ஹிஜ்ரி 150 ஆண்டு இமாம் அபூ ஹனீஃபா (ரஹி) அவர்கள் மரணித்த ஆண்டு.
அந்த வருடம்தான் இமாம் முஹம்மத் பின் இத்ரீஸ் அஷ்ஷாஃபிஈ (ரஹி) அவர்கள் பாலஸ்தீன காஸா மண்ணில் பிறக்கின்றார்கள்.
குரைஷியப் பரம்பரையில் வந்த இமாம் ஷாஃபிஈ ரஹி அவர்கள் தனது இளமையில் பாலஸ்தீன
கிராமங்கள், மற்றும் நாட்டுப்பற மக்களோடு ஒன்றரக் கலந்து வாழ்ந்ததன் பயனாக அரபி மொழி, அரபி இலக்கியம், அரபி கவிப் புலமை போன்ற அனைத்து துறைகளிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்று, மொழித்திறன் மிக்க ஒருவராக விளங்கினார்கள்.
சுருக்கமாகச் சொன்னால்
ஃபிக்ஹ், ஹதீஸ், தஃப்ஸீர் சட்டக்கலைகளின் ஸ்தாபகத் தந்தை என்றும் அறியப்படுகின்றார்கள்.
பலஸ்தீன், ஈராக், எமன், பக்தாத், மக்கா, மதீனா, ஏமன், எகிப்து போன்ற பல்வேறு பிரதேசங்களில் தனது மார்க்க கல்விப் பயணத்தை தொடங்கி ஷரீஆவை துறைபோகக் கற்ற சிறந்த முன்மாதிரிமிக்க ஆசிரியர்களிடம் தனது கல்வியைத் தேடியதன் விளைவாக இஸ்லாமிய உலகில் மாபெரும் அறிவு மேதை என போற்றப்படுகின்றார்கள்.
நாஸிருல் ஹதீஸ், ஃபகீஹ், முஃபஸ்ஸிர் என்ற சிறப்பு நாமங்களைப் பெற்ற இமாம் ஷாஃபிஈ (ரஹி) அவர்கள் தனது இமாம்களில் ஒருவராகிய இமாம் மாலிக்கின் முவத்தா மாலிக் கிரந்தத்தை மணனம் செய்து "முவத்தா" கிரந்தமின்றியே இமாம் மாலிக் அவர்களிடம் மனப்பாடமாக ஒப்புவித்ததை அவதானித்த இமாம் மாலிக் (ரஹி) அவர்கள் இமாம் ஷாஃபிஈ (ரஹி) அவர்களை தனது நெருங்கிய மாணவர்களில் ஒருவராக வைத்திருந்ததாக அவர்கள் மத்தியில் பேணப்பட்ட ஆசிரிய மாணவ தொடர்பாடல் பற்றிய குறிப்பில் காண முடிகின்றது
-அர்ரிஸாலா, الرسالة
-அல்உம்மு , الأم
-இக்திலாஃபுல்
ஹதீஸ், اختلاف الحديث
-முக்தஸர் அல்முஸனீ مختصر المزني
போன்ற பிரசித்திபெற்ற அறிவுப் பொக்கிஷங்கள் இமாம் ஷாஃபிஈ அவர்களின் பாடங்களில் இருந்து அவர்களின் மாணவர்களான ரபீ பின் சுலைமான் அல்முராதீ, அல்புவைத்தி, அல்முஸனி போன்ற அதி திறமையான மாணவர்களால் இமாம் ஷாஃபியின் காலத்தில் தொகுக்கப்பட்ட மகத்தான தொகுப்புக்களாகும்.
இமாம் அபூ ஹனீஃபா ரஹி அவர்கள் மரணித்த போது இமாம் ஷாஃபிஈ பிறந்தார்கள். அவரை அவர்கள் சந்தித்ததே இல்லை. அவர்களின் மாணவரான ஹஸன் அஷ்ஷைபானி என்பவரிடம் அபூ ஹனீஃபா இமாமின் ஃபிக்ஹைப் படித்தும் முரண்பட்டவைகளுக்கு அவருக்கு மறுப்பும் எழுதி உள்ளார்கள்.
இமாம் ஷாஃபிஈ அவர்கள் மதீனாவின் இமாம் என அறியப்பட்ட இமாம் மாலிக்கின் மாணவர்களில் ஒருவராகும்.
இமாம் ஷாஃபிஈ ரஹி அவர்களின் மாணவர்களில் ஒருவர்தான் إمام السنة என்ற பெயர் பெற்ற இமாம் அஹ்மத் ரஹி அவர்கள்.
இமாம் மாலிக்கின் "முவத்தா" கிரந்தத்தை முன்னுதாரணமாக வைத்தே இமாம் ஷாஃபிஈ ரஹி அவர்கள் தனது ஃபிக்ஹ் பாடங்களை தயார் படுத்தி மாணவர்களுக்கு விரிவுரை வழங்கியதாக அது தொடர்பான குறிப்புக்களில் கூறப்படுகின்றது.
