இஸ்லாத்தில் மர்யம் (அலை) அவர்களின் வரலாறு

இஸ்லாத்தில் மர்யம் (அலை) அவர்களின் வரலாறு பற்றி அறிந்து கொள்வோம் 


ஒவ்வொரு முஹ்மினான பெண்ணும் அவசியம் அறிந்து வைத்து கொள்ள வேண்டிய ஒரு வரலாறுதான் மர்யம் (அலை) அவர்களின் வாழ்கை வரலாறு ஆகும்!

மர்யம் (அலை) அவர்கள் முஹ்மினான பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாக அல்லாஹ் அல்குர்ஆனில் கூறி உள்ளான்! மேலும் நபி (ஸல்) அவர்கள் உலகின் சிறந்த பெண் மர்யம் (அலை) என்றும் கூறி உள்ளார்கள்! அந்த அளவுக்கு ஒழுக்கமாகவும் இபாதத் ஆகவும் பேணுதலாக வாழ்ந்தவர்கள் தான் மர்யம் (அலை) ஆவார்கள்!

(அல்குர்ஆன் : 66 : 12 | புகாரி : 3432)

அல்லாஹ் அல்குர்ஆனில் மூன்றாவது சூரா ஆல இம்ரான் என்று 200 வசனங்கள் கொண்ட ஒரு சூராவையும் மர்யம் என்கிற 19 வது சூரா அதில் 98 வசனங்கள் கொண்ட சூராவையும் இறக்கி தந்தை மற்றும் பிள்ளை இருவரையும் சிறப்பித்து உள்ளான்!

இது மட்டும் அல்லாமல் பிற சமூகத்தை விட அல்லாஹ்  இம்ரான் (அலை) அவர்களின் வழி தோன்றல்களை சிறப்பித்து உள்ளான்!

(அல்குர்ஆன் : 3 : 33)

மர்யம் (அலை) அவர்கள் இரண்டு நபிமார்களின் வாழ்வுடன் தொடர்ப்பு பட்டவர்கள் ஒன்று ஜக்கரியா (அலை) மற்றொரு நபி யஹ்யா (அலை) ஆவார்கள்!

அல்குர்ஆனில் உள்ள சூராக்களில் 12 சூராக்களில் மர்யம் (அலை) அவர்களின் பெயரை அல்லாஹ் கூறி உள்ளான்!

அல்குர்ஆனில் 35 இடங்களில் மர்யம் (அலை) அவர்களை பற்றி அல்லாஹ் கூறி உள்ளான்! இந்த அளவுக்கு அல்லாஹ் மர்யம் (அலை) பற்றி தனது அல்குர்ஆனில் சிறப்பித்து கூறி உள்ளான்!

இம்ரான் (அலை) மற்றும் அவர்களின் மனைவி ஹன்னா இவர்களின் பிள்ளை தான் மர்யம் (அலை) ஆவார்கள்! ஹன்னா அவர்களுக்கு ஹாரூன் என்று ஆண் பிள்ளையும் இருந்து உள்ளார்கள்!

(நூல் : முஸ்லிம் : 4327)

மர்யம் (அலை) வயிற்றில் இருக்கும் பொழுதே தந்தை இறந்து விட்டார்கள்! இதனால் அவர்களின் மனைவி ஹன்னா அவர்கள் தன்னுடைய கணவன் போன்று தான் பெற்று கொள்ளும் பிள்ளையும் அல்லாஹ்விற்கு சேவை செய்ய கூடிய ஸாலிஹான பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று கர்ப்பமாக இருக்கும் போதே ஒரு நேர்ச்சை செய்தார்கள்!

நான் கர்ப்பமுற்றிருக்கும் இந்தப் பிள்ளையை அல்லாஹ்விற்காக நான் அர்ப்பணம் செய்துவிடுவேன் என்று! ஆனால் அவர்களுக்கு ஆண் பிள்ளைக்கு பதிலாக அல்லாஹ் பெண் பிள்ளையை வழங்கினான்! அவர்கள் நேர்ச்சை செய்ததற்கு மாறாக! இதனால் கவலை கொண்டாலும் பிள்ளை பிறந்தை நினைத்து மகிழ்ச்சி கொண்டார்கள்!

அந்த பிள்ளைக்கு ஹன்னா அவர்கள் மர்யம் (அலை) என்று பெயரிட்டார்கள்! மர்யம் என்றால் வணக்கத்தில் ஈடுப்படுபவள் என்பது அர்த்தம் ஆகும்! மேலும் ஷைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடினார்கள் அல்லாஹ் அவர்களின் துஆவை ஏற்று மர்யம் (அலை) அவர்களை ஷைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாத்தான்!

பிறக்கும் அனைத்து குழந்தையுமே ஷைத்தான் தீண்டுவான் அதனால் தான் குழந்தை பிறந்த  உடனே சத்தமாக அழும்! மர்யம் (அலை) அவர்களை மட்டும் தான் ஷைத்தான் தீண்டாமல் பிறந்த ஒரே குழந்தை ஆவார்கள் !

(அல்குர்ஆன் : 3 : 35 & 37 | புகாரி : 4548)

மர்யம் (அலை) அவர்கள் சற்று வளர்ந்த பின்பு நேர்ச்சை செய்தது போன்றே அல்லாஹ்விற்கு தன்னுடைய பிள்ளை அர்ப்பணம் செய்ய நாடினார்கள்! ஊரில் உள்ள பலர் மர்யம் (அலை) பொறுப்பேற்று வளர்க்க போட்டி போட்டார்கள்!

இதனால் பெயர்கள் எழுதி சீட்டு குலுக்கி போட்டார்கள் அதில் நபி ஜகரிய்யா (அலை) பெயர் வந்தது! மர்யம் (அலை) அவர்களை வளர்க்கும் பொறுப்பை நபி ஜகரிய்யா (அலை) ஏற்று கொண்டார்கள்!

(அல்குர்ஆன் : 3 : 44)

நபி ஜகரிய்யா (அலை) மர்யம் (அலை) இருந்த அதே ஊரில் மஸ்ஜிதுல் அல் அக்ஸா பள்ளியின் பொறுப்புதாரியாக இருந்தார்கள்! இவர்கள் அப்போது வயது மிகவும் அதிகமாக தள்ளாடும் அளவுக்கு இருந்தார்கள்!

ஜகரிய்யா (அலை) மர்யம் (அலை) அவர்களுக்கு தாய் வழி உறவு ஆவர் அதவாது இரண்டு சகோதரிகள் ஒருவரை இம்ரான் (அலை) நிக்காஹ் செய்து கொண்டார்கள் மற்றொரு சகோதரியை ஜகரிய்யா (அலை) நிக்காஹ் செய்து கொண்டார்கள்!

(நூல் : ஃபத் அல்-பாரி : 6 / 68)

நபி ஜகரிய்யா (அலை) அவர்கள் மர்யம் (அலை) அவர்களை பள்ளியின் மேல் பகுதியில் ஒரு கூடாரம் அமைத்து அதில் வைத்து வளர்த்து வந்தார்கள்!

நபி ஜகரிய்யா (அலை) அவர்கள் ஒவ்வொரு முறையும் மர்யம் (அலை) அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்லும் பொழுது எல்லாம் வித விதமான உணவுகளை எல்லாம் காண்பர்கள்! அதவாது அந்த கால பகுதியில் கிடைக்காத பழங்களை எல்லாம் காண்பார்கள்!

யாரும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வர முடியாது இவர்களும் எங்கும் செல்ல மாட்டார்கள்! நாமும் இவர்களுக்கு இதை வழங்க வில்லை பின்பு எப்படி வந்தது என்று ஜகரிய்யா (அலை) அவர்கள் மர்யம் (அலை) அவர்களை இதை பற்றி கேட்டார்கள்!

அவர்களின் பதில் இது அல்லாஹ் எனக்கு கொடுத்தது அவன் தான் நடியோற்க்கு கணக்கு இன்றி உணவு அளிப்பான் என்று கூறினார்கள்!

(அல்குர்ஆன் : 3 : 37)

இதை கேட்ட நபி ஜகரிய்யா (அலை) அவர்களுக்கு அப்போது தான் அல்லாஹ்வின் அருளின் மீது இன்னும் அதிகம் நம்பிக்கை தோன்றியது காரணம் தள்ளாடு வயது ஆகியும் ஜகரிய்யா (அலை) அவர்களுக்கு குழந்தை கிடையாது!

சிறு பிள்ளை மர்யம் (அலை) கேட்டால் கொடுக்கும் அல்லாஹ் நான் நபியாக உள்ளேன் எனக்கு கொடுக்க மாட்டானா என்று உறுதியான நம்பிக்கையில் அதே இடத்தில் குழந்தை பாக்கியம் வேண்டிய துஆ செய்தார்கள்!

அல்லாஹ்வும் நபி ஜகரிய்யா (அலை) அவர்களின் துஆவிற்கு பதில் அளித்தான்! அல்லாஹ் மலக்கு மார்களை அனுப்பி வைத்தான் அந்த நேரத்தில் நபி ஜகரிய்யா (அலை) தொழுது கொண்டு இருந்தார்கள் சத்தமாக மலக்கு மார்கள் அழைத்து அல்லாஹ் உமக்கு பிள்ளை வழங்குவதாக கூறினார்கள்!

மேலும் அந்த பிள்ளைக்கு யஹ்யா என்று பெயர் வைக்க வேண்டும் என்றும் இந்த பெயர் இது வரை யாரும் வைத்தது கிடையாது மேலும் அல்லாஹ் இந்த பிள்ளையை நபியாக தேர்வு செய்து உள்ளான் என்றும் அல்லாஹ் கூறியதாக மலக்கு மார்கள் கூறினார்கள்!

இதை கேட்ட நபி ஜகரிய்யா (அலை) அவர்கள் எப்படி எனக்கு குழந்தை கிடைக்கும் எனக்கு தள்ளாடும் வயது ஆகி விட்டது எனது மனைவியோ மலடி (குழந்தை பெற்று கொள்ள முடியாதவர்கள்) இப்படி இருக்க எப்படி குழந்தை கிடைக்கும் என்று அல்லாஹ்விடம் கேட்டார்கள்!

இதை கேட்ட அல்லாஹ் அது அவ்வாறே நடக்கும் என்று கூறினான்! இதற்கு அத்தாச்சியாக உம்மால் மூன்று நாட்கள் பேச முடியாது என்று அல்லாஹ் கூறினான்! 

(அல்குர்ஆன் : 3 : 38 & 41 | 19 : 7 & 9)

ஈஸா (அலை) பிறப்பு :

மர்யம் (அலை) அவர்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆன பின்பு குடும்பங்களை விட்டு கிழக்கு திசையில் ஒரு இடத்தில் வாழ்ந்தார்கள் அப்போது பிறரிடம் இருந்து தன்னை மறைத்து கொள்ள ஒரு திரையும் அமைத்தார்கள்!

அப்போது ஜிப்ரயில் (அலை) மனித உருவத்தில் மர்யம் (அலை) முன் தோன்றினார் இதை பார்த்ததும் மர்யம் (அலை) உன்னை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்! அல்லாஹ்விற்கு அஞ்ச கூடியவராக இருந்தால் என்னிடம் நெருக்காதீர்கள் என்று கூறினார்கள்!

ஜிப்ரயில் (அலை) தான் ஒரு மலக்கு என்றும் தன்னை அல்லாஹ் தான் அனுப்பி வைத்தான் என்று கூறினார்கள் பின்பு அல்லாஹ் உமக்கு ஒரு ஆண் மகனை வழங்க போகிறான் என்று கூறினார்கள்!

இதை கேட்ட மர்யம் (அலை) அவார்கள் : எந்த ஆணும் என்னை நெருக்காத நிலையிலும்! நான் தவறான பெண்ணாக இல்லாத நிலையிலும் எனக்கு எவ்வாறு பிள்ளை பிறக்கும் என்று கேட்டார்கள்! அதற்கு ஜிப்ரயில் (அலை) அது அவ்வாறே நடக்கும் இது இறைவனுக்கு மிகவும் எளிதானதே என்று கூறி சென்றார்கள்!

(அல்குர்ஆன் : 19 : 16 & 21)

பின்பு மர்யம் (அலை) அவர்கள் கர்ப்பமாக ஆகிய சில காலங்கள் பின்பு ஓரிடத்திற்கு சென்றார்கள்! பின்பு பிரசவ வலி ஏற்பட்டு ஒரு பேரீத்தம் பழம் மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டார்கள்!

பிரசவ வலி காரணமாக இதற்கு முன்னே எனக்கு மரணம் வந்து இருக்க கூடாதா என்று வலியினால் கூற ஆரம்பித்து விட்டார்கள்! அல்லாஹ் மறுபடியும் ஜிப்ரயில் (அலை) அவர்களை அனுப்பி உமக்கு கீழே அல்லாஹ் ஒரு சிறிய ஆற்றை ஏற்படுத்தி உள்ளான்!

நீங்கள் அமர்ந்து இருக்கும் மரத்தின் கிளைகளை உமக்கு அருகில் இழுத்து குலுக்கினாள் உண்ணுவதற்கு ஏற்ற பழங்கள் கிடைக்கும் அதனால் தண்ணீர் அருந்தியும் பழங்களை சாப்பிட்டும் கண் குளிர்ச்சி உடன் இருங்கள் என்று கூறினார்கள்!

உங்களின் இந்த நிலை பார்த்து யாரேனும் ஏதேனும் கேட்டால் நான் அல்லாஹ்விற்கு நோன்பு வைத்து உள்ளேன் இன்றைய நாளில் யாரிடமும் பேச மாட்டேன் என்று கூறி விடுங்கள் என்று ஜிப்ரயில் (அலை) கூறி சென்றார்கள்!

(அல்குர்ஆன் : 19 : 22 & 26)

ஆரம்ப கால பனீ இஸ்ரவேல்களின் நோன்பின் சட்டம் நோன்பு வைத்து விட்டால் யாரிடமும் பேச கூடாது! அதனால் இதை மர்யம் (அலை) அவர்களுக்கு ஜிப்ரயில் (அலை) கூறினார்கள்!

பின்பு குழந்தை பெற்ற பின்பு தன்னுடைய ஊருக்கு வந்தார்கள் கையில் குழந்தை பார்த்த சமூகம் மற்றும் அவர்களின் தாய் நீ விபரீதமான பொருளை கொண்டு வந்து உள்ளாய்! உனது தந்தையும் நானும் தவறாக இல்லாத போது நீ மட்டும் ஏன் இவ்வாறு ஆனாய் என்று கேட்டார்கள்!

