக, கவாரிஜ்களாக, முஃதஸிலாக்களாகப் பிரிந்து புதிய கொள்கைகளை உருவாக்கி குர்ஆனுக்குத் தான்தோன்றித்தனமான விளக்கங்களை அளித்து வழிகெட்டுச் சென்ற போது நபி வழியையும் நபித்தோழர்களின் வழியையும் பின்பற்றக் கூடியவர்கள் அவர்களிடமிருந்து தங்களைப் பிரித்து அடையாளம் காட்டுவதற்காக அஹ்லுஸ்சுன்னத் வல்ஜமாஅத் என்று பெயரிட்டுக் கொண்டார்கள். 73 கூட்டமாக இந்த சமூகம் பிரிந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்த போது நானும் எனது தோழர்களும் எந்த வழியில் இருக்கிறோமோ அந்த வழியைப் பின்பற்றக் கூடியவர்களே வெற்றி பெறுவர் என்ற ஹதீஸின் அடிப்படையில் அவ்வாறு பெயரிட்டுக் கொண்டனர். அதே கொள்கையை உடையவர்கள்தான் தங்களை ஸலஃப் மன்ஹஜை உடையவர்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். இன்று அஹ்லுஸ்சுன்னத் வல்ஜமாஅத் என்று சொல்லிக் கொண்டே ஷியாக்களின் பல செயல்பாடுகளையும் கடைபிடிக்கக் கூடியவர்கள் ஷிர்க்கான பித்அத்தான காரியங்களில் ஈடு பட்டிருக்கும் நிலையில் அந்தப் பழைய பரிசுத்தமான வழிமுறையைப் பின்பற்றிச் சீர்திருத்தம் செய்த நன்மக்கள் நபி (ஸல்) அவர்களால் பரிசுத்த தலைமுறை என நற்சான்று வழங்கப்பட்ட முந்தைய மூன்று தலைமுறையினர் எவ்வழியில் நடந்தார்களோ அவ்வழி நடப்பவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்துவதற்காக ‘அஹ்லுஸ்சுன்னத் வல்ஜமாஅத்’ என்பதுடன் ‘ஸலஃபுகளின் வழிமுறைகளை(மன்ஹஜ்ஜை)ப் பின்பற்றுபவர்கள்’ என்று சேர்த்துக் கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. 

இமாம் அஹ்மது இப்னு ஹம்பல்(ரஹ்), ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா(ரஹ்), அவர்களின் மாணவர் இமாம் இப்னுல் கைய்யூம் அல் ஜவ்ஸி (ரஹ்), இமாம் இப்னு கஸீர்(ரஹ்), சவூதி மண்ணிலிருந்து கப்ரு வழிபாடு ஒழியக் காரணமாக அமைந்த இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்), ஏன் சமீபத்தில் வாழ்ந்து மறைந்த மூத்த உலமாக்கள் இப்னு பாஸ் (ரஹ்), இப்னு உஃதைமீன் (ரஹ்), நாசிருத்தீன் அல்பானி (ரஹ்), போன்ற சீர்திருத்தவாதிகளும் சரி இன்று உலகெங்கிலும் இஸ்லாமில் ஊடுருவிய ஷிர்க் பித்அத் அநாச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கியிருக்கும் அமைப்புகளும் சரி அவர்கள் தங்களை இந்த பெயரில்தான் அறிமுகம் செய்தனர்.

இந்த இடத்தில்தான் சற்று நிதானமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. அவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று சொன்னவர்கள் எவருமே குர்ஆன் ஹதீஸுக்கு எதிராக இருந்தாலும் அந்த முன்னோர்களைத்தான் தக்லீது செய்ய வேண்டும், குர்ஆன் ஹதீஸை விட்டு விட வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக பிந்தைய பித்அத் வாதிகளின் வழிமுறையை விட்டுவிட்டு முந்தைய நன்மக்களின் வழியில் குர்ஆன் ஸுன்னாவை விளங்கி பின்பற்ற வேண்டும் என்று தான் சொன்னார்கள். இது தான் இன்றும் சில வழிகேடர்களால் திரித்து வியாக்கியானம் செய்யப்படுகிறது. விரிவாக அறிய ஸலபிய்யா பகுதியில் உள்ள ஏனைய ஆக்கங்களை பார்வையிடவும்.

