மக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா?

பலர் மகிழ்ச்சி என்ற வார்த்தையை காதால் கேட்டிருப்பார்கள். ஆனால், வாழ்க்கையில் அதை உணர்ந்திருக்க மாட்டார்கள். பிறர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து, இவர் கவலையாக இருப்பார். பிறர் சிரிப்பதைப் பார்த்து இவர் மனதுக்குள் அழுவார். நாம் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் பலரை துக்கக் கடலில் மூழ்கடித்திருப்பதை காண்கிறோம்.

உலக வாழ்வை பொறுத்த வரை அதில் இன்பமும் துன்பமும் மகிழ்ச்சியும் துக்கமும் இரட்டைக் குழந்தை களைப் போல் இணைந்தே பிறந்திருந்தாலும் அல்லாஹ் வின் மார்க்கம் கவலைகளை களைவதற்கும் துன்பங்களை மறப்பதற்கும் இன்னல்களிலும் இன்முகத்தோடு இருப்பதற்கும் உடலுக்கு வலியும் வேதனையும் இருந்தாலும் – குடும்பத்தில் வறுமையும் சிரமங்களும் இருந்தாலும் – இதயம் இன்பமாக இருப்பதற்கும் உள்ளம் உற்சாகமாக இருப்பதற்கும் அழகிய போதனைகளை நமக்கு போதிக்கிறது. அதைப் பின்பற்றும்போது நிச்சயம் கவலைகளை வென்று துக்கங்களை தூர தூரத்தி இன்னல்களை அகற்றி இன்பத் தோடும் மகிழ்ச்சியோடும் வாழலாம்.

பலர் இஸ்லாமிய வழிகாட்டல்களை அறியாமல் அல்லது அறிந்தும் அவற்றை மதிக்காமல் உலக சிற்றின்பங்களிலும் அல்லது உலகத்தார் கூறுகின்ற வழிகளிலும் மகிழ்ச்சியைத் தேடி இறுதியில் வலையில் சிக்கிய பறவைகளைப் போல் துன்பக் கூண்டுகளில் அடைப்பட்டு போய் மீள வழி தெரியாமல் உயிரை மாய்த்துக் கொன்கின்றனர். ஆகவே நீங்கள் கவலையில், துக்கத்தில், துயரத்தில், மனவேதனையில் துவண்டுபோய் சோர்ந்து, திகைத்து, திக்கற்று இருந்தால் இதோ, அப்படிப்பட்ட உள்ளங்களுக்காக இதோ சில அறிவுரைகள். இவற்றை சிந்தித்துப் படியுங்கள்! எடுத்து செயல்படுத்துங்கள்! பிறகு மகிழ்ச்சியை எங்கும் தொலைக்க மாட்டீர்கள். இன்பங்களை இழக்க மாட்டீர்கள். நீங்கள் உங்களுக்குள் மகிழ்ச்சியாக இருந்து, பிறரோடும் மகிழ்ச்சியாக இருந்து வாழ்வின் சுகத்தை – இன்பத்தை அனுபவிப்பீர்கள்.

 1. உண்மையான இறை நம்பிக்கை – ஈமான் – கவலைகளை போக்கிவிடும். துக்கங்களை அகற்றிவிடும். இறைநம்பிக்கைதான் கண்குளிர்ச்சியும் மன ஆறுதலு மாகும். ஆகவே இறை நம்பிக்கையை வளர்த்துக் கொள், பாதுகாத்துக் கொள்.

 2. நடந்து முடிந்தது, முடிந்துவிட்டது. சென்று விட்டது இறந்து போன ஒன்று. ஆகவே, அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்காதே.

3. இறைவனால் முடிவு செய்யப்பட்ட விதியை, அவனால் நிர்ணயிக்கப்பட்ட வாழ்வாதாரத்தை பொருந்திக்கொள். எல்லாம் விதியின்படிதான் நடக்கும். எனவே, சடைந்து கொள்ளாதே! சஞ்சலப் படாதே!

4. இறை நினைவை அதிகப்படுத்து! அதன்மூலம்தான் உள்ளங்கள் நிம்மதியடையும்; பாவங்கள் மன்னிக் கப்டும். அல்லாஹ்வின் திருப்தியும் மகிழ்ச்சியும் அதைக் கொண்டுதான் கிடைட்ககப் பெறும். இறை நினைவின் மூலம்தான் துன்பங்கள் நீங்கும், துக்கங்கள் களையும்.