மர்யம் (அலை) அவர்கள் தன்னுடைய தயார் கேட்ட கேள்விகளுக்கு எதற்கும் பதில் கூறாமல் குழந்தையை நோக்கி கை காட்டி கேட்டு கொள்ளுங்கள் என்று கூறினார்கள்! அவர்களின் சமூகம் கை குழந்தையிடம் எவ்வாறு பேச முடியும் என்று கேட்டார்கள்!?

அல்லாஹ் குழந்தையாக இருந்து ஈஸா (அலை) அவர்களை பேச வைத்தான்! அவர்கள் கூறினார்கள் நிச்சயமாக நான் அல்லாஹ் உடைய அடியானாக உள்ளேன் அல்லாஹ் எனக்கு வேதம் கொடுத்து உள்ளான் (இன்ஜீல் வேதம்) இன்னும் என்னை நபியாக தேர்வு செய்து உள்ளான்!

நான் எங்கே இருந்தாலும் அல்லாஹ் எனக்கு நலவை வைத்து உள்ளான்!இன்னும் என்னுடைய தாயாருக்கு நன்றி செலுத்த கூடியவனாகவும் அல்லாஹ் எனக்கு ஏவி உள்ளான்! என்னை பெருமை காரனாக ஆக்க வில்லை என்று குழந்தையாக இருந்த ஈஸா (அலை) கூறினார்கள்!

(அல்குர்ஆன் : 19 : 27 & 34)

இதற்கு பின்பு தான் மர்யம் (அலை) தவறான பெண் கிடையாது என்று உணர்ந்து கொண்டார்கள் அவர்களின் சமூகம்!

இதோடு மர்யம் (அலை) அவர்கள் வாழ்கை வரலாறு முடிவு பெறுகிறது இதற்கு பின்பு மர்யம் (அலை) என்ன ஆனார்கள் எங்கு சென்றார்கள் என்பது பற்றி வரலாற்றில் ஆதாரப்பூர்வமான எந்த தகவலும் கிடையாது!

நாம் இதற்கு பின்பு என்ன ஆனார்கள் என்பதை பற்றி ஆராய்ச்சி செய்யவும் அவசியமில்லை! காரணம் மர்யம் (அலை) பற்றி அல்லாஹ் நமக்கு தேவையான அளவுக்கு விரிவாக கூறி உள்ளான்!

படிப்பினைகள் :

1) பெண்களை மதிப்போம் :

அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் ஆரம்ப காலம் முதல் தற்பொழுது உள்ள காலம் வரை பெண்களை கீழ் தரமான ஒன்றாக அல்லது அடிமை போன்று இன்றும் பல இடங்களில் நடத்தி வருகிறார்கள் நவதுபில்லாஹ்!

அல்லாஹ் தன்னுடைய அல்குர்ஆன் கியாமத் வரை இருக்க கூடிய வேதத்தில் பெண்களை பற்றி சிறப்பித்து கூறி உள்ளான்! அதனால் மர்யம் என்ற ஒரு சூராவையே அல்லாஹ் இறக்கி உள்ளான்!

நபி மார்களாக அல்லாஹ் பெண்களை யாரையும் அனுப்ப வில்லை ஆனால் ஆதம் (அலை) அவர்களை தவிர்த்து மற்ற அனைத்து நபி மார்களையும் பெற்றவர்கள் பெண்கள் தான்!

அல்லாஹ் பிள்ளை பாக்கியம் பற்றி கூறும் பொழுது முதலில் பெண் பிள்ளை பற்றியே அல்லாஹ் கூறுகிறான் இரண்டாவது தான் ஆண் பிள்ளை பற்றியே கூறுகிறான்! பெண் பிள்ளை கிடைப்பது ஒரு பாக்கியம் ஆகும்!

(அல்குர்ஆன் : 42 : 49 & 50)

இஸ்லாத்தில் ஆண் குழந்தை விட பெண் குழந்தைகளுக்கு தான் அதிகம் சிறப்பு கூறி உள்ளது!

மூன்று பெண் பிள்ளை அல்லது இரண்டு பெண் பிள்ளைகள் அல்லது ஒரு பெண் பிள்ளை வாலிப வயது வரை ஸாலிஹான பிள்ளைகளாக இரக்கம் காட்டி வளர்த்தால் நிச்சயமாக இவர்களுக்கு சொர்க்கம் கிடைத்து விடும்!

(நூல் : அஹ்மத் : 13729)

பெண் பிள்ளைகள் அல்லது உடன் பிறந்த சகோதரிகளை ஸாலிஹான பெண்களாக பருவ வயது வரை அல்லது மரணிக்கும் வரை வளர்க்க கூடியவர்கள் இரு விரலை சேர்த்தால் எவ்வளவு நெருக்கமாக இருக்குமோ அது போன்று மறுமை நாளில் நபி (ஸல்) அவர்கள் உடன் இருக்கும் பாக்கியம் கிடைக்கும்!

