ஸஹாபாக்கள் மீலாத் நபியை சிறப்பித்தார்களா?

• சில நாட்களாக சமூகவலைத்தலங்களில் மீலாத் நபி கொண்டாடலாம் இது இஸ்லாத்தில் உள்ள ஒன்று தான் என்று இதற்கு ஆதாரமாக  ஸஹாபாக்கள் மற்றும் மார்க்க இமாம்கள் மீது சில செய்திகளை இணைத்து கூறுகிறார்கள்! ஆனால் இது அனைத்தும் அடிப்படை அற்ற ஆதாரம் ஆகும் இதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்!

• அல்லாமா இப்னு ஹஜர் மக்கி ஹைதமி (ரஹ்) அவர்கள் எழுதி ஒரு நூலில் இருந்து தான் இவ்வாறான செய்திகளை பரப்புகிறார்கள்! அவற்றில் சில ;

1) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மவ்லிதை ஓதுவதற்காக ஒரு திர்ஹம் செலவு செய்பவர் சொர்க்கத்தில் எனது தோழராக இருப்பார்!

(அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு)

2) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மவ்லிதை கண்ணியப்படுத்தியவர்
இஸ்லாத்தை உயிர்ப்பித்தவராவார்!

(உமர் ரலியல்லாஹு அன்ஹு)

3) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மவ்லிதை ஓதுவதற்காக ஒரு திர்ஹம் செலவு செய்தவர் பதுறு , ஹுனைன் போர் முனைகளில் கலந்து
கொண்டவரைப் போலாவார்!

(உதுமான் ரலியல்லாஹு அன்ஹு)

4) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை கண்ணியப் படுத்தியவர், மவ்லிது ஓதக்கூடியவர் ஈமானுடனேயே மௌத்தாவார் சுவனத்தில் கேள்வி இன்றி பிரவேசிப்பார்!

(அலி ரலியல்லாஹு அன்ஹு)

• இது மட்டும் அல்லாமல் ஷாபிஈ இமாம் கூறினார்கள் ஹனபி இமாம் கூறினார்கள் என்று எல்லாம் ஏகப்பட்ட கட்டுக்கதைகளை உருவாக்கி ஸஹாபாக்கள் மீதும் மார்க்க அறிஞர்கள்  பெயரில் கூறுகிறார்கள்!

~ இந்த செய்திகளை பற்றியும் அதன் தரம் பற்றியும் இன்ஷாஅல்லாஹ் பார்ப்போம்!

1) ஸஹாபாக்கள் மற்றும் இமாம் ஷாபிஈ ஹனபி இமாம்கள் எல்லாம் மீலாத் தினத்தை ஆதரித்து கூறி உள்ளார்கள் என்று அல்லாமா இப்னு ஹஜர் மக்கி ஹைதமி (ரஹ்) அவர்கள் எழுதிய நிஃமத்துல் குப்ரா மற்றும் இஆனதுத்தாலிபீன் என்ற நூலில் குறிப்பிட்டு உள்ளார்கள் ஆனால் இந்த செய்திகளுக்கு எல்லாம் எந்த ஆதாரமும் கொடுக்க வில்லை! எந்த அறிவிப்பாளர் தொடரும் கொடுக்க வில்லை! வெறும் ஒரு செய்தியாக மட்டுமே இதை பதிவு செய்து உள்ளார்கள்!

2) அல்லாமா இப்னு ஹஜர் ஹைதமி (ரஹ்) அவர்கள் வாழ்ந்த காலம் ஹிஜ்ரி 10-ஆம் நூற்றாண்டு ஆகும்! இமாம் அவர்கள் எந்த ஸஹாபியும் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை! தான் யாரிடம் இந்த செய்திகளை கேட்டோம் இதற்கு என்ன ஆதாரம் என்று எந்த ஒன்றையும் இமாம் அவர்கள் குறிப்பிட வில்லை!

3) 10-ஆம் நூற்றாண்டு காலத்திலயே இமாம் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி (ரஹ்) - இமாம் முஜத்தித் அல்ஃபஸானி (ரஹ்) - முல்லா அலி காரி (ரஹ்) -  அல்லாமா ஸுயூத்தி (ரஹ்)   இவ்வாறு மார்க்க அறிஞர்கள் நிறைய பேர் வாழ்ந்து உள்ளார்கள் ஆனால் யாரும் இந்த மீலாத் என்ற வார்த்தை கூட எந்த கிதாப்களிலும் குறிப்பிட வில்லை!

• இமாம் அல்லாமா ஸய்யித் அஹ்மத் ஆபிதீன் ஷாமி அவர்கள் 'நிஃமத்துல் குப்ராவின்' விளக்கவுரை 'நஷ்ருத்துர் அலா மவ்லிதி இப்னு ஹஜர்' 
என்ற பெயரில் நூல் எழுதியுள்ளார்கள்!

• அதில் இப்னு ஹஜர் (ரஹ்) உடைய நூலில் இருந்து பலதரப்பட்ட மேற்கோள்களை அல்லாமா யூசுஃப் இப்னு இஸ்மாயில் அவர்கள் மஜ்மஉல் பிஹார் என்ற நூலில் 3 : 337 & 374 வரை எடுத்தெழுதியுள்ளார்! இதில் மீலாத் பற்றி ஸஹாபாக்கள் கூறி உள்ளார்கள் என்ற ஒரே ஒரு செய்தியை கூட இமாம் அவர்கள் தனது நூலில் குறிப்பிட வில்லை! ஏன் என்றால் இதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை அறிவிப்பாளர் தொடரும் இல்லை!

• ஸஹாபாக்கள் மற்றும் நல்லோர்கள் மீலாத் நபியை ஆதரித்து சிறப்பித்து கூறி உள்ளார்கள் என்ற அனைத்து செய்திகளும் பொய்யானவை என்று பரேல்விய அறிஞர் முஃப்தி ஸய்யித் ஸாபிர் ஹுஸைன் அவர்கள் 'ஈதே மீலாதின்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்ர் ஜன்த் இஸ்லாஹி தலபே பெஹ்லூ' நூலின் 64-ஆம் பக்கத்தில் எடுத்துக்கூறி பொய்யை ஒப்புக் கொண்டுள்ளார்கள்!

• மொவலித் பொறுத்த வரை இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்றாகும்! இது மார்க்கத்தில் உள்ள ஒன்றாக இருந்தால் இதை பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறி இருப்பார்கள் சிறப்பித்து கொண்டாடி இருப்பார்கள்! ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எதுவும் செய்யவில்லை பிறருக்கு கூறவும் இல்லை!

• அமல் செய்வதில் நம்மை விட அதிகம் ஆர்வம் கொண்ட ஸஹாபாக்கள் இதை நமக்கு முன்பே செய்து இருப்பார்கள் ஆனால் இவ்வாறு யாரும் செய்யவில்லை! பிறரை செய்ய சொல்லவும் இல்லை! அவ்வாறு இருந்து இருந்தால் ஹதீஸ்களில் தெளிவாக இடம் பெற்று இருக்கும்! அல்லது மார்க்க அறிஞர்கள் இதை பற்றி கூறி இருப்பார்கள்!
Previous Post Next Post