அதுவே பிற்காலத்தில் "அல்உம்மு" நூலாகவும் பரிணமித்தது.
உலகில் வெறும் 49-(50) ஆண்டுகள் வாழ்ந்த மாமேதை இமாம் ஷாஃபிஈ ரஹி அவர்கள் தனது 49- வது வயதில் ஹிஜ்ரி 204 மரணித்தார்கள்.
இருந்தாலும் ஹதீஸ்கலை சட்ட விதிகள் உள்ளடக்கிய الرسالة என்ற அழகான தொகுப்பை மாத்திரமின்றி, பெறுமதியான பல கிரந்தங்களை முஸ்லிம் உலகுக் விட்டுச் சென்றார்கள்
رحمه الله رحمة واسعة وأسكنه فسيح جناته
பின்வரும் பல நூல்களோடு ஃபிக்ஹ் சார்ந்த அம்சங்களை உள்ளடக்கிய சிறு, சிறு தொகுப்புக்கள் காணப்பட்டாலும் அல்உம்மு - தாய் என்ற பொருள் கொண்ட நூல் அவைகளின் தாயாக விளங்குகின்றது.
كتاب الرسالة القديمة (كتبه في بغداد)
كتاب الرسالة الجديدة (كتبه في مصر)
كتاب اختلاف الحديث
كتاب جمَّاع العلم
كتاب إبطال الاستحسان
كتاب أحكام القرآن
كتاب بيان فرض الله عز وجل
كتاب صفة الأمر والنهي
كتاب اختلاف مالك والشافعي
كتاب اختلاف العراقيين
كتاب الرد على محمد بن الحسن
كتاب علي وعبد الله
كتاب فضائل قريش"
கீழே உள்ள இணைப்பில் மேலதிகமான தகவல்எளைப் பெறலாம்.
இமாம் மாலிக் அவர்களின் மாணவரான இமாம்
ஷாஃபிஈ, அவரது மாணவரான அஹ்மத் ஆகிய மூவருக்கும் இடையில் உஸ்தாத் மாணவன் தொடர்பு இயல்பாக அறியப்பட்டதாகும்.
அவர்கள் மூவர் பெயரிலும் பிற்காலத்தில் மத்ஹப்- கருத்தியல் வட்டம்- தொடங்கியதே தவிர, அவர்கள் மத்ஹபை தோற்றுவிக்கவில்லை என்பதே இஸ்லாமிய வரலாற்றுப் பதிவாகும். அது தவறும் கிடையாது. பாவமும் கிடையாது.
ஆனால் இமாம்களின் பலமான, பலவீனமான கருத்துக்களை சரியான முறையில் விளங்காது பலவீனத்தைச் சரி கண்டு சண்டை செய்வதே பாவமாகும்.
இமாம் ஷாஃபிஈ ரஹி அவர்கள் அக்கால முஸ்லிம் உலகில் பல்வேறுபட்ட மத்ஹபு சார், ஹதீஸ்துறை அறிஞர்களிடம் மற்றும் வெவ்வேறு பிரதேசங்களில் வாழ்ந்த அறிஞர்களிடம் பரவலான முறையில் முன்னெடுத்த கல்வித் தேடலானது
المقارنة بين المذاهب والآراء மத்ஹபுகள் அறிஞர்களின் கருத்துக்கள் மத்தியில் ஒப்பீட்டு முறை என்ற ஒரு அடிப்படையையும்الترجيح بين الأقوال المتعارضة முரண்பட்ட கருத்துக்களில் மிகவும் ஊர்ஜிதமான ஏற்புடைய கருத்துக்களைக் கண்டறிதல் கல்வித் தேடல் الرحله في الطلب போன்ற வழிமுறைகளையும் நமக்கு உணர்த்துகின்றது.
இது இவ்வாறிருக்க, இமாம் ஷாஃபிஈ ரஹி அவர்களை வாலில் பிடித்து தொங்கும் பலர் அவர்களின் அகீதா அடிப்படை கோட்பாடு பற்றியயோ, அவர்களின் சூஃபித்துவ முரண்பாடு பற்றிய கடுமையான கண்டணத்தையோ தேடுவது கிடையாது.
அதாவது தேவையான மறுபகுதியை படிக்காமல் அவர்களின் முதுகில் காலம் கழிப்பது வேடிக்கையாகும்.
குறைந்த பட்சம் அல் உம்மு போன்ற நூலையாவது கொஞ்சம் புரட்டிப் பார்ப்பதன் மூலம் மரணித்த மனிதர்கள் பெயரில் தடுக்கப்பட மண்ணறை கட்டி வணங்குவதையாவது தவிர்க்கலாம். உண்மையான கப்ரு ஸியாரத் சுன்னாவை உயிர்ப்பிக்கலாம்.
தொகுப்பு
--
எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி