தொகுப்பு: மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.
1. இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
உள்ளங்களின் சட்டங்களை அறிந்து கொள்வதென்பது, உடலுறுப்புகளின் சட்டங்களை அறிந்து கொள்வதை விட மிக முக்கியமானதாகும். ஏனெனில், அதுவே அதனுடைய அடிப்படையாகும். மேலும் உடலுறுப்புகளின் சட்டங்களானது அதிலிருந்துள்ள கிளைப்பிரிவாகும்.
பதாஇ'உல் ஃபவாயித் 3/188
2. உமர் இப்னு அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
لَا تَكُنْ مِمَّنْ يَتَّبِعُ الْحَقَّ إِذَا وَافَقَ هَوَاهُ، وَيُخَالِفُهُ إِذَا خَالَفَ هَوَاهُ
சத்தியமானது தன்னுடைய மனோ இச்சைக்கு ஒத்துப்போனால் அதைப் பின்பற்றுபவனாகவும், தன்னுடைய மனோ இச்சைக்கு மாறுபட்டால் அதனுடன் மாறுபடுபவனாகவும் இருக்கக்கூடிய (மக்களில்) இருந்து நீ இருக்காதே.
ஜாமி'உல் மஸாஇல், 6/143
3. இப்னு மஸ்வூத் رضي الله عنه அவர்கள் கூறினார்கள்:
كَمْ مِنْ مُرِيدٍ لِلْخَيْرِ لَنْ يُصِيبَهُ
நன்மையை நாடக்கூடிய எத்துனையோ பேர் அதனை அடைந்து கொள்வதே இல்லை
அத்'தாரிமி 210
அஷ்ஷைஃக் அல்அல்பானி ரஹிமஹுல்லாஹ் இந்தக் கூற்றிற்கு அளித்த விளக்கம்:
அதாவது, உங்களில் ஒருவருடைய எண்ணம் நன்றாக இருந்தால் (மட்டும்) போதாது. அந்த நல்ல எண்ணத்துடன் நல்லதைத் தேடிப் பயணிக்கக்கூடிய அவருடைய அந்த பாதையும் தன்னகத்தே நல்லதாக கட்டாயமாக இருத்தல் வேண்டும். அவ்வாறு ஒருபோதும் இருக்க வாய்ப்பில்லை, அது (அவர் பயணிக்கக்கூடிய அப்பாதையானது) அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடைய பாதையாக இருந்தாலே தவிர.
முதஃபர்ரிகாத் லில்அல்பானி, 063
4. அபுல் ஆலியாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
“என்னை இஸ்லாத்தின் பக்கம் வழிகாட்டியது, மேலும் என்னை ஹரூரியாக (ஃகாரிஜியாக) ஆக்காமல் இருந்தது” என இரண்டு நிஃஅமத்களை அல்லாஹ் என் மீது திட்டமாக அருள் புரிந்துள்ளான், அவ்விரண்டில் எது மிகச் சிறந்தது என்று எனக்குத் தெரியாது.
ஸியர் அஃலாமிந்நுபலா, 4/208
5. அபூபக்ர் அல்மர்ரூதி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
“யார் இஸ்லாத்திலும், ஸுன்னாஹ்விலும் மரணித்தாரோ, அவர் நலவில் மரணித்து விட்டாரா?” என்று நான் அபூ அப்தில்லாஹ் (அஹ்மத் இப்னு ஹன்பல்) அவர்களிடம் கேட்டேன்.
அவர்கள்: “அமைதியாக இரு! யார் இஸ்லாத்திலும் ஸுன்னாஹ்விலும் மரணித்தாரோ, அவர் அனைத்து நலவிலும் மரணித்து விட்டார்” என்று கூறினார்கள்.
الوَرَع 192
6. இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
شعار أهل البدعة هو ترك انتحال اتباع السلف
ஸலஃபுகளை (முன்மாதிரியாக) எடுத்துப் பின்பற்றுவதை விட்டு விடுவது, அஹ்லுல் பித்ஃஅஹ்வுடைய சின்னமாகும்.
மஜ்மூ'உல் ஃபதாவா, 4/155
7. அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
எவரொருவர் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடைய ஹதீஸை மறுப்பாரோ, அவர் அழிவின் விளிம்பில் இருக்கின்றார்.
அல்’அவாஸிம் வல்கவாஸிம் லிப்னில் வஸீர், 4/229
8. அல்பர்பஹாரி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
அறிவிப்புகளின் மீது குறை கூறக்கூடிய அல்லது அறிவிப்புகளை மறுக்கக்கூடிய அல்லது அறிவிப்புகள் அல்லாத மற்றதை விரும்பக்கூடிய ஒரு மனிதனைப் பற்றி கேள்விப்பட்டாய் என்றால், அவனுடைய இஸ்லாத்தில் சந்தேகம் கொள். மேலும், அவன் ஒரு பித்’அத்வாதி மனோ இச்சையைப் பின்பற்றுபவன் என்பதில் சந்தேகம் கொள்ளாதே!
ஷர்ஹுஸ் ஸுன்னாஹ், பக்கம்: 30, 31
9. இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
எவரொருவர் ஸஹாபாக்களை முன்மாதிரியாகக் கொள்ளாமல், மேலும் அவர்களுடைய வழியல்லாததைப் பின்தொடர்ந்து, அல்குர்ஆன் வஸ்ஸுன்னாஹ்வில் இருந்து எடுத்துக் கொள்வேன் என்று நினைக்கின்றாரோ, அவர் பித்'அத் மற்றும் வழிகேட்டைச் சேர்ந்த மக்களிலிருந்து உள்ளவராவார்.
முஃக்தஸர் அல்ஃபதாவா அல்மிஸ்ரிய்யாஹ், 1/556
10. ஸலஃபுகளில் சிலர் கூறினார்கள்:
எவர் நேசத்தைக் கொண்டு மட்டும் அல்லாஹ்வை வணங்குவாரோ, அவர் ஸின்தீக் ஆவார்.
எவர் ஆதரவைக் கொண்டு மட்டும் அவனை வணங்குவாரோ, அவர் முர்ஜி ஆவார்.
எவர் பயத்தைக் கொண்டு மட்டும் அவனை வணங்குவாரோ, அவர் ஹரூரி (ஃகாரிஜி) ஆவார்.
மேலும் எவர் நேசம், ஆதரவு மற்றும் பயம் ஆகியவற்றைக் கொண்டு அவனை வணங்குவாரோ, அவரே முஃமினும், முவஹ்ஹிதும் (தவ்ஹீத்வாதியும்) ஆவார்.
மஜ்மூ'உல் ஃபதாவா லிப்னி தைமிய்யாஹ், 10/207
11. இப்னு மஸ்வூத் ரதியல்லாஹு அன்ஹு கூறினார்கள்:
நிச்சயமாக நாங்கள் (நபிவழியைப்) பின்தொடர்வோம், (புதிதான விடயங்களை) தோற்றுவிக்க மாட்டோம். நாங்கள் பின்பற்றுவோம், பித்அத்களை ஏற்படுத்த மாட்டோம். மேலும், அறிவிப்புகளை பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நாங்கள் வழிதவற மாட்டோம்.
அல்இக்திஸாத் ஃபில் ‘இஃதிகாத், பக்கம் 214
12. சுஃப்யான் அத்’தவ்ரீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
மார்க்கம் என்பது அறிவிப்புகளைக் கொண்டு மட்டுமே, (சுய) கருத்துகளைக் கொண்டல்ல. மார்க்கம் என்பது அறிவிப்புகளைக் கொண்டு மட்டுமே, கருத்துகளைக் கொண்டல்ல. மார்க்கம் என்பது அறிவிப்புகளைக் கொண்டு மட்டுமே, கருத்துகளைக் கொண்டல்ல.
ஷர்ஹ் அஸ்ஹாபில் ஹதீஸ், பக்கம் 6
மேலும் அவர்கள் மற்றொரு இடத்தில் கூறியதாவது:
ஒரு அறிவிப்பைக் கொண்டே தவிர உன்னால் உனது தலையை சொரிந்து கொள்ள இயலுமெனில் அவ்வாறு செய்து கொள்.
அல்ஜாமி’இ லிஅஃக்லாகிர் ராவிய் வஆதாபிஸ் ஸாமி’இ, 1/142
13. இப்னு ஸீரீன் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
(ஒரு மனிதரை), அவர் அறிவிப்புகளின் மீது இருக்கும் காலமெல்லாம் (நேரான) பாதையின் மீது இருப்பதாக அவர்கள் (ஸலஃபுகள்) காண்பார்கள்.
