பெருநாள் மற்றும் அதற்கு அடுத்துள்ள மூன்று நாட்களுக்குள் குர்பானிப் பிராணியை அறுத்துவிட வேண்டும்

பெருநாள் மற்றும் அதற்கு அடுத்துள்ள மூன்று நாட்களுக்குள் குர்பானிப் பிராணியை அறுத்துவிட வேண்டும். பெருநாளுக்கு அடுத்துள்ள மூன்று நாட்களுக்கு தஷ்ரீக்குடைய நாட்கள் என்று சொல்லப்படும். இந்நாளில் மக்கள் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை சூரிய ஒளியில் காயவைத்து உப்புக்கண்டம் தயாரித்ததால் இதற்கு அய்யாமுத் தஷ்ரீக் உப்புக் கண்டம் தயாரிக்கும் நாள் என்ற பெயர் வந்தது தஷ்ரீக்குடைய நாட்களுக்கு மினாவுடைய நாட்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் இதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அய்யாமுத் தஷ்ரீக் எனும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு
அடுத்த (மூன்று) நாட்கள்
உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்

ஸஹீஹ் முஸ்லிம்: 2099

மினாவுடைய நாட்கள் அதாவது தஷ்ரீக்குடைய நாட்கள் என்பது மூன்று நாளாகும் என நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

 மினாவுடைய நாட்கள் மூன்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள் (மக்களுக்கு) அறிவிக்கச் செய்தார்கள்

ஸஹீஹ் திர்மிதி : 814

பெருநாளுக்கு அடுத்துள்ள இந்த மூன்று நாட்களும் குர்பானிப் பிராணியை அறுப்பதற்குரிய நாட்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் 

ஸஹீஹ் தாரகுத்னீ (பாகம் : 4) (பக்கம்: 284)
Previous Post Next Post