அவ்வாறாக தூய்மையான கல்விக்கு அடித்தளமிட்டு எமக்கு முன் சென்ற அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஆ / ஸலஃப் மன்ஹஜ் அறிஞர்களின் பெயர்களில் சில:
(H- மரணித்த ஹிஜ்ரி ஆண்டு)

1. நபித்தோழர்களிலிருந்து அனைவரும் (ரழியல்லாஹு அன்ஹூம் அஜ்மயீன்) (பார்க்க)

2. தாபியீன்களிலிருந்து:

ஸயீத் இப்னு முஸய்யிப் (90H)

அபு அல்-ஆலியா ரபீஆ இப்னு மஹ்ரான் (93H)

அலீ இப்னு ஹுஸைன் ஜைனுல் ஆபிதீன் (93H)

உர்வா இப்னு ஸுபைர் (94H)

உபைதுல்லாஹ் இப்னு மஸுத் (94H)

அப்துல்லாஹ் இப்னு முஹைரீஸ் (99H)

உமர் இப்னு அப்துல் அஸீஸ் (101H)

முஜாஹித் இப்னு ஜப்ர் (102H)

அபான் இப்னு உஸ்மான் இப்னு அஃப்பான் (105H)

தாவூஸ் இப்னு கைஸான் (105H)

அல் காஸிம் இப்னு முஹம்மத் இப்னு அபூபக்ர் (106H)

ஸாலிம் இப்னு அப்துல்லாஹ் இப்னு உமர் (106H)

அல் ஹஸன் அல்-பஸரீ (110H)

முஹம்மது இப்னு ஸீரீன் (110H)

முஹம்மது இப்னு அலீ இப்னு ஹுஸைன் (114H)

அபூ ஸுஹைல் அந்-நாபீஃ (117H)

முஹம்மது அஸ்-ஸுஹ்ரீ (124H)


3. தபஉத் தாபியீன்களிலிருந்து:

முஹம்மது அஸ் ஸுபைதி (148H)

அபூ ஹனீபா அந் நுஃமான் இப்னு தாபித் (150H)

அப்துல்லாஹ் இப்னு அவ்ன் (151H)

அப்துர் ரஹ்மான் இப்னு ஜாபிர் (153H)

அப்துர் ரஹ்மான் அல்-அவ்ஸாயி (157H)

ஷுபாஃ இப்னு அல்-ஹஜ்ஜாஜ் (160H)

ஸுபியான் அத்-தவ்ரீ (161H)

ஸயீத் இப்னு அப்தில் அஸீஸ் அத் தனூஹ்கி (167H)

அல்-லைத் இப்னு ஸாத் (175H)

ஷரீக் இப்னு அப்துல்லாஹ் (177H)

ஹம்மாத் இப்னு ஸலமாஹ் (179H)

மாலிக் இப்னு அனஸ் (179H)

இஸ்மாயீல் இப்னு உல்யாஹ் (193H)


4. ஹிஜ்ரி 200லிருந்து - 700வரை:

இமாம் அப்துல்லாஹ் இப்னு அல்-முபாரக் (171H)

இமாம் ஹுஸைம் இப்னு பஷீர் அல் வாஸிதி (183H)

இமாம் முஹம்மத் இப்னு அல்-ஹஸன் அஷ்-ஷைபானி (189H)

இமாம் வகீ இப்னு அல்-ஜர்ராஹ் (197H)

இமாம் ஸுபியான் இப்னு உயைனா (197H)

இமாம் அப்துர்-ரஹ்மான் இப்னு மஹ்தீ (198H)