அத்தாரிமீ 1/140
14. அஷ்ஷாதிபீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
ஒரு கருத்தானது ஸுன்னாஹ்வுடன் முரண்பட்டால், அது பித்ஃஅத் மற்றும் வழிகேடாகும்.
அல்இஃதிஸாம், 2/832
15. உமர் இப்னுல் ஃகத்தாப் رضي الله عنه அவர்கள் கூறினார்கள்:
“சுயகருத்துகளை உடைய மக்கள் ஸுன்னாஹ்வின் எதிரிகள் ஆவர். அவர்கள் ஹதீஸ்களை மனனம் செய்ய இயலாது போயினர், அதை அவர்கள் விளங்காது அவர்களை விட்டும் சென்று விட்டது. (அறியாதவற்றைப் பற்றி) கேள்வி கேட்கப்பட்டால், “எங்களுக்கு தெரியாது” என்று கூற வெட்கித்தனர். எனவே, தங்களுடைய சுய கருத்துக்களைக் கொண்டு ஸுன்னாஹ்விற்கு முரண்பட்டனர். இவர்களை விட்டும் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்!”
இ'லாமுல் முவக்கி’ஈன் 1/43
16. அஹ்மத் இப்னு அபீ அல்ஹவாரிய் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
எவரொருவர் அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களுடைய ஸுன்னாஹ்வைப் பின்பற்றாமல் ஒரு அமலை செய்வாரோ, அவருடைய அந்த அமலானது வீணானதாகும்.
அர்ரிஸாலாஹ் அல்குஷைரிய்யாஹ், 1/68
17. அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் ஹஃபிதஹுல்லாஹ் கூறினார்கள்:
இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொள்வதென்பது தக்லீதைக் கொண்டோ அல்லது ஒரு மனிதர் தன்னிடமிருந்து இட்டுக்கட்டி கூறுவதைக் கொண்டோ அல்ல. மார்க்கமானது அதற்கு கண்டிப்பாக அல்குர்ஆன் வஸ்ஸுன்னாஹ்விலிருந்து ஆதாரம் இருத்தல் வேண்டும்.
எனினும், ஒரு கருத்திலும் நிலையாக இல்லாத, மனிதர்களைத் தக்லீத் மட்டும் செய்யக்கூடிய, தனது மார்க்கத்தைப் பற்றி அறியாத ஒரு மனிதரைப் பொறுத்தவரையில், அவர் தனது மார்க்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள மாட்டார். மேலும், (இப்படிப்பட்டவர்) கப்ரிலே அதை (மார்க்கத்தைப்) பற்றிக் கேள்வி கேட்கப்பட்டால், “ஹா! ஹா! எனக்கு தெரியாது. மக்கள் ஏதோ கூறக் கேட்டேன். எனவே, நானும் கூறினேன்” என்று (கூறுபவரின் நிலைக்கு) உகந்தவராவார்.
எனவே, அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்தும், அவனது தூதர் ﷺ அவர்களுடைய ஸுன்னாஹ்விலிருந்தும் தனது மார்க்கத்தைப் பற்றி அறிந்து கொள்வது ஒரு மனிதரின் மீது கடமையானதாக இருக்கின்றது. இதனை கற்றுக் கொள்வதினாலே தவிர அறிந்து கொள்ள இயலாது.
ஷர்ஹ் ஸலாஸதில் உஸூல், பக்கம்: 156, 157
18. இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
எவரொருவர் “அஃக்பறனா (எங்களிடம் அறிவித்தார்)”, “ஹத்தஸனா (எங்களிடம் கூறினார்)” என்பதல்லாதவற்றின் பக்கம் உன்னை வழிநடத்தினாரோ, அவர் ஒன்று ஸூஃபிய கற்பனை அல்லது தத்துவ ஒப்பிடுதல் அல்லது சுய கருத்திற்கு நிச்சயமாக உன்னை வழிநடத்தி விட்டார். அல்குர்ஆன் மற்றும் அஃக்பறனா, ஹத்தஸனாவிற்குப் பிறகு முதகல்லிமூன்களின் சந்தேகங்கள், வழிகெட்டவர்களின் கருத்துக்கள், ஸூஃபிய்யாக்களின் கற்பனைகள் மற்றும் தத்துவவாதிகளின் ஒப்பிடுதல்களைத் தவிர வேறில்லை.
