முவத்தா மாலிகில் தராவீஹ் குழப்பத்திற்கு தெளிவான பதில்.

253 222 - وروى مالك في هذا الباب ، عن محمد بن يوسف ، عن السائب بن يزيد ، أنه قال : أمر عمر بن الخطاب أبي بن كعب وتميما الداري أن يقوما للناس بإحدى عشرة ركعة . قال : وقد كان القارئ يقرأ بالمئين ، حتى كنا نعتمد على العصي من طول القيام ، وما كنا ننصرف إلا في فروع الفجر .
உமர் பின் கத்தாப் ரழி அவர்கள் உபை பின் கஃப், தமீமுத் தாரீ ரழி ஆகிய இருவரையும் மக்களுக்கு 11 ரக அத்துக்கள் தொழுவிக்கும்படி ஏவினார்கள். அவர்கள் நூறு நூறு வசனங்கள் ஓதி தொழுவிப்பார்கள் . நாங்கள் பஜ்ர்(காதிப்) உதயமாகும் போதே வீடுகளுக்கு திரும்பிச் செல்வோம்  என நபித்தோழர்கள் கூறுகிறார்கள்.
(முவத்தா மாலிக்)

தெளிவு:

இமாம் புகாரி ரஹி அவர்கள் தராவீஹ் என்ற அத்தியாயத்திலும் சரி தஹஜ்ஜுத்+ வகத்ரிலும் சரி நபி (ஸல்) அவர்களின் ரமளான் கால தொழுகையின் ரகஅத்துக்களின் எண்ணிக்கையாக 11,13 ரகஅத் தொழுகைகளையே பதிவு செய்துள்ளார்கள்.

உமர் (ரழி) அவர்களும் அந்த ஹதீஸுக்கு அமைவாகவே 11 தொழுவிக்கும்படி தனது ஆட்சியில் கட்டளை இட்டுள்ளதாக முவத்தாவின் விரிவுரை நூலான 
تنوير الحوالك شرح موطأ مالك 
என்ற நூலில் இமாம் சுயூத்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

பாவம் இந்த கப்ருகளை கட்டி அதற்கு நேர்ச்சை செய்து அல்லாஹ்வின் தரகர்களாக அவர்களை நம்பும் மௌலவிகள். எதையும் பார்ப்பதோ, தேடிப்படிப்பதோ கிடையாது. தனக்கு சார்பான ஒருவர் 23 ரக அத்துக்களே தொழ வேண்டும் என ஒரு பயான் போட்ட கையோடு அதனை வேத வரியாக நம்பி பரப்பி விடுகின்றனர்.

இதில்
மத்ஹபு வழி நடப்பதாக கூறுவோர், முரண்பாட்டாலும் உடன்பாடு காண முற்படும் குழுவினர் என்போரின் நிலை இன்னும் பரிதாபம்.

தீர்வு உள்ள ஒரு விஷயத்தைக் கூட தீர்வாக முன்வைக்க திராணியற்றவர்களாகவும் சபை குழப்பிகளாகவும் இருக்கின்றனர்.

அல்லாஹ்வே அனைவருக்கும் மார்க்க விளக்கம் தந்து, நேர்வழிகாட்டப் போதுமானவன்.

எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
Previous Post Next Post