அஷ்ஷெய்க் அல்-அல்லாமா ரபீஃ இப்னு ஹாதீ அல் மத்கலீ ரஹிமஹுல்லாஹ்

ஷெய்க் அவர்களை பற்றிய ஒரு சிறு குறிப்பு:

பெயர்: 
ரபீஃ இப்னு ஹாதீ இப்னு முஹம்மத் உமைர் அல் மத்கலீ. 

பிறப்பு: 
1351 ஹிஜ்ரி ஆண்டின் கடைசிப் பகுதியில் பிறந்தார். 
ஆங்கில ஆண்டின் படி 1933.

பிறந்த இடம்:
அல்-ஜராதிய்யா ஸவூதி அரேபியா. 

ஷெய்க் அவர்கள் பிறந்து ஒரு சில வருடத்திலேயே அவருடைய தந்தை மரணித்து, அனாதையாக வாழ்ந்தார்கள். 

அவர் மார்க்க கல்வியை தேட ஆரம்பித்து அதிகமான உலமாக்களிடம் இருந்து கல்வி கற்றார்கள். 

கல்வி கற்ற உலமாக்களில் சிலர்:
 ஹாபில் இப்னு அஹ்மத் அல்-ஹகமீ 
 அஹ்மத் இப்னு யஹ்யா அந்-நஜ்மீ 
 முஹம்மத் அமான் அல்-ஜாமீ 
 அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் 
 முஹம்மத் நாஸிருத்தீன் அல்பானீ 
 அப்துல் முஹ்ஸின் அல் அப்பாத் 

மேலும் இவர்கள் அல்லாத உலமாக்களும் இருக்கின்றனர்.

அவர் எழுதிய சில புத்தங்கள்:

تحقيق كتاب التوسل والوسيلة " للإمام ابن تيمية
தஹ்கீக் கிதாபுத் தவஸ்ஸுல் லில் இமாம் இப்னு தைமிய்யாஹ். 

منهج الأنبياء في الدعوة إلى الله فيه الحكمة والعقل
மன்ஹஜுஸ் அன்பியா பித் தஃவதி இலல்லாஹி பீஹில் ஹிக்மது வல் அக்லு. 

براءة الصحابة الأخيار من التبرك بالأماكن والآثار
பராஅதுஸ் ஸஹாபா அல் அக்யார் மினத் தபர்ருகி பில் அமாகினி வல் ஆஸார் 

منهج أهل السنة في نقد الرجال والكتب والطوائف
மன்ஹஜு அஹ்லிஸ் ஸுன்னா ஃபீ நக்திர் ரிஜாலி வல் குதுபி வத் தவாஇஃப். 

مكانة أهل الحديث
மகானது அஹ்லில் ஹதீஸ். 

النصيحة هي المسؤولية المشتركة في العمل الدعوي. 
அந் நஸீஹா ஹியல் மஸ்ஊலிய்யதில் முஷ்தரகா ஃபில் அமலித் தஅவீ. 

الكتاب والسنة أثرهما ومكانتهما والضرورة إليهما في إقامة التعليم في مدارسنا
அல் கிதாபு வஸ் ஸுன்னா அஸருஹுமா வமகானதுஹுமா வத்தரூரது இலய்ஹிமா பீ இகாமதித் தஃலீமி ஃபீ மதாரிஸினா. 

மேலும் இவை அல்லாத நிறைய  புத்தகங்கள் ஷெய்க் அவர்கள் எழுதியுள்ளார்கள். 

அல்லாமா ரபீ இப்னு ஹாதி அல் மத்கலீ அவர்கள் தற்காலத்தில் வாழ்ந்த மிக மூத்த உலமாக்களில் ஒருவர் ஆவார். 