5. காலையில் இருக்கும்போது மாலையை எதிர் பார்க்காதே! இன்று என்னவோ அதைப் பற்றி மட்டும் சிந்தித்து வாழ். இன்றைய பொழுதை சீர் செய்ய முயற்சி செய்!

6. பிறர் நன்றி செலுத்த வேண்டும் என எதிர்பார்க்காதே! அல்லாஹ் உனக்கு கொடுக்கும் நற்கூலி போதுமானது. நன்றிகெட்டோர், பொறாமைப்படுவோர், குரோதம் கொள்வோர் பற்றி பொருட்படுத்தாதே!

7. நீயும் உன் உள்ளத்தை பொறாமை, குரோதம், பகைமையை விட்டு சுத்தமாக வைத்துக கொள்! வெறுப்பையும், தப்பெண்ணத்தையும் உள்ளத்தை விட்டு வெளியேற்றி விடு!

8. நன்மையான விசயங்களில் மட்டும் மக்களுடன் சேர்ந்திரு! உன் வீட்டில் அதிகமாக இரு! உன் வேலையை கவனி! மக்களோடு அதிகம் பழகுவதை குறைத்துக் கொள்!

9. நல்ல நூல்களே சிறந்த நண்பர்கள். ஆகவே புத்தகங் களோடு இரவைக் கழி! கல்வியுடன் நட்பு கொள்! அறிவை தோழனாக்கிக் கொள்!

10. உலகம் ஓர் அமைப்பில்தான் படைக்கப்பட்டுள்ளது. எனவே உன் உடை, வீடு, உனது அலுவலகம், உன் கடமைகள் என அனைத்திலும் ஒழுங்கு முறைகளைப் பின்பற்று!

11. நெஞ்சம் திறந்து வெளிக்கு வா! பூஞ்சோலைகளைக் கொஞ்சம் பார்! 

அல்லாஹ்வின் அற்புத படைப்பு களைப் பார்த்து மன அழுத்தங்களை குறைத்துக் கொள்!

12. நடைப் பழக்கம் மிக அவசியம். உடற்பயிற்சி மிக நல்லது. சோம்பேறித்தனம், முடங்கிக்
கிடப்பது, சோர்ந்து போவது வேண்டாம். வேலையின்றி இருப்பதையும் வீணாக பொழுதைக்
கழிப்பதையும் முற்றிலும் தவிர்த்து விடு!

13. முடிந்தால் வரலாற்றைப் படி! நடந்து போன ஆச்சரியமான நிகழ்வுகளை, அற்புதமான
சம்பவங் களை சிந்தித்து ஆராய்ந்து பார்! அதில் பதிவான செய்திகள், சம்பவங்களைப் படித்து
இன்புறு!

14. உன் வாழ்க்கையை புதுப்பித்துக் கொண்டே இரு! வாழ்வின் அமைப்புகளை ஒரு
முறையிலிருந்து, அடுத்து மேலான முறைக்கு மாற்றிக் கொண்டே இரு! ‘ரொட்டின்’ என்ற
சடைவூட்டும் தொடர் செயல்களை முடிந்தளவு மாற்றி மாற்றி செய்.

15. அடிக்கடி தேனீர் அருந்துவது, உற்சாக பானங்களைப் பயன்படுத்துவதை விட்டுவிடு!
புகைப்பதை முற்றிலும் நிறுத்திவிடு! அதில் எச்சரிக்கையாய் இரு!
மக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா?

16. உன் உடல், உடையை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனமாக இரு! பல்துலக்கி,
நறுமணம் பூசி இரு!

17. நிராசை, நம்பிக்கையின்மை, துர்சகுணம் பார்த்தல், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றைத்
தூண்டும் புத்தகங்களை அறவே படிக்காதே!

18. நினைவில் வை! “உன் இறைவன் விசாலமான மன்னிப்புடையவன். பிழைபொறுப்புத்
தேடலை ஏற்பவன். தன் அடியார்களை மன்னித்து பாவங்களை நன்மைகளாக மாற்றிவிடுபவன்.”

