இஸ்லாமிய வரலாற்றில் மருத்துவமனைகள்

இஸ்லாமிய அரசின் கலீபாக்கள் தமது சாம்ராஜ்யத்தின் தலைநகரை அவர்களுக்குஏற்றாற் போல் மாற்றிக் கொண்டபோது அவ்வவ்  நகரத்தில் மிக முக்கியமானதொரு மருத்துவமனையையும் நிறுவி அவற்றையும் அபிவிருத்தி அடையச் செய்தனர்.

குறிப்பாக 13ம் நூற்றாண்டின் இறுதிக் காலப் பகுதியில் அதிகமான மருத்துவமனைகள் இஸ்லாமிய உலகத்தினுடாக பரவிக் கொண்டிருந்தது. வரலாற்றில் மிகவும் முக்கியமான நிகழ்வுகளாக அவை அமைந்தன.
இஸ்லாம் இந்த நூற்றாண்டுகளில்  அனைத்து மருத்துவமனைகளுக்கு ஊடாகவும் சேவையை வழங்கவில்லை என்பதற்கு எந்த இடைவெளியையும் விட்டு வைக்கவில்லை. இங்கு சில முக்கிய நகரங்களில் அமையப் பெற்றிருந்த மருத்துவமனைகளும் அவற்றின் வளர்ச்சி பற்றியும் சுருக்கமாக ஆராயப்படுகிறது.

டமஸ்கஸ் :

கி.பி. 706ல் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய முதல் வைத்தியசாலையாக டமஸ்கஸ் மருத்துவமனை காணப்படுகிறது.

உமையாக் கலீபா அல் வலீதினால் கட்டப்பட்டது. எனினும் அந்நூர் எனும் மிகப் பிரபல்யமான மருத்துவமனை டமஸ்கஸில் உமையா ஆட்சியின் மத்திய காலப்பகுதியிலேயே அமைக்கப்பட்டது.
1156ல் மன்னர் நூர்தீன் ஸன்கிக்கிப் பிறகு மிகச் சிறந்த மருத்துவமனை மட்டுமல்லாது மருத்துவக் கல்லூரிகளையும் அது கொண்டிருந்தமை அதனது மட்டுமொரு சிறப்பம்சமாகும்.

இதுவே எங்களுக்கு ஏன் மத்திய காலப்பகுதியில் புத்தகங்கள் பெறுமதியானதாகவும், எண்ணிக்கையில் வரையறுக்கப்பட்டதாகவும் இருக்கின்றன என்பதனைகப் புரிந்து கொள்ள முடியுமானதாக இருக்கின்றன. அப்போது கையெழுத்துப் பிரதிகள் மட்டுமே காணப்பட்டன. அங்கும் வசதிகள் இருக்கவில்லை.

அரசு வைத்தியசாலைக்கு என வசதியான நூலகத்தையும் கொடுத்து ஆய்வுகள் மருத்துவமனையுடன் இணைந்ததாகவே நடைபெற துணை புரிந்தன.

ஜெரூஸலம் :

புனித ஜோன்ஸ் மருத்துவமனையை கி.பி.1055ல் நிறுவினார்.11ம் நூற்றாண்டின் இறுதியில் அது தங்குமிட வசதிகளையும் தாதிமார்களுக்கான தங்குமிட வசதிகளையும் கொண்டதாக மாறியது. அதனது மருத்துவ சேவை மிகப் பாரியதாக இருந்தது.
நோயாளிகள், யாத்திரியர்கள், காயப்பட்ட இராணுவ வீரர்கள் என ஒரு நாளைக்கு அங்கு பெருந்தொகையானோர் அனுமதிக்கப்பட்டனர்.

1187ல் கி.பி. மீண்டும் ஜெரூஸலம் வீரத்தளபதி ஸலாஹூத்தீனால் கைப்பற்றப்பட்ட போது அதனது பெயர் அஸ்ஸலாஹானி மருத்துவமனை என மாற்றப்பட்டது.

கி.பி.1458ல் பூமியதிர்ச்சியினால் பாதிக்கப்படும் வரை மக்களுக்கு அதனது சேவையை வழங்கிக் கொண்டே இருந்தது.

ஈராக் மற்றும் பாரசீகம் :

பக்தாத் -

கி.பி.750ல் பக்தாத் அப்பாஸியக் கலீபா ஜஃபர் அல்மன்ஸுரினால் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைநகராக மாற்றப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது.

