முஆவியா (رضي الله عنه) அவர்களுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களுக்கு மறுப்பு.

1) ஷியாக்கள் பின்வரும் புகாரியின் ஹதீஸை குறிப்பிடுகிறார்கள்

இக்ரிமா(ரஹ்) அறிவித்தார்.

இப்னு அப்பாஸ்(رضي الله عنه) என்னிடமும் அவரின் மகன் அலீயிடமும், ‘அபூ ஸயீத்(رضي الله عنه) அவர்களிடம் சென்று அவரின் ஹதீஸைச் செவிமடுங்கள்’ என்று கூறினார்கள். எனவே, அபூ ஸயீத்(رضي الله عنه) அவர்களும் அவர்களின் (பால்குடிச்) சகோதரரும் தங்கள் தோட்டம் ஒன்றுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது நாங்களிருவரும் சென்றோம். அபூ ஸயீத்(رضي الله عنه) எங்களைப் பார்த்தவுடன் முழங்கால்களைக் கைகளால் கட்டிப்பிடித்தபடி அமர்ந்தார்கள். பிறகு கூறலானார்கள்; நாங்கள் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலின் செங்கற்களை ஒவ்வொன்றாக (சுமந்து) கொண்டு சென்றோம். அம்மார் இரண்டிரண்டு செங்கற்களாக (சுமந்து) கொண்டு சென்றார். அப்போது அவரை நபி(ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அவரின் தலையிலிருந்து புழுதியைத் துடைத்துவிட்டு, ‘பாவம் அம்மார்! அம்மாரை ஒரு கலகக் கூட்டத்தினர் கொன்று விடுவார்கள். அம்மார், அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்க, அந்தக் கூட்டத்தினர் அவரை நரக நெருப்பின் பக்கம் அழைத்துக் கொண்டிருப்பார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி : 2812.

ஷியாக்களின் வாதம் : அந்த கூட்டத்தினர் அவரை நரக நெருப்பின் பக்கம் அழைத்துக் கொண்டு இருப்பார்கள் என்று ஹதீஸில் வருகிறது. அந்த  “கூட்டத்தினர் நரகில் இருப்பார்கள்” என்று அர்த்தம். “அவர்கள்” அவரை நரக நெருப்புக்கு சபிப்பார்கள்.

வாதத்திற்கு பதில்:

a) பத்ஹுல் பாரி எனும் நூலில் கூறப்படுகிறது:

அம்மார் மற்றோரு கூட்டத்தை சொர்க்கத்தை நோக்கி அழைத்தார்கள் என்பதற்கு அர்த்தம் அவர் சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் காரணத்திற்காக அவர்களை அழைத்தார். அவர் ஆட்சியாளர்க்கு கீழ்ப்படிய அழைப்பு விடுத்தார். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. இன்னும் அவர்கள் தான் சொர்க்கத்திற்கு அழைப்பு விடுத்தார்கள் என்று நினைத்ததால் மன்னிக்கபடுவார்கள். இவ்விசயத்தில் ஒரு  இஜ்திஹாத் உள்ளது.

b) அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

மேலும், இறைநம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் போரிட நேர்ந்தால் அவர்களிடையே சமரசம் செய்து வையுங்கள். பிறகு, அவர்களில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரிடம் வரம்புமீறி நடந்து கொண்டால், வரம்புமீறிய குழுவினருடன் அவர்கள், அல்லாஹ்வின் கட்டளையின்பால் திரும்பும் வரை அவர்களுடன் போர் புரியுங்கள். அப்படி அவர்கள் திரும்பிவிட்டால், அவர்களிடையே நீதியுடன் சமரசம் செய்து வையுங்கள்; இன்னும் நீதி செலுத்துங்கள். திண்ணமாக, அல்லாஹ் நீதிசெலுத்துபவர்களை நேசிக்கின்றான்.
(சூரா  ஹுஜுராத் : 49:9)

கருத்து:

அல்லாஹ் காஃபிர்கள்  என்று கூறாதவர்களை ஷியாக்கள் காஃபிர்கள் என்று கூற என்ன அதிகாரம் உள்ளது,  வரம்புமீறுதல் என்பது குஃப்ர்  ஆகாது. மேலும் முஆவியாவும் அவரை சேர்ந்தவர்களும் இஜ்திஹாதின் அடிப்படையில் தான் முடிவு செய்தனர். மேலும் மேற்கண்ட ஹதீஸை ஸஹாபாக்கள் அறிந்திருந்தனர், இருந்தும் முஆவியாவை காஃபிர்  என்று கூறவில்லை

c) ஹஸன் பஸரீ(ரஹ்) அறிவித்தார்.