19. இறை மார்க்கம், அறிவு, உடல், சுகம், தன் குறைகள் மறைக்கப்பட்டிருத்தல் செவி,
பார்வை, வாழ்வாதாரம், குடும்பம், சந்ததி, இப்படி இன்னும் எத்தனையோ இறை அருள்களை
நினைவு கூர்ந்து உன் இறைவனுக்கு நன்றி செலுத்து!

20. பலரைப் பார்! சிலர் பைத்தியமாக, புத்தி பேதலித்த வர்களாக, உடல்
ஆரோக்கியமற்றவர்களாக, கைதிகளாக, உடல் ஊனமுற்றவர்களாக இருப்பதைப் பார்! இப்படி
எத்தனையோ பிரச்சினைகளில் சிக்கியவர்களைப் பார்!

21. குர்ஆனோடு வாழ்! அதை மனனம் செய்! அதை ஓது! அதைக் கேள்! அதை சிந்தித்துப் பார்!
நிச்சயமாக குர்ஆன் கவலைகளை விரட்டுவிடுதவற்கு மிகப்பெரிய சிகிச்சையாகும்.

22. பொறுப்பை அல்லாஹ்வின் மீது சாட்டி விடு! அவனை நம்பிவிடு! காரியங்களை
அவனிடம் ஒப்படைத்துவிடு! அவனது தீர்ப்பை, விதியை ஏற்று பொருந்திக்கொள்! அவனை
அண்டிவிடு! அவன் பக்கம் ஒதுங்கிவிடு! அவனையே சார்ந்துவிடு! அவனே
உனக்கு போதுமானவன். உன்னைக் காப்பவன்.

23. உனக்கு அநீதி இழைத்தவனை மன்னித்துவிடு! உன்னை வெட்டியவர்களை
சேர்த்துக்கொள்! உனக்கு
கொடுக்காதவர்களுக்கும் கொடுத்து உதவு! உமக்கு கெடுதி செய்பவர்களை சகித்து புறக்கணித்து
விடு! கண்டிப்பாக மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அடைவாய்.

24. ‘லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹ்’வை ஓதிக் கொண்டே இரு! இந்த
இறைநினைவு உள்ளத்தை விரிவாக்கும்; நிலைமையை சீர் செய்யும்; சுமைகளை
அதைக் கொண்டுதான் சமாளிக்க முடியும். அல்லாஹ்வை திருப்திபடுத்த முடியும்.

25. பாவமன்னிப் தேடிக்கொண்டே இரு! அதனால் உணவு வசதி, மகிழ்ச்சி, சந்ததி, பலன்தரும்
கல்வி, காரியங்கள் இலகுவாக்கப்படுதல், பாவங்கள் மன்னிக்கப்படுதல் இவற்றையெல்லாம் நீ
பெறலாம்.

26. உனக்கு அல்லாஹ் கொடுத்த தோற்றம், திறமை, வருமானம், குடும்பம் ஆகியவற்றைக்
கொண்டு திருப்தி கொள். நிச்சயம் மன நிம்மதியும் மன மகிழ்ச்சியும் பெறுவாய்!

27. சிரமத்திற்குப் பின் இலகுவும் துன்பத்திற்குப் பின் இன்பமும் உண்டு. நிலைமைகள்
எப்போதும் ஒரே நிலையில் இருக்கா. நாட்கள் (கிணற்று வாளிகளைப் போல்) சுற்றிக் கொண்டும்,
சுழன்று கொண்டும்தான் இருக்கும்.
 
28. நல்லதை நினை! நல்லதை எண்ணு! நிராசையாகதே! நம்பிக்கையை இழக்காதே! உன்
இறைவன் மீது
நல்லெண்ணம் வை! அவனிடமிருந்து நன்மைகளை யும் நல்லவற்றையும் எதிர்பாத்திரு.

29. அல்லாஹ் உனக்கென தேர்ந்தெடுத்ததைக் கொண்டு மகிழ்ச்சியுறு! நன்மை எதுவென நீ
அறியமாட்டாய். சிலநேரம் வசதியைவிட நெருக்கடியே உனக்கு நன்மையாக இருக்கலாம்.

30. சோதனை உன்னை அல்லாஹ்வுடன் நெருக்கமாக்கி வைக்கும். அது பிரார்த்தனைகளை
உமக்கு கற்பிக்கும். உன்னை இறைவனிடத்தில் மன்றாட வைக்கும். உன்னைவிட்டு தற்பெருமை,
கர்வம், ஆணவத்தை அகற்றிவிடும்.