இமாம் யஹ்யா இப்னு ஸஈத் அல்-கத்தான் (198H)

இமாம் முஹம்மத் இப்னு இத்ரீஸ் அஷ்-ஷாபிஈ (204H)

இமாம் யஸீத் இப்னு ஹாரூன் (206H)

இமாம் அப்து அர்-ரஸ்ஸாக் அஸ்-ஸன்ஆனி (211H)

இமாம் அப்துல்லாஹ் இப்னு யஸீத் அல் முக்ரீ (213H)

இமாம் அப்துல் அஃலா இப்னு முஷிர் அத் டமஸ்கீ (218H)

இமாம் அஃப்பான் இப்னு முஸ்லிம் (219H)

இமாம் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் அல்-ஹுமைதி (219H)

இமாம் உபைத் அல் காஸிம் இப்னு ஸல்லாம் (224H)

இமாம் நுஐம் இப்னு ஹம்மாத் (228H)

இமாம் யஹ்யா இப்னு மஈன் (233H)

இமாம் அபு ஹைதமா ஸுஹைர் இப்னு ஹர்ப் அந்-நஸாஈ (234H)

இமாம் அபுல்-ஹஸன் அலீ இப்னுல்-மதனீ (234H)

இமாம் அபூ பக்ர் இப்னு அபீ ஷைபா (235H)

இமாம் இஷாக் இப்னு ரஹாவைஹ் (238H)

இமாம் அபு தவ்ர் இப்ராஹீம் இப்னு காலித் (240)

இமாம் அஹ்மது இப்னு முஹம்மத் இப்னு ஹன்பல் அபூ அப்துல்லாஹ் அஷ் ஷைபானி (241H)

இமாம் முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல்-புகாரீ (256H)

இமாம் முஸ்லிம் இப்னு அல்-ஹஜ்ஜாஜ் அல்-நைஸாபூரி (261H)

இமாம் அபீ ஸுறா அர்-ராஸி (264H)

இமாம் ஸாலிஹ் இப்னு அஹ்மத் இப்னு ஹன்பல் (266H)

இமாம் முஹம்மத் இப்னு வாராஹ் (270H)

இமாம் முஹம்மத் இப்னு யஸீத் இப்னு மாஜா (273H)

இமாம் அபூ தாவூத் ஸுலைமான் அல்-ஸிஜிஸ்தானி (275H)

இமாம் அபு முஹம்மத் இப்னு குதைபா அத்-தினவரீ (276H)

இமாம் அபூ ஹாத்திம் அர்-ராஸீ (277H)

இமாம் அபு ஈஸா முஹம்மத் அத்-திர்மிதி (279H)

இமாம் ஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் அத்-துஸ்தரீ (283H)

இமாம் அபு அம்ர் இப்னு அபீ ஆஸிம் அஷ்-ஷைபானி (287H)

இமாம் அஹமத் இப்னு அபீ பக்ர் அஸ்-ஸுஹ்ரீ (292H)

இமாம் அல்-ஜுனைத் அல்-பக்தாதீ (297H)

இமாம் அஹமத் இப்னு ஸுஐப் அந்-நைஸாஈ (303H)

இமாம் முஹம்மத் இப்னு ஜரீர் அத் தபரீ (310H)

இமாம் முஹம்மத் இப்னு இஸ்ஹாக் இப்னு குஸைமா (311H)

இமாம் அஹமத் இப்னு முஹம்மத் அல்-கல்லால் (311H)

இமாம் அபூ பக்ர் முஹம்மத் பின் இப்ராஹீம் பின் அல்-முன்திர் (318H)

இமாம் அபூ ஜாஃபர் அத்-தஹவீ (321H)

இமாம் அபுல் ஹஸன் அல்-அஷ்அரி (324H)

இமாம் இப்னு அபு ஹாத்திம் (327H)

இமாம் முஹம்மத் அல்-ஹஸன் அல்-பர்பஹாரி (329H)