அலீ(رضي الله عنه) அவர்களின் மகனான ஹஸன்(رضي الله عنه), முஆவியா(رضي الله عنه) அவர்களை மலைகளைப் போன்ற (பிரம்மாண்டமான) படையணிகளுடன் எதிர்கொண்டார்கள். (அவற்றைக் கண்ட முஆவியா(رضي الله عنه) அவர்களின் ஆலோசகர்) அம்ர் இப்னு ஆஸ்(رضي الله عنه), ‘ எதிரிகளை கொள்ளாமல் திரும்பிச் செல்லாத போற்படையை நான் பார்க்கிறேன் ” என்று கூறினார்கள்.

அவரைவிட சிறந்தவராக இருந்த  முஆவியா(رضي الله عنه) ‘ அம்ரே! இவர்கள் அவர்களையும் அவர்கள் இவர்களையும் கொன்று விடுவார்களாயின் மக்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்க என்னிடம் வேறு யார் இருப்பார்கள்? (என் குடி) மக்களின் பெண்களைப் பாதுகாக்க என்னிடம் (வேறு) யார் இருப்பார்கள்? அவர்களின் குழந்தைகளை பாதுகாக்க என்னிடம் (வேறு) யார் தான் இருப்பார்கள்?’ என்று பதிலளித்தார்கள். எனவே, ஹஸன்(رضي الله عنه) அவர்களிடம் குறைஷிகளில் பனூ அப்தி ஷம்ஸ் கிளையாரைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(رضي الله عنه) அவர்களையும், அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னி குரைஸ்(رضي الله عنه) அவர்களையும் அனுப்பி, ‘நீங்கள் இருவரும் இந்த மனிதரிடம் சென்று விபரத்தை எடுத்துரைத்துப் பேசி, அவரிடம் (சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி) கோருங்கள்’ என்று கூற, அவ்விருவரும் (அவ்வாறே) ஹஸன்(رضي الله عنه) அவர்களிடம் சென்று, அவர்களின் அறைக்குள் நுழைந்து பேசினார்கள்; ஹஸன்(رضي الله عنه) அவர்களிடம் (முஅவியா(رضي الله عنه) அவர்களின் தூதை எடுத்துச்) சொல்லி (அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வரும்படி) கோரினார்கள். அதற்கு அவ்விருவரிடமும் ஹஸன்(رضي الله عنه), ‘நாங்கள் அப்துல் முத்தலிபின் மக்கள்; இந்த செல்வத்தை (எங்கள் தலைமைத்துவத்தின் காரணத்தால்) பெற்றிருக்கிறோம். (அதை எங்கள் குடிமக்கள், படைவீரர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே செலவு செய்து வருகிறோம்.) இந்தச் சமுதாயமோ தன் இரத்தத்தை சிந்திப் பழகிவிட்டது’ என்று கூறினார்கள். இதற்கு அவ்விருவரும், ‘முஆவியா(رضي الله عنه) உங்களுக்கு இவ்வளவு (மானியம்) தருவதாகக் கூறுகிறார்கள்; மேலும் (சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி) உங்களிடம் கோருகிறார்கள்’ என்று கூறினர். அதற்கு ஹஸன்(رضي الله عنه), ‘இந்த விஷயத்தில் எனக்குப் பொறுப்பு யார்?’ என்று கேட்க, அவ்விருவரும் ‘இதில் உங்களுக்கு நாங்கள் பொறுப்பு’ என்று கூறினர்.