31. அல்லாஹ் உனக்கு தேர்ந்தெடுத்ததைக் கொண்டு மகிழ்ச்சியுறு! உனது நலன் எது
என்பதை நீ அறிய மாட்டாய். சில வேளை வசதியைவிட வறுமையே சிறந்ததாக அமையலாம்.
(சிலர் ஏழையாக இருக்கும் போது இறைவழிபாடு, இறை அச்சத்துடன் இருக்கின்றனர். பிறகு,
செல்வம் வந்தவுடன் அல்லாஹ்வை மறந்து விடுகின்றனர்.)

32. சோதனை உனக்கும் அல்லாஹ்விற்கும¢ இடையில் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது;
உன்னை விட்டும் பெருமை, ஆணவம், கர்வத்தை போக்கி விடுகிறது.

33. “நீ உனக்குள் அருட்கொடைகளின் குவியல்களையும் அல்லாஹ் உனக்கு வழங்கிய
எத்தனையோ செல்வங் களின் பொக்கிஷங்களையும் சுமந்திருக்கிறாய்’’ என்பதை மறந்து
விடாதே!

34. மக்களுக்கு நன்மை செய்! அடியார்களுக்கு நல்லதை நாடு! நோயாளியை நலம் விசாரி!
ஏழைகளுக்கு கொடு! அநாதைக்கு கருணை காட்டு! மகிழ்ச்சி அடையவய்!!

35. கெட்ட எண்ணங்களை தவிர்த்துக் கொள்! வீண் கற்பனைகளை விட்டும் தேவையற்ற
சிந்தனைகளை விட்டும் விலகி விடு.

36. சோதனை உனக்கு மட்டும் இல்லை. கவலை யாருக்குத்தான் இல்லை, துன்பமற்றோர்
இவ்வுலகில் உண்டா?!

37. உலகம் சோதனைகள், வேதனைகள், குழப்பங்கள் நிறைந்த ஒரு வீடு. அதை அப்படியே
ஏற்றுக் கொள்! அல்லாஹ்விடம் உதவி தேடு!

38. உனக்கு முன் சென்ற பலரைப் பற்றி நினைத்துப்பார். சிலர் பதவி இழந்தனர், சிலர்
சிறைப்பட்டனர், சிலர் துன்புறுத்தப்பட்டனர், சிலர் சொத்துக்களை இழந்தனர், சிலர்
தண்டிக்கப்பட்டனர்.

39. உனக்கு ஏற்பட்ட கவலை, துக்கம், பசி, வறுமை, நோய், கடன் மற்றும் பல சோதனைகள்
அவை அனைத்தும் உமக்கு அல்லாஹ்விடம் நற்கூலியைத் தேடித் தரக்கூடியவை.

40. துன்பங்கள்தான் செவிகளையும் பார்வைகளையும் திறக்கின்றன, உள்ளத்தை
உயிர்ப்பிக்கின்றன, ஆன்மாவை தீமையிலிருந்து தடுக்கின்றன, அடியானுக்கு நல்லறிவை
புகட்டுகின்றன, நன்மை களை அதிகப்டுத்துகின்றன.

41. பிரச்சனைகளை எதிர்பார்க்காதே! தீமைகளைத் தேடாததே! புரளிகளை நம்பாதே!
மக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா?

42. பெரும்பாலான பயங்கள் நிகழ்வதில்லை, கேள்விப் பட்ட சிரமங்கள் எல்லாம் வந்து
விடுவதில்லை, அல்லாஹ் இருக்கிறான்; அவன் பாதுகாப்பான், அவன் கவனித்துக் கொள்வான்,
அவன் உதவுவான்.

43. வெறுப்பவர்கள், அலட்டிக் கொள்பவர்கள், பொறாமைக்காரர்கள் ஆகியோரிடம்
பழகாதே! அவர்கள் உயிரின் நோய்கள், கவலைகளின் சுமை தாங்கிகள்.

44. தொழுகைகளை தக்பிரதுல் இஹ்ராமுடன் (முதல் தக்பீருடன் முதல் வரிசையில்)
தொழுவதில் கவனம் செலுத்து.

45. மஸ்ஜிதில் அதிக நேரத்தைக் கழி! தொழுகைக்காக விரைந்து செல்! மகிழ்ச்சியை
காண்பாய்!!

