தப்ஸீர்‌ கலையின்‌ தோற்றம்‌, வளர்ச்சி


தப்ஸீர்‌ கலையின்‌ தோற்றம்‌, வளர்ச்சி பற்றி விரிவாகக்‌ கூறி, சமகாலத்தில்‌ அல்குர்‌ஆன் விளக்கவுரை எவ்வாறு அமையப்பெற வேண்டும்‌ என்பற்கான அஷ்ஷெய்க் M.J.M ரிஸ்வான் மதனியினால் முன்வைக்கப்பட்ட இவ்வாய்வானது பின்வரும்‌ தலைப்புக்களை உள்ளடக்கியிருக்கிறது.


தப்‌ஃஸீர் என்பதன்‌ சொல்‌, மற்றும்‌ அகராதிப்‌ பொருள்‌ விளக்கம்‌

தஃப்ஸீர் கலையின்‌ தோற்றம்‌

தஃப்ஸீரின்‌ பக்கமான தேவை

தஃப்ஸீர் துறையின்‌ முக்கிய மூன்று கால கட்டங்கள்‌, அவற்றில்‌ காணப்படும்‌ சிறப்பியல்புகள்‌

தப்ஸீரின்‌ மூலாதார அடிப்படைகள்‌

தப்ஸீர் செய்யப்பட வேண்டிய முறைகள்‌

நபித்தோழர்களின்‌ தப்ஸீரின்‌ பக்கமான தேவைகள்‌, காரணிகள்‌

தப்ஸீரின்‌ பிரதான வகைகள்‌, அவற்றில்‌ காணப்படும்‌ சாதக பாதங்கள்‌.

அல்குர்‌ஆனை விளக்குவோரிடம்‌ காணப்பட வேண்டிய அடிப்படை அறிவுகள்‌

தப்ஸீர்‌ துறையில்‌ முக்கிய சில முன்னோடிகள்‌

ஆரம்பகால, நவீனகால தப்ஸீர்கள்‌. நவீன காலத்தில்‌ தஃப்ஸீர்‌ அமையப்‌ பெறவேண்டி வழிமுறைகள்‌

நவீன அறிவியலைக்‌ கொண்டு எழுதப்பட்ட தஃப்ஸீர்கள்‌ 



ஆய்வு: எம்‌. ஜே. எம்‌. ரிஸ்வான்‌(அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப்‌ பல்கலைக்கழகம்‌)


முன்னுரை:

ஆரம்ப இஸ்லாமியக்‌ காலப்பகுதியில்‌ ஒரு இஸ்லாமிய அமைப்பு, ஒரு சமூகம்‌, ஒரு கோட்பாடு என்ற நிலைதான்‌ காணப்பட்டது. முஸ்லிம்கள்‌ மத்தியில்‌ பாரிய பிளவுகள்‌ காணப்படவில்லை. சாதாரண பிக்ஹ்‌ஃ மஸாயில்களில்‌ கூட கருத்துமுரண்பாடுகள்‌ மிகக்குறைவானதாகவே காணப்பட்டது.

அப்படியிருக்க அகீதா சார்ந்த அம்சங்களில்‌ கருத்து முரண்பாடுகள்‌ காணப்பட்டிருக்கவே முடியாது
என்பதே உண்மை.

ஆரம்ப கால நூற்றாண்டில்‌ வாழ்ந்த ஸஹாபாக்கள்‌, தாபியீன்கள்‌, அவர்களின்‌ வழிவந்த
மாணவர்களிடம்‌ அல்குர்‌ஆனுக்கு தவறான கருத்துக்களை கூறும்‌ வழிமுறை இருக்கவில்லை.
இஸ்லாமிய மார்க்கம்‌ எப்போது அதன்‌ கோட்பாடுகளுக்கு மாற்றமான சிந்தனையாளர்களை
முகம்கொடுத்ததோ, எப்போது சிந்தனைப்‌ பிரிவுகள்‌ தோற்றம்‌ பெற்றதோ அப்போதிருந்தே
அல்குர்‌ஆனைத்‌ தவறாகப்புரிந்தும்‌, விளங்கியும்‌ விளக்கம்‌ தரும்‌ குழுக்களைச்‌ சந்தித்தது.

