வீடு ஓர் அருளாகும் ஓர் இறைவிசுவாசி அவனுக்கு கிடைத்திருக்கும் வீடு குறித்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது கடமையாகும்.ஏனனில் எத்தனையோ மனிதர்கள் இந்த அருள் இல்லாமல் இருக்கிறார்கள். ஒதுங்குவதற்கு வீடு இல்லாமலும் நிம்மதியாக வாழ்வதற்கு இடம் இல்லாமலும் தவிக்கிறார்கள்.
இதனால் தான் இந்த அருள் குறித்து விழிபூட்டுவதற்காக அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்
وَاللّٰهُ جَعَلَ لَـكُمْ مِّمَّا خَلَقَ ظِلٰلًا وَّجَعَلَ لَـكُمْ مِّنَ الْجِبَالِ اَكْنَانًا وَّجَعَلَ لَـكُمْ سَرَابِيْلَ تَقِيْكُمُ الْحَـرَّ وَسَرَابِيْلَ تَقِيْكُمْ بَاْسَكُمْ كَذٰلِكَ يُتِمُّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُوْنَ
இன்னும் அல்லாஹ் தான் படைத்துள்ளவற்றிலிருந்து உங்களுக்கு நிழல்களையும் ஏற்படுத்தினான்; மலைகளிலிருந்து உங்களுக்கு(த் தங்குமிடங்களாக) குகைகளையும் ஏற்படுத்தினான்; இன்னும் வெப்பத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கக்கூடிய சட்டைகளையும் உங்களுடைய போரில் உங்களை பாதுகாக்கக்கூடிய கவசங்களையும் உங்களுக்காக அமைத்தான்; நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பதற்காக, இவ்வாறு தன் அருட்கொடையை உங்களுக்குப் பூர்த்தியாக்கினான்.
(அல்குர்ஆன் : 16:81)
மேற்கூறிய வசனத்தில் அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கிய அருளான அவர்களின் வீடுகள் வசிப்பிடங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளான்.மேலும் அவர்களுக்கு அவர்களது இல்லங்களை கஷ்டத்தில் இருந்து நிம்மதி பெறக்கூடிய அமைதித்தளமாக வீடுகளை ஆகியுள்ளான்.
நபி (ஸல் )அவர்கள் இந்த அருளுக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள்
நபி( ஸல்) அவர்கள் படுக்கைக்கு சென்றால்
الحمد لله الذي اطعمنا وسقانا وكفانا وآوانا فكم ممن لا كافي له ولا مؤوي
எங்களுக்கு உணவளித்து நீர் புகட்டி போதுமான வாழ்வை தந்து எங்களுக்கு புகலிடம் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் எத்தனையோ பேர் புகலிடம் கொடுக்க யாருமில்லாமலும் போதுமான வாழ்க்கை கொடுக்க யாருமில்லாமலும் இருக்கிறார்கள். (நூல் : முஸ்லிம்7069)
என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.
வீட்டிக்குள் நுழைய முன் அனுமதி கேட்டல் :-
ஒரு முஸ்லிம் வீட்டுக்குள் நுழைய முன் அனுமதி கேற்பது கடமையாகும்.
சவ்பான் (ரழி )அவர்கள் அறிவிக்கிறார்கள்
வீட்டிக்குள் நுழைய முன் அனுமதி கோர வேண்டும் அனுமதி பெறும் வரையில் ஒருவரின் வீட்டின் ஓட்டையின்னூடக உத்துப் பார்ப்பது ஒரு முஸ்லிமுக்கு அனுமதி இல்லை என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் (நூல் அதபுல் முப்ரத் )
வீட்டினுள் நுழையும் போது அல்லாஹ்வின் பெயர் கூறி நுழைவது விரும்பத்தக்கதாகும்.
இதனால் அதிகமான பலன் உண்டு
ஜாபீர் பின் அப்துல்லாஹ் (ரலி )அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து தான் கேட்டதாக அறிவிக்கிறார்கள் " ஒரு மனிதர் தனது வீட்டினுள் நுழையும் போதும் உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூறினால் (பிஸ்மில்லாஹ் )என்று கூறினால் அப்போது ஷைதான் "உங்களிடம் தங்ககுமிடமும் இல்லை உணவும் இல்லை என்று கூறுவான். ஒருவர் தனது வீட்டினுள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவு கூறவில்லையென்றால் ஷைதான் உங்களிடம் தங்குமிடத்தை நான் அடைந்து கொண்டேன். எனக்கூறுவான்...... (நூல் :முஸ்லிம் )
இப்னு அப்பாஸ் (ரலி )அவர்கள் கூறினார்கள் "இங்கே அல்லாஹ்வை நினைவு கூறுதல் என்பது " பிஸ்மில்லாஹ் " என்று கூறுவதாகும். இதுவே சரியானதாகும்.
மேலும் வீட்டினுள் நுழையும் போது அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக்கு ஹைரல் மவ்லிஜி
اللهم إني اسألك خير المولج وخير المخرج.......
என்று தொடங்கும் இந்த துஆ ஆதாரமற்றதாகும்.
வீட்டினுள் நுழையும் போது இஸ்லாத்தின் காணிக்கையை கூறுவதின் சிறப்பு :
வீட்டினுள் நுழையும் போது இஸ்லாத்தின் காணிக்கையை கூறுவதின் மூலம் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய சிறப்பு உண்டு.