46. பாவங்களை விட்டு விலகி இரு! அவைதான் கவலைகள் மற்றும் துக்கங்களின்
பிறப்பிடங்கள், துன்பங்களின் காரணங்கள், சோதனைகள் மற்றும் பிரச்சனைகளின் வாசல்கள்
ஆகும்.

47. ‘லா யிலாஹ இல்லா அன்த சுப்ஹானக்க இன்னீ குன்து மினள் ளாலிமீன்’ என்ற
திருவாசகத்தை அதிகம் ஓதிவா! துயரங்களை நீக்குவதில், இன்னல்களை களைவதில் அது
உனக்கு கை கொடுக்கும்.

48. உன்னைப் பற்றி பேசப்படும் அருவருக்கத்தக்க, தீய பேச்சுகளால் நீ கலங்க வேண்டாம்.
அது உனக்கு தீங்கிழைக்கா. அவற்றை கூறியவருக்குத்தான் அவை தீங்கிழைக்கும்.

49. உன் எதிரிகள் உன்னை ஏசுவதும் உனது பொறாமைக் காரர்கள் உண்னைத் திட்டுவதும்
உனது மதிப்புக்குச் சமமானது. அதாவது நீ ஒரு முக்கியமான மனிதனாக வும் பேசப்படுகிற ஒரு
நபராகவும் ஆகிவிட்டாய்.

50. வணக்க வழிபாட்டில் உன்மீது கடினப்படுத்திக் கொள்ளாதே!

51. சுன்னாவைப் பின்பற்று! மார்க்கத்தில் நடு நிலையைப் பேணு! நடுப்பாதையில் செல்!                     வரம்பு மீறி விடாதே!!

52. தவ்ஹீதை பரிசுத்தமாக வைத்துக் கொள்! உனது நெஞ்சம் விசாலமாக இருக்கும், உனது                 தவ்ஹீதும் இக்லாசும் சுத்தமாக இருக்கும் அளவுக்குத்தான் உனது மகிழ்ச்சி இருக்கும்.

53. வீரனாக இரு! உள்ளம் உறுதியுடையவனாக இரு! திடமான மனதுடன் இரு! உன்னிடம்                    உறுதியும்! வீரமும், பிடிப்பும் இருக்க வேண்டும். மயங்கி விடாதே! பயந்து விடாதே!

54. கொடை கொடு! கொடையாளி, என்றும் உள்ளம் விரிந்தவன், மகிழ்ச்சியானவன்.                             கஞ்சன் நெஞ்சம் நெருக்கடியானவன், உள்ளம் இருண்டவன், உள்ளம் அசுத்தமானவன்.

55. மக்களுக்கு முன் முகம் மலர்ந்திடு! அவர்களின் அன்பை பெறுவாய். அவர்களிடம்                         மென்மையாகப் பேசு! உன்னை நேசிப்பார்கள். அவர்களுக்கு முன் பணிவாக இரு!                         உன்னை மதிப்பார்கள்.

56. அழகிய முறையில் எதையும் அணுகு! நல்லதைக் கொண்டு தீயதைத் தடு! மக்களிடம்                   மென்மையாக இரு! பகைமையை அணைத்து விடு! உன் எதிரிகளிடம் சமாதானம் செய்!  உனது நல்ல நண்பர்களை அதிகப்படுத்திக் கொள்!!

57. நற்பாக்கியத்தின் மாபெரும் வாயில் பெற்றோரின் பிரார்த்தனை. எனவே, அவர்களுக்கு நன்மை         செய்து, அதை கொள்ளைக் கொள்! அவர்களது துஆ உனக்கு தீங்குகளை விட்டும் பாதுகாக்கும்          அரணாக அமையும்.

58. மக்களை அவரவர்களிடம் இருக்கும் தன்மைகளுடன் ஏற்றுக் கொள்! அவர்களிடம் தோன்றும் குறைகளை பெருந்தன்மையுடன் விட்டு விடு! இது தான் மக்களிலும் வாழ்க்கையிலும்                   அல்லாஹ்வின் நடைமுறை.

59. யதார்த்த வாழ்க்கையைப் பார்! அதில் வாழ்! அதிகம் எதிர்பார்க்காதே! உன்னால் முடியாததை         பிறரிடம் நீ தேடாதே! நீதமாக இரு!!