நபியே நீர்‌ அவர்களின்‌ செல்வத்தில்‌ இருந்து ஸகாத்தை எடுப்பீராக, மேலும்‌ அவர்களுக்காகப்‌
பிரார்திப்பீராக என்ற அல்குர்‌ஆனிய வசனத்தை முதலாம்‌ கலீஃபா அபூபக்கர்‌ (ரழி) அவர்களின்‌
ஆட்சியில்‌ ஸகாத்‌ தரமறுதுத்தோர்‌ சுட்டிக்காட்டிய விளக்கத்தையும்‌, உமர்‌ (ரழி) அவர்களின்‌
காலத்தில்‌ குதாமா (ரழி) அவர்கள்‌ மது அருந்திய பின்னர்‌ தான்‌ குடித்தற்குரிய ஆதாரம்‌ குர்‌ஆனில்‌
இருக்கின்ற என்று கூறியதையும்‌, அல்ஹுக்ம்‌ என்ற சொல்லுக்கு கவாரிஜ்கள்‌ தந்த விளக்கத்தையும்‌
இன்னும்‌ பல சான்றுகளையும்‌ இதற்கு உதாரணமாகக்‌ குறிப்பிட முடியும்‌.

இஸ்லாமிய சிந்னைக்கு நேர்மாற்றமான குழுக்கள்‌ அல்குர்‌ஆன்‌ வசனங்களுக்கும்‌, ஹதீஸாக்கும்‌
தமது பிழையான சித்தாந்தங்களுக்கு இசைவான பொருள்களைத்‌ தந்தார்களே அன்றி அல்குர்‌ஆன்‌
வேண்டி நிற்கும்‌ சரியான பொருள்களை விளக்கிட முன்வரவில்லை என்பதே உண்மை.

ஹிஜ்ரி பதின்நான்காம்‌ நூற்றாண்டுவரை அறிஞர்களால்‌ எழுதப்பட்ட தஃப்ஸீர்களைப்‌ பாரக்கின்ற போது பொதுவாக பாத்திலான சித்தாந்தங்களுக்கு மறுப்புக்‌ கூறும்‌ வகையிலும்‌, துறைகள்‌ சார்ந்த அம்சங்களை விளக்குவதையும்‌ அவைகள்‌ முன்னிலைப்படுத்தி இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

மொழி, கலைச்‌ சொற்கள்‌, தெளிவில்லாத வசனங்களை விளக்குதல்‌, சட்டங்களை விளக்குதல்‌
போன்ற துறை சார்ந்த அம்சங்கள்‌ ஒரு அறிஞரின்‌ நூலில்‌ குவிந்து காணப்பட்டிருப்பதைப்‌
பாரக்கின்றோம்‌.

அத்தோடு இஸ்லாத்தின்‌ தோற்றம்‌ பெற்ற வழிகெட்ட சிந்தனைப்பிரிவுகளின்‌ ஆதாரங்களை
முறியடிப்பதும்‌ அந்த தஃப்ஸீர்களில்‌ காணப்பட்ட முக்கிய போக்காகும்‌. அல்குர்‌ஆனிய வசனங்களை
திரித்து, தவறாக விளக்கிய முஃதஸிலாக்கள்‌, ஐஹ்மிய்யாக்கள்‌, கவாரிஜ்கள்‌, ஷீஆக்கள்‌ மற்றும்‌
சூபிக்கள்‌ போன்றோரின்‌ விளக்கங்களில்‌ காணப்படும்‌ முரண்பாடுகளை விளக்குவதும்‌ அவற்றிற்கு மறுபப்புக்‌
கூறுவதும்‌ ஒரு வழிமுறையாகக்‌ கொள்ளப்பட்டது.

அறிவியல்‌ வளர்ச்சியடைந்ததோடு முஸ்லிம்‌ அறிஞர்களின்‌ பார்வையிலும்‌ அல்குர்‌ஆனின்‌ விளக்கத்தில்‌ மாற்றம்‌ தென்பட ஆரம்பித்தது. உதாரணமாக ஆரம்ப காலத்தில்‌ “அலக்‌” என்ற அரபுச்‌ சொல்லை மொழிமாற்றம்‌ செய்த அறிஞர்கள்‌ இரத்தக்கட்டி என்று மொழிமாற்றம்‌ செய்தார்கள்‌.
அதே நேரத்தில்‌ அறிவியல்‌ விஞ்ஞான உண்மைகளுக்கு அல்குர்‌ஆன்‌ என்றும்‌ முரண்படுவதில்லை என்பதை நரூபிப்பதற்காக அலக்‌ என்பது கருவறைச்‌ சுவரில்‌ ஒட்டிக்‌ கொண்டிருக்கும்‌ அட்டைப்பூச்சி போன்ற ஒன்று, அல்லது அலக்‌ என்ற நிலை என விளக்கம்‌ தந்தார்கள்‌.

எனினும்‌, ஆரம்ப காலத்தில்‌ விளக்கம்‌ தந்த அறிஞர்கள்‌ இக்கருத்தை அங்கீகரிக்கும்‌ விதத்தில்‌ தமது கருத்துக்களை சூசகமாகத்‌ தந்துள்ளமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்‌.

