இமாம் இப்னுஸ் ஸுன்னி ரஹி தொகுத்தளித்த عمل اليوم والليلة

ஹிஜ்ரி 280 ல் ஈராக்கிய மாகாணமான தைனவரில் பிறந்த  இமாம் இப்னுஸ் ஸுன்னி என்றழைக்கப்படும் அபூபக்கர் அஹ்மத் அத்தீனூரி அல்ஹாஷிமீ (ரஹி) அவர்கள் பஸரா, கூஃபா, பக்தாத் எகிப்து என பல பிரதேசங்கள் சென்று ஹதீஸைத் தேடித்தேடிய மாமாமைதகளில் ஒருவர்.

கூடவே சிறந்த ஹதீஸ்கலை ஆசிரியர்களிடம் பாடம் படித்த ஆளுமைகளில் ஒருவர்.

பித்ஆவைப் புறம் தள்ளி, சுன்னாவைப் பின்பற்றி நடந்ததனால் அதனைப் பிரதிபலிக்கும் முகமாக 
இப்னுஸ்ஸுன்னி என்ற பெயரில் அழைக்கப்பட்ட ஒரு சுன்னாவாதியாகும்.

இமாம் நஸயீ (ரஹி) அவர்களின் நூலான "அல்முஜ்தபா" என அறியப்படும்
السنن الصغرى 
"அஸ்ஸுனனுஸ் ஸுக்ரா" நூலை அறிவித்த பெருந்தகை. 

இவர்கள் 775 ஹதீஸ்கஸ்களைத் தேர்வு 
عمل اليوم والليلة
"அன்றாட அமல்கள்" என்ற தலைப்பில் தொகுத்தளித்த மேற்படி நூலில் இடம் பெறும் ஹதீஸ்களை ஸஹீஹானது, 
சாதாரண பலவீனம் 
கடுமையான பலவீனம், 
இட்டுக்கட்டப்பட்டது என ஹதீஸ்கலை விதிகளைப் பேணி ஹதீஸ் திறணாய்வின் மூலம் மர்ஹூம் 
سليم الهلالي 
என்ற அறிஞரால் பகுப்பாய்வு செய்யப்பட்டு 

عجالة الراغب المتمني في تخريج كتاب " عمل اليوم والليلة" لابن السني
எனத் தலைப்பிட்டு  அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது.

குறிப்பு
-----------
இதில் இடம் பெறும் திக்ருகளும் சரி, புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களிலும் இடம் பெறும் அன்றாட "திக்ர்" மற்றும் பிரார்த்தனைகளும் சரி
அல்லது இமாம் நவவி ரஹி அவர்களின் 
الأذكار 
என்ற நூலில் இடம் பெறும் திக்ர் துஆக்களும் சரி,
சூஃபிகள், கப்ரு கட்டி வணங்குவோர் தமது ஷேகு நாயகங்கள், தர்கா அவ்லியாக்கள் என்போர் மீது பொய்யுரைத்து புனைந்து ஓதும் ராதிபு, மனாகிபு  முறைகளுக்கு நேர் எதிரான இறைத் தூதர் கற்றுத் தந்த திக்ருகளாகும். 

ஆகவே இமாம்கள் தொகுத்தளித்த இது போன்ற திக்ர் துஆக்களையே நாமும் மணனம் செய்து அன்றாட வாழ்வில் ஓதி வர கடமைப்பட்டுள்ளோம்.

எம்.ஜே. எம். ரிஸ்வான் மதனி
21/05/2022
أحدث أقدم