மேலும் தற்காலத்தில் வாழ்ந்து மரணித்த மூத்த உலமாக்களான இப்னு பாஸ், இப்னு உஸைமீன், அல்பானீ, முக்பில் அல் வாதிஈ, அஹ்மத் இப்னு யஹ்யா அந்-நஜ்மீ, ஸைத் இப்னு ஹாதி அல்-மத்கலீ ஸாலிஹ் அல்-லுஹைதான் மற்றும் இவர்கள் அல்லாத ஏனைய உலமாக்களுடைய காலத்தை அடைந்து அவர்களுடைய புகழாரங்களை பெற்ற பெரும் ஒரு ஆலிமும் ஆவார். 


قال الشيخ ابن باز رحمه الله :

الشيخ ربيع من خيرة أهل السنة والجماعة، ومعروف أنه من أهل السنة، ومعروف كتاباته ومقالاته. 

شريط بعنوان: ثناء العلماء على الشيخ ربيع.  

இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் :

ஷெய்க் ரபீஃ அவர்கள் அஹ்லுஸ் ஸுன்னாக்களில் உள்ள மிக சிறந்த ஒருவர். அவர் அஹ்லுஸ் ஸுன்னாவினர்களில் ஒருவர் என்பது அறியப்பட்ட ஒன்றே, மேலும் அவரது புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் நன்கு அறியப்பட்டவை.


قال الشيخ مقبل الوادعي :

அஷ்ஷெய்க் முக்பில் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:

الشيخ ربيع بن هادي المدخلي آية من آيات الله في معرفة الحزبيين. 

تحفة القريب المجيب. 

அஷ்ஷெய்க் ரபீஃ இப்னு ஹாதீ அல் மத்கலீ அவர்கள் ஹிஸ்பிகளை பற்றி அறிந்துகொள்வதில் அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் ஒருவர் ஆவார். 

இன்னும் பல உலமாக்கள் அவர்களை பாராட்டியுள்ளார்கள். 


மேலும் ஷெய்க் அவர்கள் மன்ஹஜுஸ் ஸலபை இந்த உம்மத்துக்கு போதித்து வரக்கூடியவராகவும், அந்த மன்ஹஜை மேலோங்கச் செய்வதற்கு பாரிய முயற்சி எடுத்துவருபவ ராகவும் இருந்தார்கள். அவர்களுடைய புத்தகங்களும், பாடங்களும் இதற்கு போதுமான சாட்சியாகும். 

மேலும் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரனுடன் அவர்கள் கிழக்கில் இருந்தாலும் சரி மேற்கில் இருந்தாலும் சரி அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்கு அறிவுரை செய்யும் ஸலஃபி தஃவாவின் தலை சிறந்த தந்தையாக திகழ்ந்தார்கள். 

மேலும் மன்ஹஜுஸ் ஸலஃபில் பயணிப்பவர்களை ஒரு குடைக்கு கீழ் ஒன்று சேர்த்து எங்கிருந்தாலும் நாம் ஒரு கொள்கையிலும் ஒரு மன்ஹஜிலும் பயணிக்கும் ஒன்று பட்ட சகோதரர்கள் என்பதை ஆணித்தரமாக ஒவ்வொரு ஸலஃபியுடைய உள்ளத்திலும் பதிய வைத்தார்கள்.

அதே சமயம் இந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் யாரெல்லாம் நடந்து கொள்கிறார்களோ அவர்களை துள்ளியமான முறையில் அடையாளப்படுத்தக் கூடியவராகவும் இருந்தார்கள். 

மேலும் ஷெய்க் அவர்கள் பித்அத்துவாதிகளுடைய தொண்டையில் சிக்கிய முள்ளைப் போன்று இருந்தார்கள், குறிப்பாக இஃக்வானிகளுக்கு பெரும் தலையிடியாக ஷெய்க் அவர்கள் இருந்தார்கள், மேலும் அவர்களுடைய வழிகேடுகளையும் சிந்தனைகளையும் குறித்து எச்சரிக்கை செய்பவராகவும், அவற்றை தோல் உறித்து காட்டுபவராகவும், அவர்களுடைய வாய் அடைத்துப் போகும் அளவிற்கு (ருதூதுகள்) மறுப்புகளுடைய விஷயத்தில் பெரும் திறமையும் அறிவும் கொண்டவராக ஷெய்க் அவர்கள் திகழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இக்வானிகளுக்கு எதிராக ஷெய்க் அவர்கள் எழுதிய சில புத்தகங்கள் பின்வருமாறு:

 العواصم مما في كتب سيد قطب من القواصم. 
அல் - அவாஸிம் மிம்மா பீ குதுபி ஸய்யிது குத்ப் மின்னல் கவாஸிம். 
(ஸய்யித் குதுபுடைய புத்தகங்களில் உள்ள வழிகேடுகளையும் அதற்கான மறுப்பையும் இதில் தொகுத்துள்ளார்.) 

مطاعن سيد قطب في أصحاب رسول الله ﷺ.
மதாஇனு ஸய்யித் குதுப் பீ அஸ்ஹாபி ரஸுலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 
(நபியவர்களுடைய ஸஹாபாக்கள் விஷயத்தில் ஸய்யித் குதுபுடைய மோசமான கறுத்துக்கள் என்ற தலைப்பில் அவற்றை சுட்டிக்காட்டும் முகமாக எழுதப்பட்ட ஒரு புத்தகம். )

 أضواء إسلامية على عقيدة سيد قطب وفكره
அத்வா இஸ்லாமிய்யா அலா அகீததி ஸய்யித் குதுப் வபிக்ரிஹீ
(ஸய்யித் குதுபுடைய கொள்கையும் சிந்தனையும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட மிக சிறந்த புத்தகம்.)

 أهل الحديث هم الطائفة المنصورة الناجية - حوار مع سلمان العودة 
அஹ்லுல் ஹதீஸ் ஹும் அத் தாஇஃபதுல் மன்ஸுரா அந் - நாஜியா, ஹிவாருன் மஅ ஸல்மான் அல்-ஊதா
(ஸல்மான் அல் ஊதாவுக்கு எதிராக எழுதப்பட்ட ஒரு புத்தகம்.) 

 المحجة البيضاء في حماية السنة الغراء من زلات أهل الأخطاء وزيغ أهل الأهواء. 
அல் மஹஜ்ஜதுல் பய்லா பீ ஹிமாயதிஸ் ஸுன்னா அல் கர்ரா மின் ஸல்லாதி அஹ்லில் அக்தாஇ வஸய்கி அஹ்லில் அஹ்வா. 

(மனோ இச்சையை பின்பற்றுபவர்களிடம் இருந்து ஸுன்னாவை பாதுகாத்தல் என்ற புத்தகம் வழிகேடர்களுக்கு எதிராக எழுதப்பட்ட ஒரு சிறந்த புத்தகம். )

 جماعة واحدة لا جماعات وصراط واحد لا عشرات» حوار مع عبد الرحمن عبد الخالق
ஜமாஅதுன் வாஹிதா லா ஜமாஆத் வஸிராதுன் வாஹித் லா அஷராத் - ஹிவாருன் மஅ அப்துர் ரஹ்மான் அப்துல் காலிக் - 

(பல கூட்டங்கள் கிடையாது ஒரே ஒரு கூட்டம் தான் என்ற புத்தகம், அப்துர் ரஹ்மான் அப்துல் காலிக்குடைய வழிகெட்ட சிந்தனைகளுக்கு எதிராக எழுதப்பட்ட புத்தகம்.)

மேலும் இவை அல்லாத பல புத்தகங்கள் உள்ளன. 


ஷெய்க் அவர்கள் யாரை ஸலஃபி என்று கூறுகின்றாரோ அவர் ஸலஃபி, எவரை பித்அத்வாதி ஹிஸ்பி என்று கூறுகின்றாரோ அவர் பித்அத்துவாதி ஹிஸ்பி என்ற அளவுக்கு அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரிடம் இடம் பிடித்தார்கள், நம்பிக்கையாக திகழ்ந்தார்கள். 