அல்குர்‌ஆனிய அறிஞர்களில்‌ சிலர்‌ அல்குர்‌ஆனில்‌ இடம்‌ பெறும்‌ சட்ட வசனங்களை தனியாகப்‌ பிரித்து
விளக்க முற்பட்ட தன்‌ விளைவாக நவீன காலத்தின்‌ இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சாரத்திற்கு பதிலடிகொடுப்பதற்கு அவை உந்து சக்தியாக விளங்கியதை மறுக்க முடியாது.

அவ்வாறே இஸ்லாமிய பொருளியில்‌, வங்கியியல்‌, மருத்துவம்‌, வானியல்‌, போன்ற துறைகளுடன்‌
ஒட்டியதாக அல்குர்‌ஆனின்‌ வசனங்களை விளக்குவதில்‌ அறிஞர்கள்‌ பாரிய பங்களிப்புச்‌ செய்துள்ளனர்‌.

காலத்தின்‌ முன்னேற்றம்‌ அறிஞர்களின்‌ அறிவியல்‌ பார்வையிலும்‌ முன்னேற்றத்தை உருவாக்கியது
எனச்‌ சுருக்கமாகக்‌ குறிப்பிட முடியும்‌. அறிவியல்‌ துறை சார்ந்த விளக்கங்களை உள்ளடக்கி பல
த.ப்ஸீரகள்‌ முஸ்லிம்‌ உலகில்‌ வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்‌.

“தப்ஸீர்‌ கலையின்‌ தோற்றம்‌, வளர்ச்சி பற்றி விரிவாகக்‌ கூறி, சமகாலத்தில்‌ அல்குர்‌ஆன்
விளக்கவுரை எவ்வாறு அமையப்பெற வேண்டும்‌ என்பற்கான உமது கருத்துக்களையும்‌
தெளிவுபடுத்துக” என்ற தலைப்பின்‌ ஊடாக பின்வரும்‌ தலைப்புக்களில்‌ இங்கு பேசப்படுகின்றது.

இதில்‌ காணப்படும்‌ நிறைகளுக்கு அல்லாஹ்‌ அருள்‌ செய்யவும்‌ குறைகளை மன்னிக்கவும்‌ பிரார்த்தனை செய்கின்றேன்‌. 

இவ்வாய்வு அமையப்‌ பெற்றுள்ள தலைப்புக்கள்‌ பின்வருமாறு:

தப்‌ஃஸீர் என்பதன்‌ சொல்‌, மற்றும்‌ அகராதிப்‌ பொருள்‌ விளக்கம்‌

தஃப்ஸீரின்‌ கலையின்‌ தோற்றம்‌

தஃப்ஸீரின்‌ பக்கமான தேவை

தஃப்ஸீர் துறையின்‌ முக்கிய மூன்று கால கட்டங்கள்‌, அவற்றில்‌ காணப்படும்‌ சிற்பபியல்புகள்‌

தப்ஸீரின்‌ மூலாதார அடிப்படைகள்‌

தப்ஸீர் செய்யப்பட வேண்டிய முறைகள்‌

நபித்தோழர்களின்‌ தப்ஸீரின்‌ பக்கமான தேவைகள்‌, காரணிகள்‌

தப்ஸீரின்‌ பிரகான வகைகள்‌, அவற்றில்‌ காணப்படும்‌ சாதக பாதங்கள்‌.

அல்குர்‌ஆனை விளக்குவோரிடம்‌ காணப்பட வேண்டிய அடிப்படை அறிவுகள்‌

தப்ஸீர்‌ துறையில்‌ முக்கிய சில முன்னோடிகள்‌

ஆரம்பகால, நவீனகால தப்ஸீர்கள்‌. நவீன காலத்தில்‌ தஃப்ஸீர்‌ அமையப்‌ பெறவேண்டி வழிமுறைகள்‌

நவீன அறிவியலைக்‌ கொண்டு எழுதப்பட்ட தஃப்ஸீரகள்‌ 

போன்ற முக்கிய தலைப்புக்களில்‌ இது அணுகப்பட்டுள்ளது.

அல்லாஹ்‌ இஸ்லாமிய அறிஞர்‌ பெருமக்களுக்கு வழங்கியிருந்த அறிவுஞானத்தையும்‌, அவர்களின்‌
பணிகளையும்‌, அற்பணிப்பையும்‌ ஒப்பிட்டு நோக்கின்ற போது நமது இந்த முயற்சியும்‌, பணியும்‌
அற்பமானதாகும்‌.

அரபு அறிவில்‌ புலமை அற்ற நமது இம்முயற்சியில்‌ அல்லாஹ்‌ அபிவிருத்தியும்‌, பரகத்தும்‌
செய்வானாக என்றும்‌, எமது கல்விக்காக உழைத்த கல்விமான்கள்‌, விரிவரையாளர்களின்‌ வாழ்வில்‌
அருட்பாக்கியங்களை நிரப்பமாகத்‌ தருவானாக என்றும்‌ பிரார்த்தனை செய்தவானாக!