இமாம் அஹமத் இப்னு ஸல்மான் அந் நஜ்ஜாத் (348H)

இமாம் முஹம்மத் இப்னு ஹிப்பான் (354H)

இமாம் முஹம்மத் பின் அல்-ஹுஸைன் அல்-ஆஜுர்ரீ (360H)

இமாம் அலி இப்னு உமர் அத்-தாரகுத்னீ (385H)

இமாம் இப்னு அபீ ஸைத் அல்-கைரவானி (386H)

இமாம் அபூ அப்துல்லாஹ் இப்னு பத்தாஹ் அல்-ஹன்பலீ (387H)

இமாம் இப்னு அபீ ஸம்னீன் (399H)

இமாம் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் அல்-நைஸாபூரி (405H)

இமாம் அபுல்-காசிம் ஹிபதுல்லாஹ் அல்-லாலக்காஈ (418H)

இமாம் அபூ நுஐம் அல்-அஸ்பஹானி (430H)

இமாம் அபூ இஸ்மாயில் அஸ் ஸாபூனி (449H)

இமாம் அஹமத் இப்னு ஹுஸைன் அல்-பைஹகீ (458H)

இமாம் இப்னு அப்துல் பர் (463H)

இமாம் அபூ பக்ர் அல்-கதீப் அல்-பக்தாதி (463H)

இமாம் அஷ்-ஷரீஃப் அபு ஜாபர் அல்-ஹாஷிமி (470H)

இமாம் அபூ முதஃப்பர் அஸ்-ஸமானீ (489H)

இமாம் அபூ முஹம்மத் ஹுஸைன் அல்-பகவீ (516H)

இமாம் அப்துல் காதிர் அல்-ஜீலானி (561H)

இமாம் அபூ தாஹிர் அஸ் ஸிலஃபீ (576H)

இமாம் அபூ முஹம்மத் இப்னு குதாமா அல்-மக்திஸீ (620H)

இமாம் இப்னு அஸ்-ஸலாஹ் அஷ்-ஷஹ்ராஸுரீ (643H)

இமாம் மஜ்த் உத்-தீன் இப்னு தைமிய்யா (652H)

இமாம் இப்னு அபீ ஷாமப் (665H)

இமாம் அபூ ஸகரிய்யா யஹ்யா அல்-நவவீ (676H)


5. ஹிஜ்ரி 700லிருந்து - 1200 வரை:

இமாம் இப்னு தகீக் அல்-ஈத் (702H)

இமாம் தகீ உத்-தீன் அஹமத் இப்னு தைமிய்யா (728H)

இமாம் அல்-ஹாபித் அல்-மிஸ்ஈ (742H)

இமாம் முஹம்மத் இப்னு அப்துல்-ஹாதி (744H)

இமாம் அபு அப்துல்லாஹ் அத்-தஹபீ (748H)

இமாம் முஹம்மத் இப்னு அல்-கைய்யிம் அல்-ஜவ்ஸியா (751H)

இமாம் இஸ்மாயில் இப்னு உமர் இப்னு கதீர் / கஸீர் (774H)

இமாம் அபூ இஷாக் அஷ்-ஷாதிபீ (790H)

இமாம் அல் ஹாபிழ் அஸ்-ஸர்கஸீ (794H)

இமாம் அல்-ஹாபிழ் இப்னு ரஜப் அல்-ஹன்பலீ (795H)

இமாம் இப்ராஹிம் இப்னு அஹ்மத் அல்-தனுகீ (800H)

இமாம் அல் ஹாபிழ் ஸைன் உத்-தீன் அல்-இராகீ (806H)

இமாம் இப்னு வஸீர் அல்-யமனீ (840H)

இமாம் அல்-ஹாபிழ் ஸிஹாப்-உத்-தீன் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (852H)

இமாம் அல்-ஹாபிழ் அஸ்-ஷவ்கானி (902H)

