அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல் ஆஸ் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களிடம்," இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது"? எனக் கேட்டார்.
அதற்கு நபி ஸல் அவர்கள் "( பசித்தோருக்கு ) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்த வருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் ( முகமன் ) கூறுவதுமாகும்" என்று பதிலளித்தார்கள்.19
நூல் : சுனனுந் நஸாயீ தமிழாக்கம் ஹதீஸ் 4914
விளக்கக் குறிப்பு :
இந்த நபிமொழியிலிருந்து உணவளித்தல் சிறந்த நல்லறமாகும் என்பதும் ,பணிவின் அடையாளமாய் பாசத்தின் முகவரியாய்த் திகழும் ஸலாமைப் பரவலாக்கலின் சிறப்பு.
ஸலாம் கூறும்போது அறிந்தவர் - அறியாதவர் என்ற பாகுபாடு காட்டக்கூடாது உள்ளிட்ட பல செய்திகளை அறிய முடிகிறது.
மனிதனுக்கு மனிதன் அளிக்கும் பாதுகாப்பில் உணவளித்தல் கையினால் ஏற்படும் பாதுகாப்பையும் ஸலாமுரைத்தல் நாவினால் ஏற்படும் பாதுகாப்பையும் குறிக்கும் ( ஃபத்ஹுல் பாரீ )