இவ்வண்ணம்‌:
எம்‌.ஜே.எம்‌. ரிஸ்வான்‌



தப்ஸீர்‌ என்பதன்‌ சொல்‌ மற்றும்‌ அகராதிப்‌ பொருள்‌ விளக்கம்‌:

மொழி வழக்கில்‌ தெளிவு, மயக்கமற்ற நிலை என்ற பொருள்படும்‌ சொல்லாக விளங்குகின்றது.

(நபியே!) அவர்கள்‌ உம்மிடம்‌ எந்த உதாரணத்தை கொண்டுவந்தாலும்‌ நாம்‌ உம்மிடம்‌ சத்தியத்தையும்‌, (அதைவிட) தெளிவான விளக்கத்தையும்‌ கொண்டுவருவோம்‌ (அல்‌ புர்கான்‌: வசனம்‌: 33) என இடம்‌ பெறும்‌ வசனத்தில்‌ وَاَحْسَنَ تَفْسِيْرًا தஃப்ஸீரா என்ற சொல்‌ தெளிவான விளக்கம்‌ என்ற பொருளில்‌ இடம்‌ பெற்றுள்ளதைக்‌ கவனத்தில்‌ கொண்டு தஃப்ஸீர் என்பது தெளிவான விளக்கம்‌ எனக்குறிப்பிடுகின்றனர்‌.

இந்தச்‌ சொல்லை விளக்குகின்ற அகராதி அறிஞர்கள்‌: அது ஃபஸ்ர்‌ என்ற சொல்லில்‌ இருந்து பிறந்ததாகவும்‌, அது தெளிவையும்‌, மூடிக்கிடப்பதை அகற்றி வெளிச்சம்‌ தரும்‌ பொருளையும்‌ கொண்டது என விளக்குகின்றனர்‌.

மேற்படி வசனத்தை விளக்குகின்ற தஃப்ஸீர்‌ துறை அறிஞர்கள்‌:
தெளிவான விரிவான விளக்கத்தைக்‌ கொண்டு வருவோம்‌ அது- தெளிவு, விவரணம்‌, (சந்தேகமற்ற
நிலை) போன்ற பொருளைத்தரும்‌ ஃபஸ்ர்‌ எனப்படும்‌ மூலச்‌ சொல்லில்‌ இருந்து பெறப்பட்டது என
விளக்குகின்றனர்‌.


இஸ்லாமிய கலைச்‌ சொல்‌ வழக்கில்‌ தஃப்ஸீர்‌

இதனை விரிவான பொருள்‌ கொண்டு நோக்குகின்றனர்‌. இது தொடர்பாக ஒவ்வொரு அறிஞர்களும்‌ தமது அல்குர்‌ஆனிய கலையின்‌ அனுபவத்தின்‌ அடிப்படையில்‌ தமது கருத்துக்களை
முன்வைக்கின்றனர்‌. அது பற்றி சுருக்கமாக நோக்குவோம்‌.

அல்லாஹ்வின்‌ தூதராகிய முஹம்மத்‌ நபியின்‌ மீது இறக்கப்பட்ட அல்லாஹ்வின்‌ வேதம்‌ பற்றிய
அறிவையும்‌, அதன்‌ பொருள்களை விளக்குவதை, அதன்‌ சட்டங்களையும்‌, நுட்பங்களையும்‌
வெளிக்கொணர்வதையும்‌ குறிக்கும்‌. இதற்கு அரபு இலக்கண, இலக்கிய கலையறிவு, மற்றும்‌ குர்‌ஆனியக்‌ கலையுடன்‌ தொடர்பான கலைகள்‌ பெறப்படும்‌.

மனித சத்திக்கு ஏற்ப (குர்‌ஆன்‌ கூறவரும்‌) அல்லாஹ்வின்‌ நாட்டம்‌ பற்றி ஆராய்ந்திடும்‌ கலையாகும்‌. அது கருத்தை விளங்கி, நோக்கத்தை
தெளிவுபடுத்துவதன்‌ மீது தங்கி இருக்கும்‌ அனைத்தையும்‌ உள்ளடக்கிக்‌ கொள்ளும்‌ என விளக்கம்‌ தரப்படுகின்றது.

அப்படிப்பார்க்கின்ற போது இறைமறையில்‌ மறைந்தும்‌, புதைந்தும்‌ கிடக்கும்‌ அற்புதங்களை அதன்‌ கருத்துக்களைச்‌ சிதைக்காது, இறை நோக்கத்தை நிறைவேற்றும்‌ விதமாக தேவையான கோணங்களில்‌ விளக்குவதைக்‌ தஃப்ஸபீர்‌ எனக்‌ குறிப்பிட முடியும்‌. (அல்லாஹ்வே மிக அறிந்தவன்‌).

