மரணத்தின் பின் மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு இறைவிசாரணைக்காக எழுப்பப்படும் ஒரு நாளை மறுமைநாள் என இஸ்லாம் அடையாளப்படுத்துகின்றது.
குர்ஆனில் இந்த நாள் பற்றி மிகத் தெளிவாக பேசப்பட்டுள்ளது.
பூகம்பங்கள் அதிகமதிகம் ஏற்படுவதும் மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி).
மறுமை நிகழ சிறிய பெரிய அடையாளங்கள் நிகழ்ந்தாக வேண்டும். பெரியவைகள் குறைவானதும், அதிசயம் நிறைந்த அடையாளங்களாகும் !
ஆனால் சிறியவைகள் அதிகாமனைவயாகும் .
கிட்டத்தட்ட அவை அனைத்தும் முழுமையாக நடந்து விட்டன என்கின்றனர் அறிஞர்கள்.
பெரிய அடையாளங்களில் ஒன்று நிழத்தொடங்கியதும் மற்றது ஒன்றன் பின் ஒன்றாக அவசர அவசரமாக நடைபெற்று முடிந்து விடும் என நபிமொழி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
جاء في صحيح مسلم عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ الْغِفَارِيِّ، قَالَ: اطَّلَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْنَا وَنَحْنُ نَتَذَاكَرُ، فَقَالَ: «مَا تَذَاكَرُونَ؟» قَالُوا: نَذْكُرُ السَّاعَةَ، قَالَ: " إِنَّهَا لَنْ تَقُومَ حَتَّى تَرَوْنَ قَبْلَهَا عَشْرَ آيَاتٍ -فَذَكَرَ- الدُّخَانَ، وَالدَّجَّالَ، وَالدَّابَّةَ، وَطُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا، وَنُزُولَ عِيسَى ابْنِ مَرْيَمَ -صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ-، وَيَأَجُوجَ وَمَأْجُوجَ، وَثَلَاثَةَ خُسُوفٍ: خَسْفٌ بِالْمَشْرِقِ، وَخَسْفٌ بِالْمَغْرِبِ، وَخَسْفٌ بِجَزِيرَةِ الْعَرَبِ، وَآخِرُ ذَلِكَ نَارٌ تَخْرُجُ مِنَ الْيَمَنِ، تَطْرُدُ النَّاسَ إِلَى مَحْشَرِهِمْ ". [صحيح مسلم ح (2901)].
ونارٌ تخرجُ من قعرِ عدنَ تسوقُ النَّاسَ أو تحشرُ النَّاسَ فتبيتُ معَهم حيثُ باتوا وتقيلُ معَهم حيثُ قالوا
الراوي : حذيفة بن أسيد الغفاري | | المصدر : صحيح الترمذي /المحدث : الألباني].
ஹுதைஃபா பின் உஸைத் அல்கிஃபாரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நாங்கள் பலர் சேர்ந்து ஒருவருக் கொருவர் நினைவுபடுத்திக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள்.
அப்போது நீங்கள் எதை நினைவுபடுத்துகின்றீர்கள் என வினவினார்கள். மறுமை பற்றி நினைவு கூர்கின்றோம் என நாம் கூறியதும் ;
நபி (ஸல்) அவர்கள் மறுமை நாளின் பத்து விஷயங்களை நீங்கள் பார்க்காத வரை மறுமை நிகழாது எனக் குறிப்பிட்டு விட்டு :
1 – புகை மூட்டம்
2 – தஜ்ஜால்
3 – (பூமியில் இருந்து வரும் அதிசயப்) பிராணி
4 – சூரியன் மேற்கிலிருந்து உதயமாகுவது,
5 – ஈஸா (அலை) இறங்கி வருவது,
6 – யஃஜுஜ், மஃஜுஜ் (வெளிப்படுவது),
7 – கிழக்கே ஒரு பூகம்பம்
8 – மேற்கே ஒரு பூகம்பம்
9 – அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்,
10 – எமனில் இருந்து மக்களை விரட்டிச் செல்லும் தீப்பிளம்பு எனக் கூறினார்கள்.( நூல்: முஸ்லிம்- )
திர்மிதியில் இடம் பெறும் வேறு அறிவிப்பில்: "எமனில் உள்ள அத்ன் நகரின் ஆழமான பகுதியில் இருந்து புறப்படும் பாரிய தீப்பிளம்பு. அது மக்களை விரட்டிச் சென்று அவர்டளை ஒன்று சேர்க்கும். அவர்கள் இரவில் தூங்கும் போதும், பகலில் ஓய்வெடுக்கும் போதும் அதுவும் அவர்களுடனேயே தங்கி பின், அவர்களை அது விரட்டிச் செல்லும் என இடம் பெற்றுள்ளது.
-எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி