மனைவியிடம் எவ்வாறு நடந்து கொள்வது?

அன்புள்ள கணவனே,
உங்கள் மனைவியின் ஆரம்ப கால இளைமையை நினைவில் கொள்ளுங்கள், அவள் உங்களுக்காக பிரகாசமாகவும், அழகாகவும் உருவாக்கி பாதுகாத்த உடம்பை கொண்டிருந்தாள்.

அவள் தன் உடம்பின் ஒவ்வொரு அங்கத்தையும் அதிக கவனத்துடன் பாதுகாத்து அழகாக வைத்திருந்தாள்.
தனக்காக பல கற்பனைகளை உருவாக்கி வைத்திருந்தாள்...

அவள் உங்கள் வீட்டை தன் வீடாக நினைத்து கட்டியெழுப்பி உங்களையும் அழகாக அவள் கட்டியெழுப்பினாள் என்பதை மறவாதீர்கள்...

அவள் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் உங்களுக்காகவும் கர்ப்பம் தரித்தாள்.. அதனால் கற்பனை செய்து பார்க்க முடியாத வேதனைகளைப் பெற்றாள். ஆனாலும் அது அவளது விருப்பமும் கனவும் வலிமையும் அதுவே. அதை அவள் கண்ணீர் மற்றும் சிரிப்புடன் எதிர்கொண்டாள். இல்லை என்றாள் நீங்களும் சமூகமும் அவளைப்பார்த்து சிரிப்பாய் சிரிப்பீர்கள்....

அவள் உங்கள் குழந்தையைச் சுமந்துகொண்டு இருக்கும்போது, அவள் உடம்பு மாற்றிக்கொண்டிருந்து. மிகவும் சங்கடமானாள், அவளது முகம் வீங்கியது, கால் வீங்கியது ,முடி கொட்டியது, உணவு அவள் தொண்டை வரை செல்ல வாந்தியாக வெளியே வந்தது... ஆனாலும் உங்கள் குழந்தையை 9 மாதங்கள், எண்ணற்ற கனவுகளுடன் தூக்கமில்லாத இரவுகளுடன் சுமந்து பாதுகாப்பாக வைத்திருந்தாள்,

பிரசவ நேரம் நெருங்க கண்ணீர் மற்றும் இரத்தம் சதை அழகு ஆரோக்கியம் என அனைத்தையும் தியாகம் செய்ய தயாரானாள்....

முதல் முறையாக பிரசவ அறைக்குள் சென்றாள். சுறுசுறுப்பான வேகத்துடன் செயற்கையான புன்னகையுடன் வைத்தியர் தாதியர் என வரவேற்றனர் . வேதனையுடன் அவள் ஒரு புதிய வாழ்க்கையை நோக்கி மகிழ்வுடன் சென்று கொண்டிருந்தாள்...

வெட்டி கிழிக்கப்பட்ட உடலில் அருகே அவளின் புதிய அவதாரமாக குழந்தை...
மறுபுறம்
சுருக்கங்கள் மற்றும் தையல்களால் அவதியுற்றாள்,
இப்போது அவளின் கட்டழகு உடல் இல்லை அது மறுபடி ஒருபோதும் வரப்போவதில்லை.
ஆனாலும் அவள் மறுபடி இதே வலியை ஏற்கத் தயாராக இருந்தாள். ஏனெனில் மாறியது அவளின் உடல் தான்... மனம் அல்ல.

இனி அவளுடைய உடல் ஒருபோதும் முன்னர் போல இருக்காது, கோடுகள் மற்றும் தழும்புகள் அவளுடைய உடல் எல்லாவற்றையும் கடந்து சென்றுவிட்டது, அவளுடைய துடுக்கான மார்புகள் இப்போது உங்கள் குழந்தைக்காக சாய்ந்து தொங்கி விட்டது. மெல்லிய வயிறு வெளியே தொங்க ஆரம்பிக்கிறது... உடல் பருமனாகிறது...

இப்போது அவள் உங்களுக்கு கொடுத்த புதிய குழந்தையை வளர்க்கத் தயாராக இருக்கின்றாள் தன் உடலை அல்ல., அவள் எப்போதும் இதைச் செய்வாள் . இந்த வலியை மீண்டும் மீண்டும் தாங்க தயாராக உள்ளாள் ஏனெனில் அவளின் மனது என்றும் மாறாதது...

அவளை அனைத்து மரியாதையுடனும் அன்புடனும் காதலியுங்கள்... முன்னரை விட அதிகமாக அவளை காதலியுங்கள். அவளின் தியாகத்தை மனதார புரிந்து கொண்டு அவளை ஆசையாக ஆதரியுங்கள்... அன்புகூருங்கள்...

அன்பான சகோதர்களே 
அறிந்து கொள்ளுங்கள்
மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்

ஒரு பெண்ணை திருமணம் செய்வது அவளோடு மரணம் வரைக்கும் மட்டுமின்றி மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே  

மனைவியை சந்திக்கும் போது எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருங்கள்.அது சதகாவகும். 

வீட்டினுள் நுழையும் போது ஸலாம் சொல்ல மறந்துவிட வேண்டாம். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட. அது ஷைத்தானை வீட்டிலிருந்து விரட்டிவிடும்.

நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். நாவைப் பேணுவது அவசியம்.அதன் தீய விளைவுகளே அதிகமானது.

எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள். விவாதம் வேண்டாம். அது திருமண வாழ்க்கைக்கு நஞ்சு போன்றது.

உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள். மனைவியின் கருத்துக்களை செவிசாயுங்கள்.

தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழையுங்கள். நபியவர்கள் தனது மனைவி ஆயிஷா நாயகியை “ஆயிஷ்” என்று செல்லமாக அழைத்தார்கள்.

நல்ல விடயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.

அவளது இன்பத்தில் மட்டுமல்லாது துன்பத்திலும் பங்கு கொள்ளுங்கள்.

பிள்ளைகளை பராமரிக்கும் விடயங்களில் அவளுக்கு உதவியாய் இருங்கள்.சிலர் பிள்ளை பெறும்வரைதான் நமது கடமை அதன் பின் மனைவிதான் பொறுப்பு என அலட்சியமாய் இருக்கின்றனர். அதனால் நம் மீதும், பிள்ளை பெறுவதிலும் மனைவிக்கு வெறுப்பு ஏற்படலாம்.

இஸ்லாம் அனுமதித்த விடயங்களை பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.

அவள் நோயுற்று களைப்படைந்து இருந்தால் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுங்கள்.

குடும்ப விடயங்களை உங்கள் மனைவியின் ஆலோசனை பெற்ற பின்பே செய்யுங்கள். 

நீங்கள் வெளியில் இருக்கும் போது எந்நேரமும் மனைவியுடன் தொடர்பாகவே இருங்கள். (டெலிபோன், whatsup   போன்றவற்றின் மூலமாக) 

குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தை ஓரளவேனும் அவளது கையில் கொடுத்துவிடுங்கள். 

திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பொருள்களை வாங்கிக் கொண்டு வாருங்கள்..

திருமணம் முடித்த பின் தனது மனைவியை அடிமை என நினைத்துக்கொண்டு அவளை துன்புறுத்தக்கூடாது. அவளது சிறந்த நண்பன் என கருத்திற்கொண்டு நெருக்கமாக பழகுங்கள். தனது கணவன் தனக்கு அல்லாஹ்வினால் கிடைத்த அருட்கொடை என நினைத்து அவள் மகிழ்ச்சியடைவாள்.

எல்லா காரியங்களிலும் அவளுக்கு முன்மாதிரியாக இருங்கள். அவள் மதிக்கும்படியாக நடந்துகொள்ளுங்கள்.

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளுங்கள். விவாதம் வேண்டாம் அது குடும்ப வாழ்க்கைக்கு நஞ்சாகும்.

அழகாக காட்சியளிக்கவும், சுத்தமாக இருக்கவும் முயற்சி செய்யுங்கள். அவை உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.

மனைவியை மிக்க கவனமாக கையாளுங்கள். அவள் ஒரு கண்ணாடி பாத்திரம் போன்றவள். அவள் மனது எளிதில் உடைந்துவிடக் கூடியது.

வீண் சந்தேகம் வேண்டாம். அது உங்கள் இருவரையும் தூரமாக்கிவிடும். அவளது குறைகளை துருவித்துருவி ஆராயாதீர்கள்.

அவளது குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லோரிடமும் குறைகள் உள்ளன.
நபியவர்கள் நவின்றார்கள் ( பெண்கள் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டவர்கள்.அதன் மேற்பகுதி வளைந்திருக்கும். அதை நேராக்கப் போனால் உடைந்துவிடும், அவ்வாறே விட்டோம் என்றால் வளைந்ததாகவே இருக்கும். எனவே பெண்கள் விடயத்தில் நடுத்தரமாக நடந்து கொள்ளுங்கள்)

நீ யாரை நேசிக்கிறாயோ 
அவருடன் மறுமையில் இருப்பாய்
நபி மொழி புகாரி:6171


Previous Post Next Post