தஃப்ஸீர் என்ற சொல்லைக்‌ குறிக்க தஃவீல்‌ التأويل  என்ற சொற்பிரயோகத்தை அறிஞர்கள்‌ பாவித்துள்ளனர்‌. அது பற்றியும்‌ சுருக்கம்‌ தரப்படுகின்றது. அரபு மொழிவழக்கில்‌ திரும்புதல்‌,  الرجوع والعود  விளக்கம்‌ அளித்தல்‌, கனவுக்கு விளக்கம்‌ அளித்தல்‌ போன்ற பொருள்களை !التفسير என்ற சொல்‌ குறிப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஒரு சான்றின்‌ நேரடியான பொருளை விட்டுவிட்டு தவறான விளக்கத்தை அளிப்பதையும்‌ தஃவீல்‌
என்றும்‌ சுட்டிக்காட்டுகின்றனர்‌.

அல்லாஹ்வின்‌ வேத்திலும்‌, அவனது தூதரின்‌ சுன்னாவிலும்‌ தஃவீல்‌ என்பது ஒரு பேச்சின்‌
யதூர்த்தத்தில்‌ தங்கி நிற்பதையும்‌, அதில்‌ ஏவப்பட்டுள்ளதை அப்படியே நடைமுறைப்படுத்துவதையும்‌ குறிக்கும்‌ என அபுல்‌ இஸ்‌ அல்ஹனஃபி என்ற அறிஞர்‌ சுட்டிக்காட்டுகின்றார்‌.

பிற்காலத்தில்‌ வந்தவர்கள்‌ தஃ.வீல்‌ என்ற சொல்லை தவறாக அணுகினர்‌. அவர்கள்‌ ஊர்ஜிதமான கருத்தில்‌ இருந்து ஊர்ஜிதம்‌ அற்ற பலவீனமாக கருத்திற்காக அதனை உபயோகித்தனர்‌. இது அகீதாவில்‌ வழிதவறியவர்களிடம்‌ காணப்பட்ட அணுகுமுறையாக இருந்துள்ளது. அது இன்றும்‌ பலரிடம்‌ காணப்படுகின்றது. இது வழிகெட்டபிரிவினரின்‌ அணுகுமுறையாகும்‌.


தஃப்ஸீரின்‌ பக்கமான தேவை

அரபு மொழியில்‌ இறக்கப்பட்ட அல்குர்‌ஆனை தமது மொழியாகக்‌ கொண்ட மக்கள்‌ விளங்குவதில்‌ பல
சிரமங்களை  எதிர்நோக்கியுளள்ளனர்‌. முஸ்லிம்‌ சமூகம்‌ அறிந்திருக்க வேண்டிய அறிவுகளில்‌
குர்‌ஆனிய அறிவு முதல்‌ இடத்தைப்‌ பெறுகின்றது. கூர்‌ஆனைப்பாதுகாப்பது, அதன்‌ பொருள்கள்‌ பற்றி
சிந்தனை செய்வது, அதனை விளங்குவது போன்ற அம்சங்களை அல்லாஹ்‌ இந்த உம்மத்தின்‌ மீது
விதியாக்கியுள்ளதாகும்‌.

கொள்கை சார்ந்த அம்சங்களில்‌ வழி வழிதவறியவர்கள்‌ அல்குர்‌ஆனை அஜமிகள்‌ பார்வையில்‌ விளங்க முற்பட்டது காரணமாகும்‌. இதற்கு பல சான்றுகள்‌ முன்னுரையில்‌ சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவர்கள்‌ இந்தக்குர்‌ஆனை சிந்திக்க
வேண்டாமா? அது அல்லாஹ்‌ அல்லாவர்களிடம்‌ இருந்து வந்திருக்குமாக இருந்தால்‌ அதில்‌
அவர்கள்‌ பலமுரண்பாடுகளைக்கண்டிருப்பார்கள்‌ (அல் குர்ஆன் 4:82)

இது அருள்பாக்கியமிக்க வேதம்‌. அதன்‌
வசனங்களை அவர்கள்‌ சிந்திப்பதற்காகவும்‌, சிந்தனையுள்ளோர்‌ நல்லுபதேசம்‌ பெறும்பொருட்டும்‌
நாம்‌ உம்மளவில்‌ அதை இறக்கி வைத்துள்ளோம்‌. (அல் குர்ஆன் 38:29)

அவர்கள்‌ இந்தக்குர்‌ஆனை சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின்‌ இதயங்களில்‌ பூட்டுக்கள்‌ (போடப்பட்டு) இருக்கின்றனவா? (அல் குர்ஆன் 47:24)

இவ்வாறான வசனங்கள்‌ இறைமறையை  சிந்திக்கும்படி சமுதாயத்தை அழைக்கின்றது. இது
அனைவராலும்‌ சாத்தியமானதா என்றால்‌ போரைப்போன்று அனைவருக்கும்‌ சாத்தியமற்றதாகும்‌. யாரிடம்‌ அறிவும்‌, ஆற்றலும்‌, மார்க்க விளக்கமும்‌ இருக்கின்றதோ அவர்கள்‌ மீது இந்தப்‌ பணி கடமையாகும்‌.