(நூல் : முஸ்லீம் : 5127 | அஹ்மத் : 12041)

மனைவியிடத்தில் நல்ல குணம் உள்ளவராக இருந்தால் மட்டும் தான் நாம் சிறந்து விளங்க முடியும்!

(நூல் : திர்மிதி : 1082)

உலகில் மிக சிறந்த சொத்து ஸாலிஹான மனைவி ஆவள்!

(நூல் : முஸ்லீம் : 2911)

பெண் பிள்ளைகள் வளர்க்கும் பொழுது அவர்களால் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் அதை பொறுத்து நல்ல முறையில் வளர்க்க கூடியவர்களுக்கு அந்த குழந்தைகள் நரகத்தை விட்டு பாதுகாக்கும் திரையாக ஆகி விடும்!

(நூல் : முஸ்லீம் : 5125)

இவ்வாறு சிறப்புகள் நாம் சொல்லி கொண்டே போகலாம் அவ்வளவு சிறப்புகள் உள்ளது பெண்களை பற்றி ஆனால் இவ்வாறு தனி சிறப்புகளை ஆண்களுக்கு கிடையாது! பெண்களுக்கு மட்டுமே உரியது! இன்று பெண் என்றாலே ஒரு தவறான கண்ணோட்டத்தில் அல்லது கேவலமாக பார்க்கிறார்கள்! நவதுபில்லாஹ்!

ஆண்கள் முன் பேச கூடாது ஆண் என்ன கூறினாலும் கட்டுப்பட வேண்டும்! ஆண் என்றால் பாவம் செய்ய கூடியவன் பெண் இதை எல்லாம் விட்டு கொடுத்து தான் போக வேண்டும்! நவதுபில்லாஹ் இப்படி நிறைய அறியாமை கால செய்திகளை எல்லாம் கூறி பெண்களை இன்றும் பல இடங்களில் தாழ்வாகவே நடத்துகிறார்கள்! 

இதனால் இஸ்லாம் இவ்வாறான அறியாமை கால அறியாமைகளை முற்றிலும் போக்கி பெண்களுக்கு நிறைய சலுகை வழங்கி சிறப்புகளையும் கூறி உள்ளது!

2) குழந்தை பிறந்தால் செய்ய வேண்டியவைகள் :
 
கர்ப்பிணியாக இருக்கும் பெண்களுக்கு என்று இஸ்லாம் எந்த ஒரு குறிப்பிட்ட அமல்கள் தொழுகை திக்ர் சூரா என்று எதுவும் கூறவில்லை! ஆனால் இவற்றில் சலுகை அளித்து உள்ளது!

நின்று தொழ முடியவிட்டால் அமர்ந்து தொழுகலாம் நோன்பு இயன்றால் வைக்கலாம் அல்லது விட்டு விட்டு பின்பு களா செய்யலாம் இவ்வாறு நிறைய சலுகை வழங்கி உள்ளது ! கர்ப்பிணி பெண்கள் இந்த காலங்களில் நிறைய அமல் செய்ய வேண்டும்!

வரலாற்றில் தோன்றிய பல மார்க்க அறிஞர்கள் அவர்களின் தயார் கர்ப்பிணியாக இருக்கும் பொழுது செய்த துஆக்கள் செய்த அமல்கள் இன்று அவர்கள் வரலாறு பேசும் அறிஞர்களாக இருக்க ஒரு முக்கிய காரணமாகும்!

ஆனால் இன்றைய சமூகம் அல்லாஹ் பாதுகாக்கணும் எதை எல்லாம் இஸ்லாம் தடை செய்து உள்ளதோ அதை எல்லாம் இந்த காலங்களில் தான் அதிகம் செய்கிறார்கள்! Tv பார்ப்பது இசை கேட்பது போன்று இன்னும் சிலர் காபிர்களின் வழிமுறை ஸீமந்தம் என்று ஒன்றை செய்கிறார்கள்!

இவ்வாறு எல்லாம் மார்க்கம் தடுத்த ஒன்றை செய்தால் இதனால் அல்லாஹ்வின் அருள் கிடைக்குமா அல்லது கோவமா கிடைக்குமா?

ஹன்னா அவர்கள் மர்யம் (அலை) அவர்களை வயிற்றில் இருக்கும் பொழுதே உறுதியான நிய்யத் வைத்தார்கள் தன்னுடைய பிள்ளையும் மார்க்கத்தில் சிறந்து விளக்க வேண்டும் என்று அந்த எண்ணத்துடன் துஆ செய்தார்கள் அல்லாஹ் அவர்களின் பிராத்தனை ஏற்று உலகிலேயே சிறந்த பெண்ணாக மர்யம் (அலை) அல்லாஹ் தேர்வு செய்தான் சுபஹானல்லாஹ்!

குழந்தை பிறந்த பின்பு மர்யம் (அலை) தயார் அவர்களே பெயர் வைத்தார்கள் யாரையுமே சென்று அழைக்க வில்லை! அதே ஊரில் ஜக்கரிய (அலை) நபியாக இருந்தும் ஹன்னா அவர்கள் யாரும் அழைக்காமல் பெயர் வைத்தார்கள்!

