நெருக்கடியிலிருந்து வெளியேற..

அல்லாஹுத்தஆலா கூறுகிறான்:

"இன்னும், எவர் அல்லாஹ்வை அஞ்சுகிறாரோ, அவருக்கு அவன் (சோதனைகளிலிருந்து) ஒரு வழிவகையை உண்டாக்குவான். இன்னும், அவர் எண்ணிப் பார்க்காத பக்கத்திலிருந்து அவருக்கு அவன் உணவளிப்பான்."
அல்குர்ஆன் (அத்தலாக்: 2-3)

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

"இறைவனை அஞ்சுபவர்களுக்கு நெருக்கடிகளிலிருந்து விமோசனத்தையும் (வெளியேறும் வழியையும்), நன்மைகளுக்கான வாழ்வாதாரத்தையும் வழங்குவதாக அல்லாஹ் வாக்குறுதி அளித்துள்ளான்."
(மஜ்மூஉல் ஃபதாவா)

ஷேக் இப்னு உதைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

"நீங்கள் எப்போது அல்லாஹ்வை அஞ்சுபவராக இருக்கிறீர்களோ, அப்போது ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் அல்லாஹ் உங்களுக்கு ஒரு வழிவகையை உண்டாக்குவான் என்பதில் உறுதியான நம்பிக்கை கொள்ளுங்கள், அதை முழுமையாகச் சார்ந்திருங்கள்."
(ஷர்ஹ் ரியாளுஸ் ஸாலிஹீன்)

இந்த இறைவசனமும் அறிஞர்களின் பொன்மொழிகளும் உங்களுக்கு அமைதியையும், இறைநம்பிக்கையையும் அதிகரிக்க உதவுவதாக அமையும்.
Previous Post Next Post