அனைத்திற்கும் ஓர் எல்லை உண்டு. விலங்குகளிலிருந்து மனிதனை வேறு பிரித்துக்காட்டும் தனித்துவம் பகுத்தறிவுக்கு உண்டு என்ற போதிலும் அனைத்தையும் பகுத்தறிவால் உய்த்துணர முடியாது என்பதே எதார்த்தம்.
இமாம் இப்னு கல்தூன் (ரஹ்) அவர்கள் தனது பிரசித்தமான நூலான "முகத்திமா"வில் பகுத்தறிவின் வகிபாகம் குறித்து பேசும் போது எளிமையாக பின்வரும் கருத்தை பதிவுசெய்கிறார்கள் :
'ஏகத்துவ இறைக்கோட்பாடு, மறுமை நிகழ்வுகள், இறைவனின் பண்புகள் போன்றவற்றை பகுத்தறிவு எனும் தராசில் நிறுத்து பார்ப்பது சாத்தியமற்றது. தங்கம் நிறுக்கும் தராசில் மலையை நிறுத்து பார்க்க நினைப்பது போன்றது. அதற்காக பகுத்தறிவு தராசு போலியானது என்பது அர்த்தமல்ல. பகுத்தறிவுக்கும் எல்லை உண்டு என்பதால், இறை பண்புகள், மறுமை முதலானவற்றை அறிய வேண்டுமென்று கருதி பகுத்தறிவின் எல்லையை தாண்டுவது முடியாத காரியம்'
நூல் : ' ஷர்ஹுல் அகீதா அத்தஹாவிய்யா' , பக் : 19
ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)