அல்குர்‌ஆன்‌ தெளிவான அரபி மொழியில்‌ இறங்கி இருந்தும்‌, அது இறக்கப்பட்ட சமூகம்‌ தெளிவான
அரபுமொழி பேசும்‌ ஆற்றல்‌ உடையவர்களாக இருந்தும்‌ சிலபோது அவர்களுக்கும்‌ சில வசனங்களை விளங்குவதில்‌ சிக்கல்கள்‌ எழுந்ததுண்டு. 

அதற்கான தீர்வினை அல்லாஹ்வின்‌ தூதரிடம்‌ நேரடியாகச்‌ சென்று பெற்றுக்‌ கொண்டார்கள்‌. அவற்றிற்கான தெளிவு அல்லாஹ்வின்‌ தூதரால்‌ தரப்பட்ட பின்னர்‌ அவர்கள்‌ தெளிவு பெற்றார்கள்‌. 

இதற்கு ஏராளமான சான்றுகள்‌ காணப்படுகின்றன.
நபி (ஸல்‌) அவர்கள்‌ உயிருடன்‌ வாழ்கின்ற போது அதனைத்‌ தெளிவுபடுத்தும்‌ பொறுப்பு அவர்களிடம்‌
ஒப்படைக்கப்பட்டது. நபியே! மனிதரக்ளுக்கு இறக்கப்பட்ட இவ்வேதத்தை நீர்‌ அவர்களுக்கு
தெளிவுபடுத்திடவும்‌, அவர்கள்‌ நல்லுபதேசம்‌ பெறும்‌ பொருட்டும்‌ உம்மீது இவ்வேதத்தை நாம்‌ இறக்கி
வைத்தோம்‌ என்பது அல்குர்‌ஆனின்‌ அறிவுரையாகும்‌
இந்த வசனத்தின்‌ அடிப்படையில்‌ நபியிடம்‌ விளக்கம்‌ பெற்ற நபித்தோழர்கள்‌ அதனை மனனம்‌
செய்து கொண்டனர்‌, தமது வாழ்வில்‌ நடைமுறைப்படுத்தினர்‌. 

பத்து வசனத்தைக்‌ கற்றுக்‌ கொண்டால்‌ அவற்றை நடைமுறைப்படுத்தாது, அடுத்த வசனங்கள்‌ பக்கம்‌ செல்வதில்லை என்ற நிலைப்பாட்டில்‌ வாழ்ந்தார்கள்‌.

தெளிவான அரபுமொழியைக்‌ கொண்டிருந்த நபித்தோழர்களுக்கு அனைத்து வசனங்களையும்‌ விளக்க வேண்டிய தேவை காணப்படவில்லை. குர்‌ஆனில்‌ நேரடியாக விளங்கியதைக்‌ கொண்டு அவர்கள்‌ செயல்பட்டார்கள்‌.

அவர்களுக்குப்‌ பின்‌ இஸ்லாத்தில்‌ இணைந்த மக்கள்‌ அரபி அறிவில்‌ புலமை அற்றவர்களாக விளங்கினார்கள்‌.

கருத்து முரண்பாடுகள்‌ ஆரம்ப காலத்தை விட பிற்காலத்தில்தான்‌ அதிகம்‌ தோன்றின. அதுவும்‌
அரபுக்கள்‌ அல்லாத மக்கள்‌ வேறு வேறு கலாச்சாரத்தின்‌ தாக்கத்துடன்‌ இம்மார்க்கத்தை ஏற்றனர்‌.

அவர்களிடம்‌ காணப்பட்ட குர்‌ஆன்‌ பற்றிய அறியாமை குர்‌ஆனியக்‌ கலையில்‌ கூறப்படுகின்ற சகல
பகுதிகளும்‌ விரிவாகக்‌ கூறப்படவேண்டிய அவசியம்‌ ஏற்பட்டது. அந்த தேவையும்‌ த.ஃப்ஸபீரின்‌
தேவையினை உறுதி செய்கின்றது.

அல்குர்‌ஆனிய விளக்கத்தில்‌ நபித்தோழர்கள்‌ ஏற்றத்தாழ்வை உடையவர்களாக இருந்தனர்‌. ஒருவர்‌
மற்றவரை விட ஏற்றத்தாழ்வுடன்‌ காணப்படுவது ஒரு சமூகத்தின்‌ இயல்பாகும்‌. 

