இரு கரங்களையும் தலைகீழாகப் புரட்டியும் பிரார்த்திக்க வேண்டும்.

வரட்சி,  துயரங்கள் போன்ற சோதனைகள்
அகன்று, செழிப்பு ஏற்பட பிரார்த்திக்கின்ற போது ஒருவர் தனது இரு கருத்தையும் மணிக்கட்டுப் பக்கமாக புரட்டி, வானின் பக்கம் உயர்த்தியவாறு துஆ கேட்பது. நபிவழிவழியாகும்.

இது முஸ்லிம் மக்களால் ஸஹர் அதானைப் போன்று
அமுலில் இல்லாத நபிவழிகளில் ஒன்று என அறிஞர்கள் அடையாளப்படுத்துவார்கள் .

இமாம் நவவி ரஹி அவர்கள் இது பற்றிக் கருத்துக் கூறுகின்ற போது பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

‏قال النووي رحمه الله :
‏" قال جماعة من أصحابنا وغيرهمْ :  السنة في كُل دعاء لرفع البلاء ، كالقحط ونحوه ، 
أَنْ يرفع يديه ويجعل ظهر كفيه إِلَى السَّمَاءِ،  وَإِذَا دَعَا لِسُؤَالِ شَيْءٍ وَتَحْصِيلِهِ ، جَعَلَ بَطْنَ كَفَّيْهِ إلى السماء " انتهى من " شرح النووي على مسلم " (6/ 190) .
வரட்சி மற்றும் அது போன்ற துயரங்களின் போது பிரார்த்திக்கின்ற ஒருவர் தனது இரு கரங்களையும்  உயர்த்தி, தனது இரு மணிக்கட்டுகளையும் வானத்தின் பக்கமாக ஆக்கி பிரார்திப்பதும், ஏதாவது நலவை வேண்டி துஆ கேட்கிற போது உள்ளங்கையை வானின் பக்கமாக காட்டி பிரார்த்தனை செய்வதும் நபிவழியாகும்.

(நூல் ஷரஹுன் நவவி அலாமுஸ்லிம்)

அரபு முக நூல் ஒன்றில் இருந்து..

-எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி

Previous Post Next Post