எவரொருவர் ஆதாரத்தை விட்டும் விலகி விட்டாரோ, அவர் நேரான பாதையை விட்டும் வழிதவறி விட்டார். இன்னும் அல்லாஹ்வின் பக்கமும், சுவர்க்கத்தின் பக்கமும் (இட்டுச்செல்லக்கூடிய) எந்தவொரு வழிகாட்டியும் இல்லை, அல்குர்ஆன் வஸ்ஸுன்னாஹ்வைத் தவிர.
அல்குர்ஆன் வஸ்ஸுன்னாஹ்வுடைய ஆதாரம் தொட்டு இல்லாத அனைத்து பாதைகளும், நரகத்துடைய மற்றும் விரட்டப்பட்ட ஷைத்தானுடைய பாதைகளிருந்து உள்ளதாகும்.
கல்வி என்பது எதன்மீது ஆதாரம் உள்ளதோ அதுவே, மேலும் அவற்றில் பயனுள்ளது என்பது தூதர் ﷺ அவர்கள் கொண்டு வந்ததே.
مَدارِجُ السّالِكِين، 2/439
إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ .19
அல்லாஹ் ஏற்றுக்கொள்வதெல்லாம் இறையச்சமுடைவர்களிடமிருந்து மட்டும்தான். (அல்குர்ஆன் 5:27)
இப்னு தைமிய்யா رحمه الله அவர்கள் கூறினார்கள்:
அதாவது, அமல்களில் அவனை அஞ்சக்கூடியவர்களிடமிருந்து (மட்டும்)தான்
அமல்களில் இறையச்சமானது இரு விடயங்களைக் கொண்டாகும்.
அவ்விரண்டில் ஒன்று: அல்லாஹ்விற்காக மட்டும் அதனை செய்வதாகும், அதானது அவர் அதைக் கொண்டு அல்லாஹ்வின் திருமுகத்தை நாடுவது, தனது இறைவனுக்கு செய்யும் வணக்கத்தில் எவரையும் இணையாக்காமல் இருப்பது.
இரண்டாவது: அது அல்லாஹ் ஏவிய மற்றும் அவன் விரும்புகின்றவற்றிலிருந்து உள்ளதாக இருப்பது. எனவே, அது ஷரீஅத்திற்கு உடன்பட்டதாக இருக்கும், அல்லாஹ் அனுமதியளிக்காத ஒருவர் மார்க்கமாக்கியதிலிருந்து உள்ளதாக இருக்காது...
جامع الرسائل 1/257
20. அஷ்ஷைஃக் அப்துல் அஸீஸ் அர்ராஜிஹீ ஹஃபிதஹுல்லாஹ் கூறினார்கள்:
இறையச்சம் அதுவே முன்னோர்கள் மற்றும் பின்னோர்களுக்குமான அல்லாஹ்வுடைய உபதேசமாகும்.
وَلَـقَدْ وَصَّيْنَا الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَاِيَّاكُمْ اَنِ اتَّقُوا اللّٰهَ
உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், இன்னும் உங்களுக்கும் அல்லாஹ்வையே பயந்து கொள்ளுங்கள் என்று திட்டவட்டமாக நாம் உபதேசம் செய்தோம். (அல்குர்ஆன் 4:131)
شرح كتاب السُنَّة للبَرْبَهارِي
21. இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
“எவரொருவர் ஆதாரத்தை விட்டும் விலகிவிடுவாரோ, அவர் (நேரான) பாதையை விட்டும் வழிதவறி விடுவார். மேலும், (அல்லாஹ்வின்) தூதர் ﷺ அவர்கள் கொண்டு வந்ததைத் தவிர வேறு எந்தவொரு ஆதாரமும் இல்லை” என ஷைஃகுல் இஸ்லாம் இப்னு தைய்மிய்யாஹ் கூறக்கூடியவராக இருந்தார்கள்.
مِفتَاحُ دارِ السَعادَة 1/83
إنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ أتْقٰٮكُمْ .22
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணியமிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடைவர்தான். (அல்குர்ஆன் 49:13)
அஷ்ஷைஃக் முஹம்மத் அல்அமீன் அஷ்ஷன்கீதீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
மக்களிலே மிகக் கண்ணியமானவரும், அவர்களிலே மிகச் சிறப்பிற்குரியவரும், அவர்களிலே அல்லாஹ்வை மிகவும் அஞ்சக்கூடியவர்தான்.
