முஸ்லிம் என்பவன்

"முஸ்லிம்" என்கின்றவன்.

ஒருவன் இஸ்லாமிய நாட்டில் வாழ்வதனாலோ, இஸ்லாமியப் பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுவதனாலோ 
முஸ்லிமாகிவிட மாட்டான். 

முஸ்லிம் என்றால் அல்லாஹ் ரஸுலுக்கு
முற்றிலும் கட்டுப்பட்டவன் என்று  பொருள். 

கொள்கைக் கோட்பாடுகள் அற்றவன் முஸ்லிமோ, முஃமினோ கிடையாது. 

 கொள்கை ஒன்றாகவும் நடத்தை வேறொரு முறையிலும் இருந்தாலும் அவன் உண்மையான முஸ்லிம் கிடையாது. 

"உண்மை முஸ்லிம்" அவனைப் படைத்தவனுக்கு  அனைத்திலும் கட்டுப்பட்டவன்,அவனின் 
வரம்புகளை மீறாத அடிமை. 

நினைத்ததைச் செய்யும் சுதந்திரம் அற்றவன். படைத்தவன் அவனுக்கு 
அனுமதித்த வற்றை மாத்திரம் 
அனுபவிப்பவன். 

அல் குர்ஆனையும்,   அல் ஹதீஸையும்
வாழ்கை நெறியாகக்  கொண்டவன்.

இறை வேதத்துடன் முரண்பட்டு 
பெண் உரிமை பேசாதவன்.

படைத்தவன் விதித்த சட்டங்களை 
எதிர்த்து ஊடகச் சுதந்திரம் எனும் 
பெயரில் வஹியை மிதிக்காதவன்..

மாற்று மதத்தவர்களை திருப்திபடுத்த
முஸ்லிம் என்ற தன் அடையாளத்தை
சிதைக்காதவன்.

மீடியாக்கள் சுமந்துவரும் இஸ்லாத்தைப் பற்றிய  நச்சுக் கருத்துக்களை வரவேற்று முற்போக்கு வாதம் பேசி தன் பங்குக்கு 
கருத்துச் சொல்லாதவன்.

பெரும்பாவங்களை விட்டும் முற்றாக 
ஒதிங்கி நடப்பதுடன், தீமைகளுக்குத்
துணை போகாதவன்.

மறுமையை இலக்காகக் கொண்டு 
அல்லாஹ்வும் அவனின் தூதரும் 
எவைகளைத் தடுத்துள்ளார்களோ 
அவற்றை விருப்பத்துடன் தவிர்த்து 
நடப்பவனே உண்மை முஸ்லிம்.

_இன்திகாப் உமரீ
Previous Post Next Post