அதனால்தான் இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷெய்க் ரபீயை பார்த்து:

ஷெய்க் ரபீஃ அவர்களே! தவறிழைக்கும் அனைவருக்கும் மறுப்பு கொடுங்கள். இப்னு பாஸ் தவறு செய்தால், அவருக்கும் மறுப்பு கொடுங்கள். இப்னு இப்ராஹிம் தவறு செய்தால், அவருக்கும் மறுப்பு கொடுங்கள். என்று கூறக்கூடியவராக இருந்தார்கள். 

ஏனெனில் ஷெய்க் அவர்கள் ஒவ்வொரு அழைப்பாளர் விஷயத்திலும் சரியான (உஸ்லூபை) முறையை கடைபிடித்து வந்தார்கள், எவர் தவறான பாதையில் செல்வதை அறிவாரோ அவருக்கு அது குறித்து உபதேசம் செய்யக் கூடியவராகவும் அவருடைய விஷயத்தில் நளினத்தை கடைபிடிப்பவராகவும் இருந்தார்கள், அவர் தவறை சரி செய்து கொண்டு மீண்டு வந்தால் அவரை அரவணைத்து பாராட்டுபவராகவும், அதே தவறான வழியில் அவர் சென்றால் அவருடைய தவறை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்யக் கூடியவராகவும் இருந்தார்கள். 

எனவேதான் ஷெய்க் அவர்கள் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரினருடைய மிகப் பெரும் ஒரு ஆலிமாகவும், அவர்களுடைய நேசத்தை பெற்றவராகவும், ஸலபி தஃவாவின் தந்தை போன்றும் இக் காலகட்டத்தில் திகழ்ந்தார்கள். மேலும் இஃக்வானிகளும் பித்அத்துவாதிகளும் வெறுக்கக் கூடியவராகவும் இருந்தார்கள். 

இருந்த போதிலும் ஷெய்க் அவர்களுடைய விஷயத்தில் நாம் (இஸ்மத்தை) அவருக்கு தவரு ஏற்பட மாட்டாது என்று கூறமாட்டோம்.  ஏனெனில் அவர் ஒரு மனிதர். அவரால் சரியானதும் நடக்கும் மேலும் மனிதன் என்ற வகையில் சில தவறுகளும் நிகழும் என்பதே ஷெய்க் அவர்களுடைய விஷயத்திலும் சரி ஏனைய உலமாக்களின் விஷயத்திலும் சரி எமது கொள்கை ஆகும்.


ஷெய்க் அவர்களுடைய மரணம்: ஹிஜ்ரி 1447 முஹர்ரம் 14/ 09-07-2025.

إِنَّا لِلَّهِ وَإِنَّاۤ إِلَیۡهِ رَ ٰ⁠جِعُونَ

நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீள்வோம்.

அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலா அவர்களுக்கு கருணை புரிந்து மேலும் அவருடைய தரஜாக்களை உயர்த்த வேண்டும். நிச்சயமாக ஷெய்க் அவர்களுடைய மரணம் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினருக்கு ஏற்பட்ட மிகப் பெரும் இழப்பாகவும், அவர்களை கவலையில் ஆழ்த்திய ஒரு நிகழ்வும் ஆகும். 

அவர்களுடைய மரணத்தை நினைத்து இஃக்வானிகளும், பித்அத்துவாதிகளுமே சந்தோஷம் அடைவார்கள். 

அல்லாஹ் ஷெய்க் அவர்களுடைய சேவைகளை பொருந்திக் கொண்டு அவர் விட்டுச் சென்ற அறிவை பிரயோசனமானதாக ஆக்கவேண்டும். மேலும் அவருக்கு கிருபை செய்து அவருடைய கப்ரை ஒளிமயமானதாகவும் சொர்க்கத்துப் பூஞ்சோலையாகவும் ஆக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். 

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

- அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி வப்பகஹுல்லாஹ்.
Previous Post Next Post