இறையச்சம் அல்லாதவருக்கு எந்தவொரு கண்ணியமோ, சிறப்போ கிடையாது, அவர் உயரிய பரம்பரையைச் சேர்ந்தவர் என்றாலும் சரியே
أضْواء البَيان
அஷ்ஷைஃக் இப்னு உ'தைமீன் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
எந்தளவிற்கு ஒருவர் அல்லாஹ்வை அதிகம் அஞ்சிக் கொள்வாரோ, அந்தளவிற்கு அவர் அல்லாஹ்விடத்தில் அதிக கண்ணியமிக்கவராக இருப்பார். எனவே, நீ அல்லாஹ் அஸ்ஸ வஜலிடத்தில் கண்ணியமிக்கவனாக இருக்க விரும்பினால், இறையச்சத்துடன் இருந்து கொள்!
تفسير ابن عُثَيْمِين
23. ஹிலால் இப்னு ஃகப்பாப் அவர்கள் கூறினார்கள்:
"மனிதர்களுடைய அழிவிற்கான அடையாளம் என்ன"? என்று நான் ஸ'ஈத் இப்னு ஜுபய்ர் அவர்களிடம் கேட்டேன்.
"அவர்களது உலமாக்கள் (இறப்பெய்தி உலகிலிருந்து) சென்று விடும்பொழுதாகும்" என்று கூறினார்கள்.
سِيَر أعْلامِ النُبَلاء 322/4
24. ஹம்மாத் இப்னு ஸைத் கூறினார்கள்: அனஸ் இப்னு ஸீரீன் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த நேரத்தில் நாங்கள் அன்னாரிடம் நுழைந்தோம்.
அப்போது அவர்கள் கூறினார்கள்: "இளைஞர்களே! அல்லாஹ்வைப் அஞ்சிக்கொள்ளுங்கள்! இந்த ஹதீஸ்களை நீங்கள் யாரிடமிருந்து எடுக்கின்றீர்கள் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நிச்சயமாக அவை உங்களுடைய மார்க்கத்திலிருந்து உள்ளதாகும்.
الجامِعُ لِأَخْلاقِ الراوِي وآدابِ السامِع، 1/129
25. அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
الإسناد من الدين ولولا الإسناد لقال من شاء ما شاء
அல்இஸ்னாத் (அறிவிப்பாளர் சங்கிலித் தொடர் என்பது) மார்க்கத்திலிருந்து உள்ளதாகும். சங்கிலித் தொடர் மட்டும் இல்லையென்றால், அவரவர் அவர் நாடியவற்றை கூறிவிடுவார்.
مُقَدِّمَةُ صَحِيح مسلم
ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ .26
இது வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமுமில்லை, இறையச்சமுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்குர்ஆன் 2:2)
இப்னு அப்பாஸ் رضي الله عنه கூறினார்கள்:
இறையச்சமுடையவர் என்பவர் இணைவைப்பு, பெரும்பாவங்கள் மற்றும் மானக்கேடானவற்றை விட்டும் விலகி எச்சரிக்கையாக இருப்பவர் ஆவார்.
இப்னு ‘உமர் رضي الله عنه கூறினார்கள்:
இறையச்சம் என்பது யாரையும் விட உன்னை நீ சிறந்தவனாக காணாமல் இருப்பதாகும்.
تفسير البَغَوِي
27. அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி ஹஃபிதஹுல்லாஹ் கூறினார்கள்:
ஆதமுடைய மகனின் நிலை ஆச்சரியமானது, அல்லாஹ் படைக்கின்றான், அவனல்லாதவை வணங்கப்படுகிறது, (மேலும்) அல்லாஹ் வாழ்வாதாரம் அளிக்கின்றான், அவனல்லாதவை(க்கு) நன்றி செலுத்துப்படுகிறது!
شَرحُ ثَلاثَةِ الأُصُول، ص. ١٢٤
28. இப்னு உ'தைமீன் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
لو كان الدين بالعاطفة لكان جميع أهل البدع على حق
மார்க்கம் என்பது உணர்ச்சிகளை (அடிப்படையாகக்) கொண்டு இருக்குமெனில், அனைத்து பித்'அத்வாதிகளும் சத்தியத்தில் இருந்திருப்பார்கள்.