ஆனால் இன்று பெயர் வைக்க வேண்டும் என்று சுபஹானல்லாஹ் அதற்கு எவ்வளவு செலவு எவ்வளவு சடங்கு எல்லாம் செய்கிறார்கள் இவ்வாறு எல்லாம் இஸ்லாம் கூறவில்லை!

குழந்தை பிறந்த 7 வது நாளில் தலை முடி இறக்க வேண்டும் வசதி இருந்தால் ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடு பெண் குழந்தைக்கு ஒரு ஆடு குர்பானி கொடுக்க வேண்டும் வசதி இல்லை என்றால் அதற்கு பின்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை ! பின்பு அழகிய அர்த்தம் உள்ள பெயர் வைக்க வேண்டும் மிகவும் எளிதாக இஸ்லாம் நமக்கு கூறி உள்ளது!

(நூல் : அஹ்மத் : 19327 & 6530 & 20704)

3) மர்யம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் செய்த உதவி :

மர்யம் (அலை) சிறு பிள்ளையாக இருந்தாலும் அல்லாஹ்விடம் நம்பிக்கை வைத்து கேட்டார்கள் அல்லாஹ் அவர்களுக்கு எதிர் பார்க்காத உணவுகளை எல்லாம் வழங்கினான்!

அல்லாஹ் அனைத்தையும் கேட்க கூடியவன் பார்க்க கூடியவன் நாம் அவன் மேல் எந்த அளவுக்கு உறுதியான நம்பிக்கை வைக்கிறோமோ அந்த அளவுக்கு நாம் எதிர் பார்க்காத விதத்தில் உதவி செய்வான் அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உடையவன்!

நபி ஜக்கரிய (அலை) நபியாக இருந்தும் குழந்தை இல்லாமல் இருந்தார்கள்! நம்மில் பலர் பிள்ளை பாக்கியம் இல்லை என்று கவலை படுகிறோம் இன்னும் சிலர் நவதுபில்லாஹ் குறையும் கூறுவார்கள்!

அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவன் யாருக்கு எப்போது கொடுக்க வேண்டும் எப்போது கொடுத்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதை அவன் நன்கு அறிந்தவன்!

நம்பிக்கை சரியாக உறுதியாக துஆ செய்தால் சிறு பிள்ளையாக இருந்தாலும் சரி அல்லாஹ் உதவி செய்வான் அதற்கு முதலில் நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு ஈமானை புகட்ட வேண்டும்! அல்லாஹ்வின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் தொழுகை சொல்லி கொடுக்க வேண்டும் வரலாற்றை சொல்லி கொடுக்க வேண்டும்! இதை நம்மில் எத்தனை பேர் கடைப்பிடுகிறோம்?

ஆனால் இன்று அல்லாஹ் பாதுகாக்கணும் சிறு வயதிலேயே மொபைல் வாங்கி கொடுத்து விட்டு அல்லது பிள்ளை அழுகிறது என்று மொபைல் வைத்து கொடுத்து விடுகிறார்கள் இதனால் சிறு பிள்ளை உள்ளத்தில் அதன் தாக்கம் ஆழமாக பதிந்து விடுகிறது அதனால் அதன் மீது அதிகம் ஈர்ப்பு உண்டாகி பின்பு அதுவே வழிகேட்டு போக காரணமாக அமைகிறது!

4) அந்நிய ஆண்களை விட்டு ஒதுக்கி இருப்பது :

அல்லாஹ் பாதுகாக்கணும்! இன்று சர்வ சாதாரணமாக அந்நிய ஆண்கள் உடன் சகோதரன் அல்லது கணவன் போன்று பழகி கொண்டு உள்ளார்கள்! கேட்டால் நாங்கள் நல்ல நோக்கத்தில் பழகி கொண்டு உள்ளோம் என்று கூறுகிறார்கள் இது தெளிவான ஹராம் ஆகும்!

அல்லாஹ் தன்னுடைய அல்குர்ஆன் வேதத்தில் ஒவ்வொரு உறவை பற்றியும் கூறி இவர்கள் மஹரமான உறவு இவர்கள் மஹ்ரம் இல்லாத உறவு என்று பட்டியில் ஈட்டு கூறி உள்ளான்! இதை நாம் மீறினால் நிச்சயமாக அல்லாஹ் நம்மை பிடிப்பான்!

(அல்குர்ஆன் : 4 : 23)

மர்யம் (அலை) அவர்களிடம் ஜிப்ரயில் (அலை) மனித உருவத்தில் வந்தார்கள் மலக்குகள் பொதுவாக மிகவும் அழகாக இருப்பார்கள் மனித உருவத்தில் ஆனால் மர்யம் (அலை) அவர்களிடம் ஜிப்ரயில் (அலை) வந்த உடனே அவர்கள் அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள் என்னிடம் நெருக்க வேண்டாம் என்று கூறினார்கள்!