அதில்‌ நபித்தோழர்களும்‌ விதிவிலக்கானவர்கள்‌ அல்லர்‌. இருப்பினும்‌, அரபி மொழியாற்றல்‌ என்பது குர்‌ஆனை விளங்கிடப்‌ போதுமான தகமை அல்ல என்பதை நபித்தோழர்கள்‌ வாழ்வில்‌ ஏற்பட்ட குர்‌ஆன்‌ பற்றிய தவறான புரிதல்கள்‌ பற்றி வந்துள்ள பல
நிகழ்வுகள்‌ மூலம்‌ அறிய முடிகின்றது. 

நபித்தோழர்கள்‌ அனைவரும்‌ குர்‌ஆனிய வல்லுனர்களாக அறிமுகப்படுத்தப்படாதிருப்பது இதனை இன்னும்‌ உறுதி செய்கின்றது.


தஃப்ஸீர்‌ கலையின்‌ தோற்றம்‌

முஹம்மத்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ மீது இறங்கிய குர்‌ஆன்‌ வசனங்கள்‌ நபித்தோழர்கள்‌ மத்தியில்‌
ஓதிக்காண்பிக்கப்பட்டன. அவற்றை அவர்கள்‌ நேரடியாகவே புரிந்து கொண்டார்கள்‌. அவர்கள்‌ தமக்கு ஏற்படும்‌ சந்தேகங்களைக்‌ கேட்டு அறிந்து கொள்வார்கள்‌. அதற்கு அல்லாஹ்வின்‌ தூதர்‌ பதில்‌
அளிப்பதைக்‌ கொண்டு அதை நிவர்த்தி செய்து கொள்வார்கள்‌.

சில போது தாம்‌ இந்த வசனத்தை இப்படித்தான்‌ விளங்கினோம்‌, நடைமுறைப்படுத்தினோம்‌ என நபி
(ஸல்‌) அவர்களிடம்‌ எடுத்துக்‌ கூறுகின்ற போது அவர்களின்‌ தவறுதலான புரிதலை நபி (ஸல்‌)
அவர்கள்‌ திருத்தி கொடுப்பார்கள்‌, அல்லது விளக்கம்‌ கேட்டதற்கு விளக்கமளிப்பார்கள்‌. இதை
ஒருவர்‌ மற்றவரிடம்‌ கூறி மனப்பதிவு செய்து கொள்வார்கள்‌. பின்வரும்‌ செய்திகளை இதற்கு
ஆதாரமாகக்‌ கொள்ளலாம்‌.

லாத்து, உஸ்ஸா (குரைஷயரின்‌ வழிபாட்டுச்‌ சிலைகளின்‌ பெயர்‌) மீண்டும்‌ வணங்கப்படாத வரை இரவு பகல்‌ இல்லாதொழிக்கப்படாது (மறுமை நிகழாது) என்று நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறிய போது அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ தூதரே! அல்லாஹ்‌ அவன்தான்‌ தன்தூதரை நேர்வழியைக்‌ கொண்டும்‌, சத்திய மார்க்கத்தைக்‌ கொண்டும்‌ அனுப்பினான்‌. அதை பிறமதங்கள்‌ அனைத்தையும்‌ விட மேலோங்கச்‌ செய்வதற்காக. நிராகரிப்பாளர்கள்‌ வெறுத்த போதிலும்‌ சரியே என்ற இறைமறை வசனம்‌ இறங்கிய போது அதை நான்‌ பரிபூரணமானதாகவே எண்ணிக்கொண்டேன்‌ எனக்‌ கூறியபோது “அல்லாஹ்‌ நாடிய அளவு அது இருக்கும்‌. பின்னர்‌ அல்லாஹ்‌ மணமான ஒரு காற்றை அனுப்புவான்‌. எவரது இதயத்தில்‌ ஈமானில்‌ கடுகுப்‌ பிரமாண அளவு இருக்கின்றதோ அவர்கள்‌ அனைவரும்‌ அதனால்‌ மரணத்தை தழுவார்கள்‌. நன்மை இல்லாத மனிதர்கள்தாம்‌ மிஞ்சுவார்கள்‌. பின்னர்‌ அவர்கள்‌ தமது மூதாதையரின்‌ மார்க்கத்திற்கு மீண்டும்‌ திரும்பிச்‌ சென்றுவிடுவார்கள்‌ என விளக்கமளித்தார்கள்‌. (முஸ்லிம்‌- ஹதீஸ்‌ எண்‌: 5174) பாடம்‌: லாத்து, உஸ்ஸா மீண்டும்‌ வணங்கப்படாதவரை வரை மறுமை நிகழாது.) 