இமாம் ஜலால் உத்-தீன் அஸ்-ஸுயூத்தி (911H)

இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி (974H)

இமாம் முஹம்மத் இப்னு அஹமத் அல்-ரம்லீ (1004H) 

இமாம் அஹ்மத் இப்னு அப்த் அல்-குத்தூஸ் அல்-ஷினவீ (1028H)

இமாம் அஹமத் இப்னு முஹம்மத் அல்-கஷஷி (1071H)

இமாம் உதுமான் இப்னு அஹமத் அந்-நஜ்தீ (1100H)

இமாம் இப்ராஹிம் இப்னு ஹஸன் அல்-குர்தி அல்-மதனீ (1101H) 

இமாம் அபுல் ஹஸன் அஸ்-ஸின்தீ (1132H)

இமாம் அப்துல்லாஹ் இப்னு ஸாலிம் அல்-பஸ்ஸ்ரீ (1134H)

இமாம் முஹம்மத் இப்னு இப்ராஹிம் அபூ தாஹிர் (1145H)

இமாம் முஹம்மத் ஹயாத் பின் இப்ராஹீம் அஸ்-ஸின்தீ (1163H)

இமாம் ஷா வலியுல்லாஹ் அத்-தெஹ்லவீ (1176H)

இமாம் முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அஸ்-ஸன்ஆனி (1182H)

இமாம் முஹம்மத் அல்-ஸபரினீ (1183H)


6. ஹிஜ்ரி 1200லிருந்து தற்போது வரை:

ஷெய்க் முஹம்மத் பின் அப்துல்-வஹ்ஹாப் அத்-தமீமி (1206H)

ஷெய்க் ஸாலிஹ் பின் முஹம்மத் அல்-புல்லானீ (1218H)

ஷெய்க் ஸுலைமான் பின் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அப்துல்-வஹ்ஹாப் (1233H)

ஷெய்க் ஷாஹ் இஸ்மாயீல் ஷஹீட் தெஹ்லவீ (1246H)

ஷெய்க் முஹம்மத் பின் அலீ அஷ்-ஷவ்கானி (1250H)

ஷெய்க் அப்துர்-ரஹ்மான் பின் ஹஸன் ஆலுஷ் ஷெய்க் (1275H)

ஷெய்க் அப்துல்லாஹ் பின் அப்துர்-ரஹ்மான் அபா புதைன் (1282H)

ஷெய்க் அப்துல்-லதீப் பின் அப்திர்-ரஹ்மான் பின் ஹஸன் ஆலுஷ் ஷெய்க் (1293H)

ஷெய்க் ஹமாத் இப்னு அதீக் (1301H)

ஷெய்க் ஸித்திக் ஹஸன் கான் (1307H)

ஷெய்க் இஷாக் இப்னு அப்துர்-ரஹ்மான் இப்னு ஹஸன் ஆலுஷ் ஷெய்க் (1319H)

ஷெய்க் ஸையித் நதீர் ஹுஸைன் தெஹ்லவி (1320H)

ஷெய்க் முஹம்மத் பஷீர் அஸ்-ஸஹ்ஸவானி (1323H)

ஷெய்க் ஹுஸைன் பின் முஹ்ஸின் அல்-யமனி (1327H)

ஷெய்க் ஜமால்-உத்-தீன் பின் முஹம்மத் அல்-காஸிமி (1332H)

ஷெய்க் சுலைமான் பின் ஸஹ்மான் (1349H)

ஷெய்க் முஹம்மத் பின் அப்துர்-ரஹ்மான் அல்-முபாரக்பூரி (1353H)

ஷெய்க் அப்துர்-ரஹ்மான் பின் நாஸிர் அஸ்-ஸஃதீ (1376H)

ஷெய்க் ஹாபிழ் இப்னு அஹ்மத் அலீ அல்-ஹாகமீ (1377H)

ஷெய்க் அஹமத் பின் முஹம்மத் ஷாகிர் (1377H)