இதான் தக்வா மறைவான இடத்தில் யாரும் பார்க்க முடியாத சூழ்நிலை பாவம் எளிதாக செய்து விட முடியும் என்றால் அல்லாஹ்விற்காக அதை விட்டு ஒதுக்கி இருப்பது ஆகும்! பெண்களுக்கு இந்த ஆயத்தில் மிகவும் ஆழமான படிப்பினை உள்ளது!

ஆனால் இன்றைய பெண்கள் : அந்நிய ஆணாக இருந்தாலும் சரி அழகாக அல்லது தன்னை கவரும் விதத்தில் பேசினால் ஆடை அணிந்தால் போதும் எளிதாக பாவத்தில் விழுந்து விடுகிறார்கள் அல்லாஹ் பாதுகாத்த ஸாலிஹானா பெண்ணை தவிர!

இன்னும் சில பெண்கள் மார்க்கம் அறிந்து அல்லது மார்க்கம் சார்ந்த படிப்புகள் படித்து இருந்தால் மேலே உள்ளது போன்று அல்லது இவர்களை போன்று மார்க்க சார்ந்த இருக்க கூடியவர்களிடம் எளிதாக விழுந்து விடுகிறார்கள் அல்லாஹ் பாதுகாத்த ஸாலிஹான பெண்களை தவிர!

இதனால் நஷ்டம் கவலை பிரச்சனை அனைத்துமே பெண்ணிற்கு மட்டும் தான் ஏற்படும் அந்த ஆணுக்கு அல்ல என்பதை உள்ளத்தில் ஆழமாக பதிய வைத்து கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு பிறந்த நாளில் இருந்து இன்று வரை அனைத்தையும் உங்களுக்கு ஏற்றால் போல் அழகாக கொடுத்து உள்ளான் நீங்கள் அவன் மீது நம்பிக்கை வைத்து பொறுமையாக இருந்தால் ஸாலிஹான வாழ்கை துணையை நிச்சயமாக அல்லாஹ் கொடுப்பான்!

5) அல்லாஹ் ஆற்றல் மிக்கவன் :

மர்யம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் குழந்தை வழங்க போகிறான் என்றதும் எனக்கு எவ்வாறு பிள்ளை பிறக்கும் என்று ஒரு காரணத்தை தேடினார்கள் என்னை எந்த ஆணும் தீண்ட வில்லை நான் தவறான பெண்ணும் கிடையாது பின்பு எவ்வாறு குழந்தை பிறக்கும் என்று கேட்டார்கள்!

நம்மில் பலரும் இவ்வாறு தான் ஒரு கஷ்டம் ஒரு சோதனை என்றதும் நாம் சிந்தித்து பார்ப்போம் இதில் இருந்து தப்பிக்க எந்த வழியும் கிடையாது என்று அல்லது துஆ செய்தால் கூட அல்லாஹ் எப்படி உதவி செய்வான் இந்த சூழ்நிலையில் என்று அல்லாஹ்வின் ஆற்றல் மீது நம்மில் பலர் நம்பிக்கை இழந்து விடுகிறார்கள்!

அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன் ஒன்றை செய்வதற்கு அல்லாஹ்விற்கு எந்த காரணமும் அல்லது எந்த ஒரு பொருளும் தேவை கிடையாது! எதுவும் இல்லாமலும் அல்லாஹ் நாம் எதிர் பார்க்காத விதத்தில் உதவி செய்வான்!

நாம் நம்பிக்கையுடன் அவனை சார்ந்து அவன் தடுத்தவற்றை விட்டு விலகி இருந்தால் நாம் சிந்தித்து கூட பார்க்க வழியில் அல்லாஹ் நமக்கு உதவி செய்வான் அன்று தெரியும் நாம் இவ்வளவு நாட்கள் செய்த பிராத்தனை அல்லாஹ் வீணாக்க வில்லை என்று!

6) கவலை மறந்து விடுங்கள் :

மர்யம் (அலை) அவர்களுக்கு முதல் முறை பிரசவ வலி ஏற்பட்டதும் அவர்கள் இதற்கு முன்பு எனக்கு மரணம் வந்து இருக்க கூடாதா என்று வலியில் கூறினார்கள்!

அல்லாஹ் இவர்களுக்கு ஒரு சிறு ஆற்றை உருவாக்கி மேலும் பேரீத்தம் பழத்தை உண்ண செய்து மகிழ்ச்சியாக இருக்க சொன்னான் தவிர வலியை பற்றி கூறவில்லை அதை அல்லாஹ் விட்டு மற்றதை கூறினான் காரணம் கவலையை மறந்து இதை சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருங்கள் என்று!

நம்மிடம் இவ்வளவு குறை இல்லை நம்மிடம் இது இல்லை நமக்கு மட்டும் ஏன் இவ்வாறு என்று நினைத்து கஷ்டம் படுவதை விட அல்லாஹ் நமக்கு கொடுத்த நலவுகளை நினைத்து மகிழ்ச்சியாக இருங்கள்! அவன் கொடுத்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துக்கள் இதை நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் இருப்பதையும் எடுத்து விடுவான்!