அபூ உமாமா (ரலி )அவர்கள் அறிவிக்கிறார்கள் :நபி (ஸல் )அவர்கள் கூறினார்கள் :மூன்று பேர் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளார்கள்.... அதில் ஒருவர் ஸலாம் சொல்லிக்கொண்டு வீட்டினுள் நுழையும் மனிதர்... (நூல் : புஹாரி அதபுல் முப்ரத் )
மேலும் அனஸ் (ரலி )அவர்கள் கூறினார்கள் நபி (ஸல் )அவர்கள் என்னிடம் கூறினார்கள் : மகனே நீ உனது வீட்டுக்குள் நுழைந்தால் ஸலாம் கூறுவீராக அது உனக்கும்,உனது குடும்பத்திற்கும் பாக்கியமுடையதாக இருக்கும் (நூல் : திருமிதி )
எனவே மிக பரிபூரண ஒழுக்கத்தில் நின்றும் உள்ளது தான் யார் வீட்டினுள் நுழைகிறார்களோ அவர்கள் நுழையும் போது அல்லாஹ்வின் பெயர் கூறி (பிஸ்மில்லாஹ் )ஸலாம் கூறி நுழைவதாகும்.
மேலும் ஒருவர் தனது வீட்டினுள் நுழையும் போது ஸலாம் கூறியது வீட்டில் உள்ள தனது குடும்பத்திற்கு கேட்க வில்லையானால் அவர்கள் தான் வருவதை உணர வில்லையானால். கணைத்துக் கொண்டு அல்லது தனது காலால் பூமியில் தட்டிக் கொண்டு போக வேண்டும். அப்போது வீட்டில் உள்ளோர் அறிந்து கொள்வார்கள். அதானல் தாங்கள் சுதாகரித்துக் கொள்வார்கள் என இமாம் அஹ்மத் (ரஹ்மத்துல்லாஹி )அவர்கள் கூறினார்கள் (நூல் : அதப்புஷ்ஷரயீயா )
வீட்டினுள் நுழைந்தால் வாயை சுத்தப்படுத்திக் கொள்வது சுன்னவாகும்.
இவ்வாறு நபி (ஸல் )அவர்கள் தனது வீட்டினுள் நுழைந்தால் பல் விளக்கி சுத்தம் செய்து கொள்பவர்களாக இருந்தார்கள். (நூல் : முஸ்லிம் )
இது தனது வீட்டாருக்கு ஒரு பூரண சுத்தத்தையும். புத்துணர்ச்சியையும் அளிக்கும்.
வீட்டில் நுழைத்தால் இரண்டு ரக அத் தொழுது கொள்வது விரும்பத்தக்கதாகும்.
நபி (ஸல் )அவர்கள் கூறினார்கள்... நீர் உனது வீட்டினுள் நுழைந்தால் இரன்டு ரக அத் தொழுது கொள் அது உள்ளே உள்ள கெடுதிகளில் இருந்து உன்னை தடுக்கும். (நூல் : பஸ்ஸார் )
வீட்டில் இருந்து வெளியேறும் போது ஓதும் துஆ
வீட்டில் இருந்து வெளியேறும் போது பின்வரும் துஆவை ஒதிக்கொள்வது சுன்னவாகும்.
بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ ولاَ حَوْلَ وَلاَ قُوَّةَ اِلاَّ بِاللهِ
பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (புறப்படுகிறேன், என் காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து விட்டேன், மேலும் அல்லாஹ்வைக் கொண்டல்லாது (பாவத்திலிருந்து) திரும்புதலும், (நன்மையானவற்றைச் செய்வதற்கு) சக்தியுமில்லை.
(நூல்கள்: அபூதாவூது 5095, திர்மிதி 3426)
اَللَّهُمَّ إِنِّي اَعُوْذُ بِكَ اَنْ اَضِلَّ اَوْ اُضَلَّ اَوْ أَزِلَّ اَوْ أُزَلَّ اَوْ أَظْلِمَ اَوْ أُظْلَمَ اَوْ اَجْهَلَ اَوْ يُجْهَلَ عَلَيَّ
அல்லாஹும்ம இன்னி அஊது பிக அன் அளில்ல அவ் உளல்ல. அவ் அஜில்ல அவ் உஜல்ல. அவ் அழ்லிம அவ் உழ்லம. அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய.
பொருள்: யா அல்லாஹ்! நான் வழி தவறுதல் அல்லது (பிறரால்) நான் வழி தவறச் செய்யப்படல், அல்லது நான் பிசகிவிடுதல் அல்லது (பிறரால்) நான் பிசகச் செய்யப்படல் அல்லது நான் பிறருக்கு அநீதமிழைத்து விடல் அல்லது (பிறரால்) நான் அநீதமிழைக்கப்பட்டு விடல், அல்லது நான் அறிவீனனாக ஆகிவிடல் அல்லது (பிறரால்) அறிவீனம் என்மீது ஆக்கப்படல் ஆகியவற்றிலிருந்து உன்னைக் கொண்டு நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.
(நூல்: அபூதாவூது 5094)
(அல்லாஹ் மிக அறிந்தவன் )