தாவூத் நபியின் மீது இட்டுக் கட்டும் பிஜே?

 -மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்-

இதைபடித்து விட்டு, வழமைப் போல ஏச ஆரம்பித்து விடாதீர்கள். சுட்டிக் காட்டப் படுவது சரியாக இருப்பின் சம்பந்தப்பட்டவரைப் பற்றி யோசியுங்கள்? பிழையாக இருப்பின் எனக்கு சுட்டிக் காட்டவும். அதையும் மீறி ஏசி உங்கள் நன்மைகளை எனக்கு அனுப்பி வைக்க ஆசைப் பட்டாலும் எனக்கு பிரச்சனை கிடையாது. என்றாலும் ஏசியதற்காக மறுமையில் அல்லாஹ்விற்கு முன் நீங்கள் முப்லிசாக மாறிவிடலாம்?

சரி விடயத்திற்கு வருகிறேன். பிஜேயின் குர்ஆன் மொழிப் பெயர்ப்பில் அடிகுறிப்பு 337 லில் தாவூத் நபி செய்த தவறு? என்ற சிறு குறிப்பில் தாவூத் நபி பொது மக்களுடைய காணிகளை அபகரித்தாக எந்த ஆதாரமும் இல்லாமல கண் மூடித்தனமாக எழுதியுள்ளார். முதலில் அவரின் குறிப்பில் உள்ளதை அப்படியே தருகிறேன் வாசியுங்கள்.

“337. தாவூத் நபி செய்த தவறு
இவ்வசனத்தையொட்டி(திருக்குர்ஆன்38-21-25)திருக்குர்ஆன் விரிவுரை என்ற பெயரில் ஏராளமான கட்டுக் கதைகளை எழுதி வைத்துள்ளனர். இவற்றில் எதுவும் ஏற்க தக்கதாக இல்லை.

தாவூத் நபிக்கு 99 மனைவிமார்கள் இருந்ததாகவும், பின்னரும் இன்னொருவரின் மனைவியை அபகரித்துக் கொண்டதாகவும் சில விரிவுரையாளர்கள் புளுகி வைத்துள்ளனர். இதற்கு ஏற்க தக்க எந்த சான்றும் இல்லை. யூத,கிறிஸ்தவ வேதங்களில் கூறப்பட்டுள்ள கட்டுக் கதை தான் இதற்கு சான்று.

இறைத் துாதர்கள் இது போன்ற ஈனச் செயலில் ஈடுபட மாட்டார்கள் என்ற சாதாரண அறிவுக் கூட இவர்களுக்கு இருக்கவில்லை.

தாவூத் நபியவர்கள்செய்த ஒருதவறை இறைவன் சுட்டிக் காட்டிஅவரும் திருத்திக் கொண்டார்என்ற செய்தியை மட்டும் இறைவன் இங்கே குறிப்பிடுகிறான்.படிப்பினை பெறுவதற்கு இதுவே போது்மானதாகும்
(தொடர்ந்து பிஜேயின் கைசரக்கை கவனியுங்கள் )

தாவூத் நபி மன்னராக இருந்ததால் அரண்மனையை விரிவுபடுத்தவதற்காக சாதாரண மக்களின் நிலத்தை கையகப் படுத்தியது போன்ற ஒரு தவறை செய்திருக்க கூடும். இது போன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்திக் காட்டி இறைவன் அவரை திருத்தியிருக்க கூடும்.

இதை நேரடியாக அவரின் குர்ஆன் தப்ஸீரில் காணலாம்.

சில தப்ஸீர் ஆசிரியர்கள் தாவூத் நபி செய்யாததை செய்ததாக சொல்கிறார்கள் என்று கூறி அவர்களுக்கு சாதாரண அறிவுக் கூட இல்லை என்று சொல்லி விட்டு, பிஜே எந்த ஆதாரமும் இல்லாமல் அவர்களின் பாணியிலே தாவூத் நபி பொது மக்களின் காணிகளை அபகரித்திருக்க கூடும் என்று தாவூத் நபி மீது பயப்படாமல் இட்டுக் கட்டி சொல்கிறார் என்றால்? இதை நீங்கள் சரி காண்கிறீர்களா?

தாவூத் நபி பொது மக்களின் காணியை அபகரித்தார் என்பதை குர்ஆன் வசனத்தின் மூலமாகவோ அல்லது ஹதீஸின் மூலமாக சரி பிஜேயினால் நிருபிக்க முடியுமா?

அதுவும் அப்படி நடந்து இருக்கலாம் (செய்திருக்க கூடும்) என்று சந்தேகத்தோடு தான் பிஜே எழுதியுள்ளார்.

தப்ஸீர் விரிவுரையாளர்கள் பொய்யர்கள் என்று கோடிட்டு காட்டி விட்டு, பிஜேயும் மிகப் பெரிய பொய்யை சொல்ல வருகிறார்? தாவூத் நபி மீது இட்டுக் கட்டுகிறார்?

குர்ஆன் வசனத்திற்கோ அல்லது ஹதீஸிற்கோ ஸஹாபாக்களின் விளக்கத்தை எடுத்துக் காட்டினால் ஸஹாபாக்களின் விளக்கம்எங்களுக்கு தேவை கிடையாது என்று வீராப்பு பேசுபவர்கள் தாவூத்நபியின் மீது இட்டுக் கட்டிய செய்திக்கு ஆதாரத்தை காட்ட முடியுமா? பிஜே சொன்னால் எல்லாம் சரியா?

ஒரு பிழையை சரி கட்டுவதற்காக பிறரை சாடாதீர்கள்.பிஜே தவறு செய்தாலும் துாக்கி வீசுவோம் என்று சொல்பவர்களே ! அவரை வீச தேவை கிடையாது உங்கள் மனசாட்சி படி சற்று நிதானமாக சிந்தியுங்கள்.!

ஸஹீஹான ஹதீஸை முரண் என்று மறுக்கும் பிஜே ஆதாரமில்லாத இந்த செய்தியை எங்கிருந்து கொண்டு வந்தார்?

அவரின் தப்ஸீரை ஒரு தடவைக்கு இரண்டு தடவை நிதானமாக வாசித்து முடிவெடுங்கள். இதன் மூலம் தனது சொந்த கருத்துக்களை திணிக்க வருகிறார் என்பது தெளிவாகிறது. நீ என்ன பிஜேயை விட பெரிய ஆளா? என்று பழைய பல்லவியை பாடாமல் பிஜேயால் சொல்லப்பட்ட செய்தியை சற்று கவனியுங்கள்.
தாவூத் நபி செய்த தவறு என்ன என்பதை நபி (ஸல்) அவர்கள் கூறும் போது

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தாவூத் – அலை – அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களின் மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது” என்று கூற, மற்றொருத்தி அவளிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது” என்று கூறினாள். எனவே, இருவரும் (தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள) தாவூத்(அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் (அவ்விரு பெண்களில்) மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (அவர்களின் தீர்ப்பில் கருத்து வேறுபட்டு) அப்பெண்கள் இருவரும் சுலைமான்(அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர். அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், ‘என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதமுள்ள) ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப்) பிளந்து (பங்கிட்டு) விடுகிறேன்” என்று கூறினார்கள். அப்போது இளையவள், ‘அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன்” என்று (பதறிப்போய்) கூறினாள். உடனே, சுலைமான் (அலை) அவர்கள் ‘அந்தக் குழந்தை அ(ந்த இளைய)வளுக்கே உரியது’ என்று தீர்ப்பளித்தார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி 3427

தாவூத்நபி செய்த தவறு என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடு்ம் செய்தி நேரடியாக இதுதான் என்று கூறப்படாவிட்டாலும், அந்த வசனத்திற்கு இந்த ஹதீஸின் செய்தி பொருத்தமாகவும்,நெருக்கமாகவும் உள்ளது.

அல்லது என்ன தவறு என்று அல்லாஹ் குறிப்பிடாததினால் தெரியாது என்று சொல்வதுதானே அறிவுடையோருக்கு அழகு.

அதைவிட்டுவிட்டு பொதுமக்களுடைய காணியை அபகரித்தார் என்பது அபாண்டம் இல்லையா? தவறாக சொல்லிவிட்டு, நான் சொல்வதுதான் சரி என்றால், இவரின் பிழையான பிடிவாதத்தை பாருங்கள்!

மேலோட்டமாக விளங்கக்கூடிய இதிலேயே இப்படி முரட்டு பிடிவாதம் என்றால், ஏனைய மார்க்க விடயங்களில் சொல்லவா வேண்டும்?

அல்லது நேரடியான ஆதாரத்தைக் காட்டுங்கள்.

சிந்தியுங்கள்செயல்படுங்கள். அல்லாஹ்வேபோதுமானவன்.
Previous Post Next Post