பிரசவ வலி சுபஹானல்லாஹ் இதை ஒரு ஆண் கூட தாங்கி கொள்ள முடியாது! பிரசவ வலி தாங்கி கொள்ளும் ஆற்றலை அல்லாஹ் பெண்களுக்கு மட்டும் வழங்கி உள்ளான்! பிரசவ வலி என்பது வாழ்விற்கும் மரணத்திற்கும் இடைப்பட்ட போராட்டம் ஆகும்! எவ்வளவு பெண்கள் இதனால் இறந்தும் உள்ளார்கள்!

ஆனால் பல ஆண்களை இதை பற்றி அறிந்து வைத்து கொள்ளாத காரணத்தினால் அல்லது இன்று சமூககம் மார்க்க விளக்கம் இல்லாத காரணத்தினால் 6 அல்லது 7 மாதங்களில் தாய் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள் அந்த பெண்ணை அந்த பெண்ணும் எழுந்து செல்ல நடக்க அமர்ந்து கொள்ள என்று அனைத்திற்கும் சிரமம் பட வேண்டும்! 

அந்த ஆண் வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பான் மருத்துவ செலவு கூட அனைத்தும் பெண் வீட்டார் தான் பார்க்க வேண்டும் என்று எதோ வஹீ இறங்கியது போன்று பெரும்பாலானா இடங்களில் இதை பின் பற்றி வருகிறார்கள்! இது முற்றிலும் தவறான செயல் ஆகும்!

பெண் கர்ப்பிணியாக இருந்தால் அந்த காலத்தில் அவளின் கணவன் தான் உடன் இருந்து அனைத்தையும் பார்க்க வேண்டும் அவளுக்கு தேவையானா அனைத்தையும் அவன் தான் செலவு செய்ய வேண்டும் உடன் இருந்து பார்த்தால் தன்னுடைய மனைவி எவ்வளவு சிரமம் படுகிறார்கள் என்பதை அவன் புரிந்து கொள்ளுவான்!

இன்றும் பல மருத்துவ மனைகளில் பெற்ற தாயை விட கணவனை தான் பிரசவ நேரத்தில் உடன் இருக்க கூறுகிறார்கள் அவள் படும் கஷ்டத்தை உடன் இருந்து பார்த்தால் தான் கணவன் மனைவியை ஏசுவது அடிப்பது திட்டுவது என்று எதையும் செய்ய மாட்டான்!

பலர் இதை தவிர்த்து விடுவதால் தான் பிள்ளை பிறந்த சில நாட்கள் அல்லது மாதத்திலேயே பிரச்சனை ஏற்பட்டு தலாக் கொடுத்து விடுகிறார்கள் பிள்ளை கூட தேவை இல்லை என்று கூறுகிறார்கள் அல்லாஹ் பாதுகாக்கணும்!

7) அல்லாஹ்வை சார்ந்து இருக்க கூடியவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் போதுமானவன்!

மர்யம் (அலை) அவர்கள் ஸாலிஹான பெண்ணாக இருந்தும் அவர்கள் கையில் பிள்ளையை கண்டதும் அவரின் தயார் மற்றும் சமூகம் தவறாக பேசியது!

இன்றும் நம்மில் பலர் மார்க்கத்தை பின் பற்றி வாழும் பொழுது நீ ஏன் இவ்வாறு உள்ளாய் அல்லது நம்மிடம் உள்ள குறைகளை வைத்து தவறாக பேசுவார்கள் ஆனால் நாம் இதை எல்லாம் பொறுப்படுத்தாமல் இருந்தால் அல்லாஹ் நமக்கு நாம் எதிர் பார்க்காத விதத்தில் உதவி செய்வான்!

மர்யம் (அலை) அவர்களை அனைவரும் தவறாக பேசும் பொழுது அவர்கள் சிறு பிள்ளையை நோக்கி கை காட்டினார்கள் யாரும் எதிர் பார்க்க விதத்தில் அல்லாஹ் தொட்டியில் இருந்த அந்த குழந்தையும் பேச வைத்தான்!

அல்லாஹ்வை சார்ந்து இருக்க கூடியவர்கள் ஒன்றை கூறினால் அல்லாஹ் அதை அப்படியே நிறைவேற்றுவான்! மர்யம் (அலை) அவர்கள் தன்னுடைய சமூகம் இவ்வாறு பேசுகிறது என்று வருத்தம் படாமல் துஆவும் செய்யாமல் நேரடியாக பிள்ளையை நோக்கி கை காட்டினார்கள் அல்லாஹ் தன்னை சார்ந்து இருக்க கூடியவர்களை ஒரு போதும் பிறரிடம் கேவலப்பட விடமாட்டான் யார் முன்னும் தலை குனியும் அளவுக்கு விடவும் மாட்டான்!

-அல்லாஹ் போதுமானவன் 
Previous Post Next Post