நிச்சயமாக அல்லாஹ்வை அவனுடைய அடியார்களில் பயப்படுவதெல்லாம் (அவனைப்பற்றி அறிந்த) கல்விமான்கள் தாம். (அல்குர்ஆன் : 35:28)
إِنَّمَا يَخْشَى اللهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
அல்குர்ஆன் விரிவுரையாளர் ஸஃதீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
எவர் அல்லாஹ்வை அதிகம் அறிந்திருக்கிறாரோ அவரே அவனை அதிகம் அஞ்சுவார்.
அல்லாஹ்வின் அச்சம் அவரைப் பாவத்தில் இருந்து தவிர்ந்து நடக்க வைப்பதோடு,
தான் பயப்படுகின்ற அல்லாஹ்வை (மறுமையில்) சந்திப்பதற்கு (இம்மையில்) தயாராகவைக்கும்.
இது கல்வியின் தனிச்சிறப்பிற்குச் சான்றாக இருக்கின்றது.
ஏனெனில், கல்வி (எம்மை) இறையச்சத்தின் பக்கம் அழைத்துச் செல்லும்.
நூல்: தப்ஸீருஸ் ஸஃதீ
قال السعدي رحمه الله تعالى:
فكل من كان باللّه أعلم، كان أكثر له خشية، وأوجبت له خشية اللّه، الانكفاف عن المعاصي، والاستعداد للقاء من يخشاه، وهذا دليل على فضيلة العلم، فإنه داع إلى خشية اللّه.
(تفسير السعدي)