அல்லாஹ்வுடன் மட்டும் பாதுகாக்கப்படுகிற இரகசியமான அமல்கள் உங்களிடம் இருக்கிறதா ?

மறைமுகமான அமல் என்றால்,  குறிப்பிடப்பட்ட ஒரு இபாதத்தை நீங்கள் செய்யும் பொழுது, யாரும் அதை அறியாமல் இருப்பது. உங்களுடைய வணக்கங்களை யாரும் அறிந்து இருக்காத நிலையில், நீங்களும் அவற்றை யாரிடமும் சொல்லாமல் இருந்து, அல்லாஹ் ஒருவன் மட்டுமே அவற்றை அறிந்திருக்கின்ற ஒன்று !!!
(மக்களுடைய பார்வையில் இருந்து மறைத்து, ரகசியமாக செய்யும் அமல்)

அல்லாஹ்வுடனான உங்கள் இரகசியம்:

தினசரி நீங்கள் ஓதுகிற தஸ்பீஹ் ஆக கூட இருக்கலாம்;  "இறைவன் அனைத்து குறைகளிலிருந்தும் மிகத் தூய்மையானவன்" என்ற அர்த்தத்தில் நீங்கள் செய்யும் தஸ்பீஹ்களை, உங்களுடைய உள்ளத்தால் உணர்ந்து செய்கிறீர்கள்.
அதை நாவில் மொழிவதற்கு முன்பாக, உள்ளத்தால் கூறுகிறீர்கள்...!!!

அல்லாஹ்வுடனான உங்கள் இரகசியம் :

அல்லாஹ் தஃஆலாவின் முன்பு நீங்கள் தொழும் இலகுவான இரண்டு ரக்அத்துக்களாக கூட இருக்கலாம். மகத்தான அல்லாஹ்விற்கு, உள்ளத்தால்  கட்டுப்பட்டு, அவனது ஈகை குணத்தை உணர்ந்து தொழுவது...!!!

அல்லாஹ்வுடனான உங்கள் இரகசியம்:

உங்களது பெற்றோர்களுக்காக நீங்கள் செய்கின்ற நற்கருமங்களை, அவர்களின் நலனுக்காக செய்து அதை கடந்து செல்வது.  அவர்களிடத்தில் மனம் மகிழும் விதத்தில் நலினமான வார்த்தைகளை கூறுவது, "அல்லாஹ்விடத்தில் அதற்கு அந்தஸ்துகள் உயர்த்தப்பட்டு இருக்கும்" என்று அறியாமல், அதை கவனத்தில் கொள்ளாமல், அவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்வது.

அல்லாஹ்வுடனான உங்கள் இரகசியம்:

நீங்கள் வழங்கும் சிறிய தர்மங்கள் - அல்லாஹ்வின் முன்பு செய்யப்பட்ட இந்த சிறிய அமலினால், உங்கள் உள்ளத்தில் ஏற்படும் வெட்கம், உங்கள் உள்ளத்தில் "இந்த அமல் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்து விடுமோ" என்ற உள்ளுணர்வுடன் கடந்து சென்று அல்லாஹ்வின் மீது ஆதரவையும் வைப்பது...!!!

அல்லாஹ்வுடனான உங்கள் இரகசியம்:

உள்ளம் அல்லாஹ்வின் நேசத்தால் நிறைந்து  "லாயிலாஹ இல்லல்லாஹ்" என்ற கலிமாவை வாய்மையுடன் விளங்கி, இரவு பகலாக அல்லாவிற்காக உள்ளத்தை கட்டுப்படுத்தி, உங்களை நேர்வழிப்படுத்துமாறு அல்லாஹ்விடம் நீங்கள் அழுது மன்றாடுவது...!!!

அல்லாஹ்வுடனான உங்கள் இரகசியம்:

ஒருமுறை இவ்வாறு சொல்லப்பட்டதைப்போல் உங்கள் உள்ளத்தை அமைத்துக் கொள்ளவும்....!!!

அல்லாஹ்வின் மீது சத்தியமாக!!!
அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது தொழுகை, நோன்பின் மூலம் உங்களை முந்தவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் ஏற்பட்ட உறுதியான நம்பிக்கையும், நிலைகுலையாத ஈமானும் தான்,உங்கள் அனைவரையும் விட முந்தியதற்க்கு காரணமாக அமைந்தது.

எப்பொழுதும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறியாத ஒரு அமலை, இரகசியமாக நீங்கள் செய்து வாருங்கள் !!!

-Assheik. Nizam Deen Madani

-தமிழில்
உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

هل لك خبيئة مع الله؟

الخبيئة هي طاعة معينة تقوم بها ،لا يعلم بها أحد إلا الله . فكل ما لا يعلم به أحد من طاعاتك ولا تخبر به أحدًا ولا يعلمه إلا الله ، فهو خبيئة ( أي عمل في السر ، سترته وخبأته عن أعين الناس ) 

▪️سرك مع الله :
- قد يكون مجرد تسبيحات قليلة ترددها يوميا ، وقلبك يستشعر معنى التسبيح ومعنى تنزيه الله عن كل نقص، فتقولها بقلبك قبل لسانك .
▪️سرك مع الله :
- قد يكون ركعات يسيرة تقوم بها بين يدي المولى ، وقلبك خاضع لجلالته ومستشعر لعظيم كرمه .
▪️سرك مع الله :
- قد يكون خيرا تقدمه لوالديك ، 
أو خاطرا تجبره ثم تمضي ،
أو كلمة طيبة تجبر بها خاطر أحدهم 
ثم لا تلتفت لها ولا تعلم أن قد رفعك 
الله بها درجات عنده .
▪️سرك مع الله :
- قد يكون صدقة بسيطة تقدمها 
وقلبك خَجِل من قليل عمله أمام الله ، 
فتمضي وقلبك يخشى أن لا يقبل 
عمله ولكنه يثق جيدا برحمة ربه .
▪️سرك مع الله :
- قد يكون قلبك ، ذلك الذي لم تملأه 
بشيء غير حب الله وحققت فيه 
معنى لا إله إلا الله بصدق ، قلبك الذي 
تجاهد فيه ليل نهار وتبكي دوما بين 
يدي الله ليصلحه لك .
▪️سرك مع الله :
- هناك في قلبك ، هناك حيث قيل : 
والله ما سبقكم أبو بكر بكثرةِ صلاة
ولا صيام ولكن بشيء وقر في قلبه .. 

اجعل دائما لك سرا لا يعلمه إلا الله وحده ...
Previous Post Next Post