ஹஸன்(رضي الله عنه) கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவர்கள், ‘நாங்கள் உங்களிடம் இதற்குப் பொறுப்பேற்கிறோம்’ என்றே கூறினார்கள். இறுதியாக, ஹஸன்(رضي الله عنه), முஆவியா(رضي الله عنه) அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். மேலும், ‘(ஒரு முறை) இறைத்தூதர் மிம்பர் மீது இருக்கா, அவர்களின் ஒரு பக்கத்தில் ஹஸன் இப்னு அலீ(رضي الله عنه) அமர்ந்திருக்க, நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களை நோக்கியும், மற்றொரு முறை ஹஸன்(رضي الله عنه) அவர்களை நோக்கியும் (உரை நிகழ்த்திய வண்ணம்), ‘ என்னுடைய இந்த புதல்வர் (கண்ணியத்திற்குரிய) தலைவராவார். முஸ்லிம்களின் இரண்டு பெரும் கூட்டத்தாரிடையே இவரின் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்து வைக்க விரும்புகிறான்’ என்று கூறிக் கொண்டிருந்ததை பார்த்தேன்’ என்று அபூ பக்ரா(رضي الله عنه) கூறியதை கேட்டேன்.

ஸஹீஹ் புகாரி : 2704.
 
குறிப்பு:

முஆவியா(رضي الله عنه) மற்றும் ஹஸன்(رضي الله عنه) முஸ்லிம்களில் மிக சிறந்த தலைவர்களாக இருந்தார்கள் என்பதை இந்த ஆதாரம் மூலம் அறியலாம்.


2) இஷ்ஹாக் இப்னு ராஹவைஹ்(ரஹ்) கூற்றை ஷியாக்கள் கூறுகிறார்கள்:

الأصم حدثنا أبي سمعت ابن راهويه يقول لا يصح عن النبي صلى الله عليه وسلم في فضل معاوية شيء

நபி ﷺ அவர்களிடம் இருந்து முஆவியா(رضي الله عنه) அவர்களை பற்றி எவ்வித ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் இல்லை என்று இஷ்ஹாக் இப்னு ராஹவைஹ்(ரஹ்) கூறுகிறார்கள்.

இமாம் தஹபீ (ரஹ்) உடைய ஸியார் அலாமின் நுபுலா-3/132

பதில்:

a) யாகூப் இப்னு யூசுப் அபு ஃபைசல் நிஸாபுரி என்பவர் மஜ்கூல்(யாரென அறியப்படாதவர்) அதனால் இது நிரூபிக்கப்படவில்லை

b) இப்னு அஸகீர் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது

وأصح ما رُوي في فضل معاوية حديث أبي حمزة عن ابن عباس أنه كاتِبُ النبيِّ منذ أسلم، أخرجه مسلم في صحيحه. وبعده حديث العرباض: اللهم علمه الكتاب. وبعد حديث ابن أبي عَميرة: اللهم اجعله هاديا مهديا

முஆவியா(رضي الله عنه) அவர்களது சிறப்புகள் பற்றி அறிவிக்கப்பட்ட செய்திகளில் மிக ஆதாரபூர்வமான செய்தி அது இப்னு அப்பாஸ்(رضي الله عنه) அவர்கள் அறிவிக்க கூடிய முஆவியா(رضي الله عنه) இஸ்லாத்தை ஏற்ற நாளிலிருந்து வஹீ எழுதுபவராக இருந்தார், இது முஸ்லிம்(ரஹ்) தனது ஸஹீஹ் முஸ்லிம் நூல் பதிவு செய்துள்ளார்கள் . பிறகு,அல் இர்பாத்(رضي الله عنه) அறிவிக்க கூடிய முஆவியாவர்க்கு குர்ஆனை கற்றுக் கொடுப்பாயாக என்று வரும் ஹதீஸ் பிறகு இப்னு அபி உமைரா(رضي الله عنه) அறிவிக்க கூடிய யா அல்லாஹ் முஅவியாவை நேர்வழி காட்டுபவராகவும், நேர்வழி பெற்றவராகவும் ஆக்குவாயாக. அவருக்கு நேர் வழி காட்டுவாயக. அவர் மூலம் (மக்களுக்கு) நேர்வழிகாட்டுவாயாக.

தாரீக் அல் திமீஸ்கீ-(59/106)

இமாம் அல்பானி (ரஹ்) ஆதாரபூர்வமான செய்தி என்று தனது ஸில்ஸிலாத்து ஸஹீஹா-3227 கூறுகிறார்கள்.


