நபியவர்கள் பெயரை கேட்டால் கண்ணை தடவி விரலை முத்தமிடுவது ஸுன்னதா?

ஐயம்:

நபியவர்கள் பெயரை கேட்டால் கண்ணை தடவி விரலை முத்தமிடுவது ஸுன்னதா ?

தெளிவு:

ஹாபிஸ் அஸ்-சகாவி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:

ஹதீஸ்: (பெரு விரல்களின் உள்ளே தொட்டு  கண்களைத் 
 தேய்த்துக் கொண்டு முத்தமிடுவது, முஅத்தின் கூறும் "அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்" என்ற வாசகத்தைக் கேட்டபோது, அதைப் பின்பற்றி "அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரழீது பில்லாஹி ரப்பன் வ பில் இஸ்லாம் தீனன் வ பிமுஹம்மதின் நபிய்யன்" என்று கூறுவது):

இதை அத்-தைலமி தனது "அல்-பிர்தௌஸ்" என்ற நூலில் அபூபக்ர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு வழியாகக் குறிப்பிட்டுள்ளார். முஅத்தின் "அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்" என்று கூறியபோது, அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு இவ்வாறு செய்தார்: பெரு விரல்களின் உள்ளைப் பகுதியைத் தொட்டு முத்தமிட்டு, அதைக் கண்களில் தொட்டார். பின்னர், "எவர் என் தோழர் செய்ததைப் போல செய்கிறாரோ, அவர்களுக்கு எனது ஷபாஃஅத் (பரிந்துரை)கிடைக்கும்" என்றார். ஆனால் இது ஆதாரப்பூர்வமான நபிமொழி அல்ல[என்று பிரபலியமான ஷாபிஃ மத்ஹபைச் சேர்ந்த இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி அவர்களின் மாணவர்களில் ஒருவரான இமாம் சகாவி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்].

இது தொடர்பில் வரும் அனைத்து அறிவிப்புகளும் ஆதாரத்துக்கு உரியது அல்ல, "இந்த அனைத்தும் மறுப்புக்கு உரியது ,எதுவும் அங்கீகாரம் பெற்றது அல்ல" என்று முடிக்கிறார். இது "அல்-மகாசித் அல்-ஹசனா" நூலிலிருந்து (பக்கங்கள் 604-606).

قال الحافظ السخاوي رحمه الله :
حديث ( مسح العينين بباطن أنملتي السبابتين بعد تقبيلهما عند سماع قول المؤذن أشهد أن محمدا رسول الله مع قوله أشهد أن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ) :
ذكره الديلمي في " الفردوس " من حديث أبي بكر الصديق أنه لما سمع قول المؤذن : " أشهد أن محمدا رسول الله " ، قال هذا وقبل باطن الأنملتين السبابتين ومسح عينيه فقال : " من فعل مثل ما فعل خليلي فقد حلت عليه شفاعتي " : ولا يصح . "
ونقل في هذا الموضع ، بعضا من الحكايات في ذلك ، ثم قال :
" ولا يصح في المرفوع من كل هذا شيء " انتهى من"المقاصد الحسنة" (ص 604-606)

நபியவர்களின் பெயரை கேட்டால் சலவாத்து சொல்ல வேண்டும் இதுதான் நமது மார்க்கம் நமக்குச் சொன்ன கொள்கை. 

நபியவர்கள் பெயரை கேட்டால் கண்ணை தடவி முத்தமிடுவது மார்க்கத்திற்கு முரணான அனாச்சாரம். 

எதெல்லாம் வணக்க வழிபாட்டில் சுன்னத்துக்கு எதிரானதாக இருக்குமோ அதெல்லாம் பித்அத் ஆகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும்.

அல்லாஹு அஃலம்.

- உஸ்தாத் SM. இஸ்மாயீல் நத்வி
Previous Post Next Post