இது நபி (ஸல்‌) அவர்களின்‌ ஹதிஸ்‌ அல்குர்‌ஆன்‌ வசனத்திற்கு முரண்படுகின்றது போன்றதாக உணரப்பட்ட சந்தேகத்துக்கான பதிலாக இருக்கின்றது.

தயம்மும்‌ பற்றிய செய்தியைக்‌ குறிப்பிடுகின்ற வசனத்தை தவறாகப்‌ புரிந்த அம்மார்‌ பின்‌ யாசிர்‌ (ரழி)
என்ற நபித்தோழருக்கு தவறைத்திருத்தி இவ்வாறுதான்‌ இதன்‌ அமைப்பு என விளக்கியதையும்‌
மற்றொரு சான்றாகக்‌ கொள்ள முடியும்‌. தண்ணீர்‌ இல்லாத போது தூய்மையான மண்ணை நாடுங்கள்‌ என்ற வசனத்தை மண்ணில்‌ புரள்வது என்று விளங்கிய அம்மார்‌ (ரழி) ஒரு பிராணி மண்ணில்‌ புரள்வது போன்று புரண்டார்‌. அதையே அவர்‌ தயம்மும்‌ என்றும்‌ கருதினார்‌. இது பற்றி நபிகள்‌ நாயகத்திடம்‌ எடுத்துக்‌ கூறிய போது நீர இவ்வாறு செய்வது போதும்‌ எனக்‌ கூறி தனது இரு கரத்தையும்‌ மண்ணில்‌ அடித்து, பின்னர்‌ தனது முகத்தையும்‌, இரு மணிக்கட்டுக்களையும்‌ தடவிக்காட்டி தயம்மும்‌ பற்றி விளக்கினார்கள்‌. (புகாரி அத்தியாயம்‌: தயம்மும்‌).

இது தவறாகப்‌ புரிந்த ஒரு செய்திக்கு விளக்கமளித்துள்ளதைச்‌ சுட்டிக்காட்டுகின்றது.
நபிகள்‌ நாயகத்தின்‌ காலத்தில்‌ காலத்தில்‌ தஃப்ஸபீர்‌ நூல்வடிவத்தில்‌ தொகுப்பாக காணப்படவில்லை.
நபித்தோழர்கள்‌ தாம்‌ செவிமடுத்ததையும்‌, நபியிடம்‌ இருந்து கற்றுக்‌ கொண்டதையும்‌ மற்றவர்களுக்கு
அறிவித்தார்கள்‌. அதை மக்கள்‌ தமது மனங்களில்‌ பதிவு செய்து கொண்டனர்‌. இதை அஸருர்ரிவாயா
என்று குறிப்பிடுவர்‌.

அவர்களின்‌ பின்னர்‌ தாபியீன்களின்‌ ஆரம்ப காலத்திலும்‌ இவ்வாறானதொரு நடைமுறைதான்‌ இருந்து வந்தது. ஹிஜ்ரி முதலாவது நூற்றாண்டின்‌ இறுதியில்‌ உமைய்யாக்‌ கலீபாக்களில்‌ ஒருவரான கலீஃபா உமர்‌ பின்‌ அப்தில்‌ அஸீஸ்‌ (ரஹ்‌) அவர்கள்‌ தனது ஆட்சியில்‌ விடுத்த பணிப்புரையின்‌ பேரில்‌ ஹதீஸ்‌ தொகுக்கப்பட்டது. அத்துடன்‌ தஃப்ஸீரும்‌ அதன்‌ பல தரப்பட்ட விடங்கள்‌ ஹதீஸ்களுடன்‌ இணைந்து தொகுக்கப்பட்டது. இதை புகாரி, முஸ்லிம்‌, சுனன்‌ கிரந்தங்களில்‌ காணமுடியும்‌. இதனை ஹதீஸ்களுடன்‌ இணைந்து காணப்பட்ட காலம்‌ எனக்‌ குறிப்பிட முடியும்‌.

நபி (ஸல்‌) அவர்களின்‌ விளக்கங்கள்‌, ஸஹாபாக்கள்‌, தாபியீன்களின்‌ கூற்றுக்கள்‌ உள்ளடங்கியதாக்‌
காணப்பட்ட தனியான தொகுப்பாக்கக் காலம்‌. இத்தொகுப்புக்கள்‌ அறிவிப்பாளர்கள்‌ இணைந்தே
காணப்பட்டது. பின்னர்‌ அறிவிப்பாளர்கள்‌ வரிசசைகளைச்‌ சுருக்கி அறிவித்தகாலம்‌.
இந்த நிலை ஹிஜ்ரி 180 வரை நீடித்துள்ளது என்பதை தஃப்ஸீர்‌ தொகுப்புக்காலம்‌ பற்றிய தகவல்கள்‌
மூலம்‌ அறிந்து கொள்கின்றோம்‌.

தொடர்ச்சி.. 

Previous Post Next Post