3) முஆவியா(رضي الله عنه) அவர்களை வெறுப்பவர்கள் ஸஹீஹ் முஸ்லீம் ஹதீஸ் கூறுகிறார்கள் அது பின்வருமாறு:

இப்னு அப்பாஸ் (رضي الله عنه) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். உடனே நான் (ஓடிச் சென்று) ஒரு கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (செல்லமாக) என் தோள்களுக்கிடையே ஒரு தட்டு தட்டிவிட்டு, “நீ போய் முஆவியா (பின் அபீசுஃப்யான்) அவர்களை என்னிடம் வரச்சொல்” என்று கூறினார்கள். (அவர் நபி (ஸல்) அவர்களின் எழுத்தராக இருந்தார்.)

அவ்வாறே நான் சென்றுவிட்டு வந்து, “அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்” என்று சொன்னேன். பிறகு (மீண்டும்) என்னிடம், “நீ போய் முஆவியா அவர்களை என்னிடம் வரச் சொல்” என்று கூறினார்கள். மீண்டும் நான் சென்றுவிட்டு வந்து, “அவர் (இன்னும்) சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்” என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ், அவருடைய வயிறை நிரப்பாமல் விடட்டும்!” என்று சொன்னார்கள்.

அவற்றில், முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நான் (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) உமய்யா பின் காலித் (ரஹ்) அவர்களிடம், (ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “ஹத்தஅனீ” எனும் சொல்லுக்கு என்ன பொருள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “என் பின்தலையில் ஒரு தட்டு தட்டினார்கள்” என்பது பொருள் என்றார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம்-5074

பதில்:

ஷேக் அபு யஹ்யா நூர்புரி அளித்த விளக்கத்தை படியுங்கள், அஸ் ஸுன்னா-148 to 155 என்ற நூலில் இருந்து பின்வருமாறு

நபி ﷺ அவர்கள் முஆவியா(ரலி) அவர்களுக்கு எதிராக துஆ செய்ததாக இவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் மற்றோரு வழியாக வரும் ஹதீஸை  பார்க்க தவறவிட்டார்கள்

رَسُولَ اللهِ صلى الله عليه وسلم بَعَثَ إِلَى مُعَاوِيَةَ يَكْتُبُ لَهُ

நபி ﷺ அவர்கள் முஆவியா(ரலி) அவர்களுக்கு செய்தி அனுப்பி தனக்கு எழுதி கொடுக்குமாறு கூறினார்கள்

முஸ்னத் தயாலிஸி-2869

முஆவியா(ரலி) வஹீ எழுதினார்கள் என்பதற்கு இந்த செய்தி சான்றாகும். ஆனால் முஆவியா(ரலி) அவர்களை வெறுக்க கூடிய வழிதவறியவர்கள் இதை அவர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தாயார் உம்மு சுலைம் (رضي الله عنها) அவர்களிடம் அநாதைச் சிறுமி ஒருத்தி இருந்தாள். (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தச் சிறுமியைப் பார்த்துவிட்டு, “நீயா அது? மிகவும் பெரியவளாகிவிட்டாயே! உன் வயது அதிகரிக்காமல் போகட்டும்!” என்று கூறினார்கள். அந்த அநாதைச் சிறுமி அழுதுகொண்டே உம்மு சுலைம் (رضيت الله عنها) அவர்களிடம் திரும்பிச் சென்றாள். உம்மு சுலைம் (رضي الله عنها) அவர்கள், “மகளே! உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தச் சிறுமி, “நபி (ஸல்) அவர்கள் என் வயது அதிகரிக்காமல் போகட்டும் என எனக்கெதிராகப் பிரார்த்தித்துவிட்டார்கள். இனி ஒருபோதும் என் வயது அதிகமாகாது?” என்று கூறினாள்.

உடனே உம்மு சுலைம் (رضي الله عنها) அவர்கள் தமது முக்காட்டுத் துணியை தலையில் சுற்றிக்கொண்டு வேகமாகப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உம்மு சுலைமே! உமக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (رضي الله عنها) அவர்கள், “அல்லாஹ்வின் நபியே! என்னிடமிருக்கும் அநாதைச் சிறுமிக்கெதிராகத் தாங்கள் பிரார்த்தித்தீர்களா?” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “என்ன விஷயம், உம்மு சுலைமே?” என்று கேட்டார்கள். உம்மு சுலைம் (رضي الله عنها) அவர்கள், “அவளுடைய வயது அதிகரிக்காமல் போகட்டும். அவளுடைய ஆயுள் கூடாமல் போகட்டும் எனத் தாங்கள் பிரார்த்தித்ததாக அச்சிறுமி கூறினாள்” என்றார்கள். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.