60. சாதாரணமாக, எளிமையாக இரு! பகட்டை, ஆடம்பரத்தை, வீண் விரயத்தை விட்டு விலகு!               உடல் அதிக சுகம் காணும்போது உள்ளம் இருகி விடுகிறது.

61. அன்றாடம் நீ பழகுகின்ற உன் உறவினரோ, அல்லது நண்பரோ, சகோதரர், மகன், மனைவி என         யாராக இருந்தாலும் அவரிடம் ஏதாவது ஒரு குறை கண்டிப்பாக இருக்கும். அனைவரையும்           ஏற்றுக்கொள்ள உன்னை பழக்கப்படுத்திக்கொள்!

62. உனக்கு இறைவன் புறத்திலிருந்து வழங்கப்பட்ட ஆற்றலை தக்க வைத்துக்கொள்! உனக்கு             விருப்பமான கல்வியை தக்க வைத்துக்கொள்! உனக்கு இலகுவாக்கப்பட்ட வாழ்வாதாரத்தை            தக்க வைத்துக்கொள்! உனக்குப் பொருத்தமான வேலையை தக்க வைத்துக் கொள்!

63. பிறரையோ, பிற அமைப்புகளையோ குறை கூறாதே காயப்படுத்தாதே! நல்ல பேச்சுகளையும்           இனிமையான சொற்களையும் பிறரை காயப்படுத்தாத நாவையும் உடையவனாக இரு! பிறருக்குத் தீங்கு தராதவனாக இரு!

64. தாங்கிக்கொள்வது குறைகளை குழிதோண்டி புதைத்துவிடும். சகித்துக் கொள்வது, தவறுகளை          மறைத்துவிடும். கொடைத்தன்மை, குற்றங்குறைகளை எல்லாம் மறைக்கக்கூடிய விசாலமான ஓர் ஆடையாகும்.

65. உனக்கென ஒரு நேரத்தை ஒதுக்கி, அதில் உனது காரியங்களைத் திட்டமிடு. உன்னை அதில் மறு     பரிசீலனை செய்! உன் மறுமையை சிந்தித்துப்பார்! உன் உலக காரியங்களை சீர்படுத்திக்கொள்!

66. உனது வீட்டில் உள்ள நூல் களஞ்சியங்கள், அது உனக்கு ஓர் அடர்ந்த பூங்காவாகும். அதில்             அறிஞர்கள், ஞானிகள் ,கவிஞர்கள் ,இலக்கியவாதிகள் ஆகியோருடன் நீ பேசி மகிழலாம்.

67. ஹலாலான வாழ்வாதாரத்தை தேடு! ஹராமை விட்டு உன்னைப் பாதுகாத்துக்கொள்!                    மக்களிடம் யாசிக்காதே! வேலையை விட வியாபாரம் சிறந்தது! உன் பொருளை வியாபாரத்தில்      ஈடுபடுத்து. வாழ்க்கையில் நடு நிலையாக வாழப் பழகு!

68. ஆடையில் நடு நிலையான ஆடையை உடுத்து! பகட்டு ஆடம்பர விரும்பிகளின் ஆடையையும்       அல்ல, பஞ்சத்தில் வாடுகின்றவனின் ஆடையையும் அல்ல. உனது ஆடையால் உன்னை                 விளம்பரப்படுத்த நாடாதே! பொதுமக்களைப் போன்றே இரு.

69. கோபப்படாதே! கோபம் உன் சுபாவத்தையும், உன் மன நிலையையும் கெடுத்துவிடும்.                     குணத்தை மாற்றி விடும். பழக்கத்தை பாழ்படுத்திவிடும். அன்பை முறித்துவிடும்.                         உறவை துண்டித்துவிடும்.

70. உன் வாழ்வை புதுப்பிப்பதற்காக மற்ற சில உலகங்களையும் நீ படிப்பதற்காக புதிய                       அடையாளங்களைப் பார்ப்பதற்காக வேறு பல ஊர்களையும் நீ தெரிந்து கொள்வதற்காக சில            நேரங்களில் சில பயணத்தையும் மேற்கொள்! ஏனெனில் பயணமும் ஓர் இன்பம்தான்.

(லா தஹ்ஸன் – கவலைப்படாதே! என்ற நூலிலிருந்து)

Previous Post Next Post