ஷெய்க் முஹம்மத் பின் அப்தில்-அஸீஸ் இப்னு மானி (1385H)

ஷெய்க் முஹம்மத் பின் இப்ராஹிம் பின் அப்துல்-லதீஃப் (1386H)

ஷெய்க் அப்துர்-ரஹ்மான் பின் யஹ்யா பின் அலீ அல்-முஅல்லிமீ (1386H)

ஷெய்க் அப்துல்லாஹ் பின் முஹம்மத் அல்-கராவீ (1389H)

ஷெய்க் முஹ்ஹிப் உத்-தீன் அல்-கதீப் (1389H)

ஷெய்க் முஹம்மத் பின் இப்ராஹீம் ஆலுஷ் ஷெய்க் (1389H)

ஷெய்க் முஹம்மத் பின் அப்துர்-ரஸ்ஸாக் ஹம்ஸா (1392H)

ஷெய்க் அப்துல்-ரஹ்மான் பின் காஸிம் அந்-நஜ்தீ (1392H)

ஷெய்க் அபூ முஹம்மத் அப்துல்-ஹக் பின் அப்துல்-வாஹித் அல்-காஸிமி (1392H)

ஷெய்க் முஹம்மத் அல்-அமீன் அஷ்-ஷன்கீதி (1393H)

ஷெய்க் முஹம்மத் கலீல் ஹர்ராஸ் (1395H)

ஷெய்க் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் ஹுமைத் (1402H)

ஷெய்க் இஹ்ஷன் இலாஹி ஸஹீர் (1407H)

ஷெய்க் முஹம்மத் தகீ-உத்-தீன் அல்-ஹிலாலி (1408H)

ஷெய்க் ஹமூத் பின் அப்துல்லாஹ் அத்-துவைஜிரி (1413H)

ஷெய்க் அபுல்-ஹஸன் உபைதில்லாஹ் பின் முஹம்மத் அல்-முபாரக்பூரி (1414H)

ஷெய்க் அப்துர்-ரஸ்ஸாக் அல்-அஃபீஃபீ (1415H)

ஷெய்க் முஹம்மத் அமான் அல்-ஜாமீ (1416H)

ஷெய்க் பதீ உத்-தீன் ஷா அர்-ராஷிதீ அஸ்-ஸின்தீ (1416H)

ஷெய்க் ஹமாத் பின் முஹம்மத் அல்-அன்ஸாரி (1418H)

ஷெய்க் மஹ்மூத் ஷாக்கிர் (1418H)

ஷெய்க் உமர் பின் முஹம்மத் ஃபல்லதாஹ் (1419H)

ஷெய்க் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அஸ்-ஸுமாலீ (1420H)

ஷெய்க் அப்துல்-அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் (1420H)

ஷெய்க் முஹம்மத் நாஸிருத்தீன் அல்-அல்பானி (1420H)

ஷெய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-உதைமீன் (1421H)

ஷெய்க் முக்பில் பின் ஹாதீ அல்-வாதிஈ (1422H)

ஷெய்க் அப்துல்லாஹ் பின் அப்துர்-ரஹ்மான் அல்-பஸ்ஸாம் (1423H)

ஷெய்க் அப்துஸ்-ஸலாம் இப்னு பர்ஜிஸ் ஆல் அப்தில்-கரீம்​ (1425H)

ஷெய்க் அப்துல்-காதிர் அல்-அர்னாஉத் (1425H)

ஷெய்க் அப்துல்லாஹ் பின் காஉத் (1426H)

ஷெய்க் ஸபியுர்-ரஹ்மான் அல்-முபாரக்பூரி (1427H)

ஷெய்க் அப்துல்-கஃப்பார் ஹஸன் (1427H)

ஷெய்க் இப்ராஹிம் பின் முஹம்மத் ஆலுஷ் ஷெய்க் (1428H)

ஷெய்க் பக்ர் அபு ஸைத் (1429H)