اللِّقاءُ الشَّهرِي 33/11
قَالَ سُفْيَانُ الثَّوْرِيُّ: إِنَّمَا يُطْلَبُ الْعِلْمُ لِيُتَّقَى اللهَ بِهِ فَمِنْ ثَمَّ فُضِّلَ، فَلَوْلَا ذَلِكَ لَكَانَ كَسَائِرِ الْأَشْيَاءِ
حلية الأولياء ٦/٣٦٢
29. சுஃப்யான் அத்-தவ்ரீ கூறினார்கள்:
(மார்க்கக்) கல்வி தேடப்படுவது என்பது, அதைக் கொண்டு அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வதற்காக மட்டுமே. அதன் காரணமாகவே (மார்க்க ஆதாரங்களில்) அது மேன்மை படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லையெனில் அது ஏனையே விடையங்களைப் போன்று ஆகிவிடும்.
ஹில்யதுல் அவ்லியா (6/362)
قال الإمام الشافعي رحمه الله : مَنْ لَمْ تُعِزُّهُ التَّقْوَى، فَلاَ عِزَّ لَهُ
سير أعلام النبلاء ١٠/٩٧
30. இமாம் அஷ்-ஷாஃபியீ رحمه الله تعالى அவர்கள் கூறினார்கள்:
எவரொருவரை தக்வா (இறையச்சம்) கண்ணியப்படுத்தவில்லையோ அவருக்கு எந்த கண்ணியமும் கிடையாது.
ஸியரு அ'லாமுன் நுபலா (10/97)
31. இப்னு தைமிய்யா رحمه الله تعالى அவர்கள் கூறினார்கள்:
إِذَا حَسُنَتْ السَّرَائِرُ أَصْلَحَ اللَّهُ الظَّوَاهِرَ
(உனது) அந்தரங்கம் அழகானால், (உனது) வெளிரங்கத்தை அல்லாஹ் சீராக்குவான்.
மஜ்மூ'உல் ஃபதாவா, 3/277.
32. இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு விடயத்திற்கும் ஒரு காரணியை ஆக்கியிருக்கின்றான். மேலும், நேசத்தினுடைய காரணியாக தொடர்ந்து திக்ர் செய்வதை ஆக்கியிருக்கின்றான். எனவே, எவரொருவர் அல்லாஹ் அஸ்ஸ வஜல்லின் நேசத்தை அடைய விரும்புகின்றாரோ, அவர் மிகுந்த நேசத்துடன் தொடர்ந்து அவனை திக்ர் செய்யட்டும்.
الوابِلُ الصَّيِّبُ مِنَ الكَلِمِ الطَّيِّب 1/42
33. யஹ்யா பின் மு'ஆத் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
யார் அல்லாஹ்விற்குப் பணிவிடை செய்வதன் மூலம் மகிழ்ச்சியடைவாரோ, அனைத்து விடயங்களும் அவருக்கு பணிவிடை செய்வதைக் கொண்டு மகிழ்ச்சியுறும். மேலும், யாருடைய கண்கள் அல்லாஹ்வைக் கொண்டு குளிர்ச்சி பெறுமோ, அவரைப் பார்ப்பதைக் கொண்டு (மற்ற) அனைவரின் கண்களும் குளிர்ச்சி பெறும்.
إغاثَةُ اللَّهْفان مِنْ مَصايِدِ الشيطان، 1/72
34. அபுல் ஹுஸைன் அல்வற்றாக் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
உள்ளத்தின் உயிரோட்டமானது, இறப்பெய்யாத உயிருள்ளவனை திக்ர் செய்வதிலே இருக்கின்றது. மேலும், இனிமையான வாழ்வென்பது, அல்லாஹு தஆலாவுடனான வாழ்வேயாகும், வேறெதுவும் கிடையாது.
إغاثَةُ اللَّهْفان مِنْ مَصايِدِ الشيطان، 1/72
35. இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
அல்குர்ஆனை சிந்திப்பதுடன் ஓதுவதே, உள்ளத்தின் சீர்த்தன்மைக்கு அடிப்படையாகும்.
مفتاح دار السعادة ١/١٨٧