பிறகு, “உம்மு சுலைமே! நான் என் இறைவனிடம் முன்வைத்துள்ள நிபந்தனையை நீ அறிவாயா? நான் என் இறைவனிடம், “நான் ஒரு மனிதனே! எல்லா மனிதர்களும் மகிழ்ச்சியடைவதைப் போன்று நானும் மகிழ்ச்சியடைகிறேன். எல்லா மனிதர்களும் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்படுகிறேன். ஆகவே, நான் என் சமுதாயத்தாரில் யாரேனும் ஒருவருக்கெதிராகப் பிரார்த்தித்து அதற்கு அவர் தகுதியானவராக இல்லாதிருந்தால்,அப்பிரார்த்தனையையே அவருக்குப் பாவப்பரிகாரமாகவும் மறுமை நாளில் இறைவனிடம் நெருக்கமாக்கும் அம்சமாகவும் மாற்றிவிடுவாயாக!” என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளேன்” என்று கூறினார்கள்.

ஸஹீஹ் முஸ்லீம்-5073

இமாம் இப்னு கதீர்(ரஹ்) கூறுகிறார்கள்:

فركب مسلم من الحديث الأول وهذا الحديث فضيلة لمعاوية

இமாம் முஸ்லிம் இந்த ஹதீஸை(அல்லாஹ், அவருடைய வயிறை நிரப்பாமல் விடட்டும்)முந்தைய ஹதீஸுக்குப் பிறகு(அப்பிரார்த்தனையையே அவருக்குப் பாவப்பரிகாரமாக ஆகும்) பதிவிட்டு அதனால் இது முஆவியா(ரலி) அவர்களது சிறப்பை சுட்டிக் காட்டினார்.

அல்பிதாயா வன்நிகாயா-8/120

இமாம் நவவி(ரஹ்) கூறுகிறார்கள்

இமாம் முஸ்லிமைத் தவிர மற்ற அறிஞர்கள் இந்த ஹதீஸை முஆவியாவின் நற்பண்புகளில் மேற்கோள் காட்டியுள்ளனர், ஏனெனில் நபி ﷺ அவர்களின் இந்த வார்த்தைகள் உண்மையில் முஆவியா அவர்களுக்கான துஆவாகும்.

ஷரஹ் ஸஹீஹ் முஸ்லீம்-16/156

மற்றோரு ஹதீஸை இமாம் இப்னு கதீர்(ரஹ்) கூறிப்பிடுகிறார்கள்

ஹுதைஃபா மதீனாவில் இருந்தார்கள், அவர் அல்லாஹ்வின் தூதர் கூறிய விஷயங்களைக் மக்களிடம் குறிப்பிடுவார்கள்.ஹூதைஃபா(ரலி) அவர்கள் ஸல்மான்(ரலி) அவர்களிடம் வந்தார்கள். அப்போது, ஹுதைஃபா(ரலி) அவர்களே அல்லாஹ்வின் தூதர் அவர்களே சில சமயங்களில் கோபமடைந்து அதன்படி பேசுவார், சில சமயம் மகிழ்ச்சியடைந்து அதன்படி பேசுவார்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்துக் கூறியதை நான் அறிவேன்.நான் என் மக்களில் யாரையாவது ஏசி இருந்தால், அல்லது என் கோபத்தில் அவரை சபித்து இருந்தால். நான் ஆதமின் மக்களில் ஒருவன் அவர்கள் கோபப்படுவது போல் நானும் கோபப்படுகிறேன். அல்லாஹ் என்னை அகிலத்திற்கு ரஹ்மத்(அருளாக) அனுப்பியுள்ளான். யா அல்லாஹ் இறுதி தீர்ப்பு நாளன்று அவர்கள் (ஏச பட்டவர்கள் மற்றும் சபிக்கபட்டவர்களுக்கு) அருள்புரிவாயாக என்றார்கள்.

நீங்கள் இது போன்று குறிப்பிடுவதை நிறுத்தங்கள் இல்லையென்றால் நான் உமருக்கு (கடிதம்) எழுதுவேன் என்று ஸல்மான்(ரலி) அவர்கள் கூறினார்கள்

சுனன் அபூதாவூத்-4659 |ஸஹீஹ்,

தப்ஸீர் இப்னு கதீர்-21/107
Previous Post Next Post