ஷெய்க் அஹ்மத் பின் யஹ்யா அந்-நஜ்மீ (1429H)

ஷெய்க் அப்துல்லாஹ் பின் அப்துர்-ரஹ்மான் அல்-ஜிப்ரீன் (1430H)

ஷெய்க் முஹம்மத் பின் அப்துல்-வஹ்ஹாப் அல்-பன்னா (1430H)

ஷெய்க் அப்துல்லாஹ் பின் குதையான் (1431H)

ஷெய்க் அப்துல்லாஹ் பின் அப்துல்-அஸீஸ் அல்-அகீல் (1432H)

ஷெய்க் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அஸ்-ஸுபையல் (1434H)  

ஷெய்க் ஸைத் பின் முஹம்மத் பின் ஹாதீ அல்-மத்ஹலீ (1435H)

ஷெய்க் ஸாலிஹ் பின் முஹம்மத் அல்-லுஹைதான் (1443H)

ஷெய்க் யஹ்யா பின் உஸ்மான் அல்-முபாரக்ஃபூரி அல்-முதர்ரிஸ் (1443H)


^ ரஹிமஹுல்லாஹு அஜ்மயீன்


தற்போது வாழ்ந்து வருபவர்களில் (சிலர்):

ஷெய்க் அப்துல்-அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் ஆலுஷ் ஷெய்க்

ஷெய்க் ஸாலிஹ் பின் பவ்ஸான் அல்-பவ்ஸான்

ஷெய்க் அப்துர்-ரஹ்மான் பின் நாஸிர் அல்-பர்ராக்

ஷெய்க் அப்துல்-முஹ்ஸின் பின் ஹமாத் அல்-அப்பாத்

ஷெய்க் அப்துல்லாஹ் அல்-ஙுனைமீன்

ஷெய்க் முஹம்மத் பின் அலீ பின் ஆதம்

ஷெய்க் அப்துல்-அஸீஸ் அர்-ராஜிஹி

ஷெய்க் அப்துர்-ரஹ்மான் அல்-அஜ்லான்

ஷெய்க் அப்துல்லாஹ் பின் ஸுலைமான் பின் முஹம்மத் பின் முனீ

ஷெய்க் ரபீ பின் ஹாதீ அல்-மத்ஹலீ

ஷெய்க் அலீ பின் நாஸிர் அல்-ஃபாகிஹீ

ஷெய்க் ஸாலிஹ் பின் அப்துல்லாஹ் அல்-ஹுமைத்

ஷெய்க் ஸாலிஹ் பின் ஙானிம் அஸ்-ஸத்லான்

ஷெய்க் ஸாலிஹ் பின் ஸாத் அஸ்-ஸுஹைமீ

ஷெய்க் வஸி-உல்லாஹ் பின் முஹம்மத் அப்பாஸ்

ஷெய்க் ஸாலிஹ் பின் அப்துல்-அஸீஸ் ஆலுஷ் ஷெய்க்

ஷெய்க் அப்துல்-கரீம் அல்-குதைர்

ஷெய்க் அஹமத் இப்னு அலீ ஸியார் அல்-முபாரகீ

ஷெய்க் ஸாத் பின் நாஸிர் அஷ்-ஷத்ரீ

ஷெய்க் யஹ்யா இப்னு அலி அல்-ஹஜுரி

ஷெய்க் உபைத் இப்னு அப்தில்லாஹ் இப்னு ஸுலைமான் அல்-ஹம்தானி அல்-ஜாபிரி

ஷெய்க் அலி பின் யஹ்யா அல்-பஹ்கலீ

ஷெய்க் அப்துஸ் ஸலாம் பின் அப்தில்லாஹ் பின் முஹம்மத் அஸ்-ஸுலைமான்

ஷெய்க் அப்துல்லாஹ் பின் அப்துர் ரஹீம் அல்-புஹாரி 


^ ஹபிழஹுல்லாஹு அஜ்மயீன்

Previous Post Next Post