கி.பி.766ல் அவரே ஜின்தி ஷாபுர் மருத்துவக்கல்லூரியின் பீடாதிபதியாகவும் நியமனம் பெற்றார். ஜூதிஸ் பின் பாதிஸ் அரச சபை மருத்துவராகவும் பக்தாதின் புகழையும் பெருமையையும் நிலைநிறுத்துகின்ற மருத்துவமனைகளையும் நிறுவினார்.

அதனைத் தொடர்ந்து ஹாரூன் அல்-ரஸீத் (கி.பி.786-809) பின் பாதிஸின் பேரனும் அவரது அரசவை மருத்துவருமான ஜிப்ரில் பக்தாத் மருத்துவமனை எனப் பெயரிடப்பட்ட விஷேட மருத்துவமனையைக் கட்டினார். இதுவே முக்கிய மருத்துவமனையாக அபிவிருத்தி அடைந்தது. அதனது முதன்மை மருத்துவர்களில் அர்ராஸியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கி.பி.918ல் கலீபா முக்ததிர் இரண்டு மருத்துவமனைகளை பக்தாதில் கட்டுவித்தார். அதிலொன்று நகரின் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டது. மற்றது நகரின் தெற்குப் பகுதியில் அமைக்கப்பட்டது. அதற்கு அல்-முக்ததிர் எனப் பெயரிடப்பட்டது.

இஸ்லாமிய உலகின் அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனை  அல்-அதூதியாகும். கி.பி.981ல் கட்டப்பட்டதாகும்.அப்துத் தௌலாவிற்குப் பின்னர் நவீன காலத்திற்கு முன்னர் பக்தாதில் கட்டப்பட்ட மிகவும் கவர்ச்சிகரமான மருத்துவமனையாகும்.
அது 1258ல் மங்கோலியப் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டது. ஜங்கிஸ்கானின் முதல் புதல்வன் வழிநடாத்திய போராட்டமாகும்.

எகிப்து

அல்-புஸ்தாத் :

கி.பி.872ல் அஹ்மத் பின் தூலூன் அல்புஸ்தாதில் புஸ்தாத் எனப் பெயரிடப்பட்ட மருத்துவமனையைக் கட்டினார். தற்போது அது பண்டைய கெய்ரோவாகும்.
06 நூற்றாண்டுகளாக கைய்ரோ மக்களுக்கு சேவையை வழங்கியது. அம்மருத்துவமனை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.  மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அவர்களுக்குத் தேவையான துணிமணிகள்,பணம் என்பனவும் அவர்கள் சுகமடையும் வரைக்கும் கொடுக்கப்படும்.

கெய்ரோ :

கி.பி.1284ல் அல்-மன்ஸூர் கழவுன்  மிகப் பிரபல்யம் பெற்ற மருத்துவமனையான அல்-மன்ஸூரி மருத்துவமனையை நிறுவினார்.

இம்மருத்துவமனையை நிறுவியதற்குப் பின்னால் ஒரு சுவையான சம்பவம் இருக்கிறது. கலீபா மன்ஸூர் இராணுவத்தில் ஓர் உத்தியோகத்தராக இருந்த காலத்தில் புனித பூமியில் வைத்து நோய் வாய்ப்பட்டார்.

அப்போது இருந்த ஒரேயொரு சிறந்த மருத்துவமனையான அந்நூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவர் தான் எகிப்தின் ஆட்சியாளராக வந்தால் அந்நூரி மருத்துவமனையை விடச் சிறந்த ஒன்றை எகிப்தின் ஆட்சியாளராக அவர் மாறும்போது கெய்ரோவில் மருத்துவமனையை கட்டுவேன் என ஒரு சபதம் எடுத்தார், மிகப் பெரும் மருத்துவமனையையும் நிறுவினார்.

அதன் ஆரம்ப வைபவத்தில் சமகால நாடுகாண் பயணிகளாலும் வரலாற்றாசிரியர்களாலும் இப்னு பதூதா,அல்-கஷந்தி போன்றவர்களாலும் இது மிகச் சிறந்த மருத்துவமனை என வர்ணிக்கப்படுகிறது.
நோயாளர்களின் வசதி கருதி பல்வேறுபட்ட பிரிவுகளாக இம்மருத்துவமனை பிரிக்கப்பட்டிருந்தது.
நாள்தோறும் 4,000 நோயாளிகளுக்கு தனது இலவசமாகவே சேவையை வழங்கிக்கிக் கொண்டிருந்தது. தங்குமிட வசதிகள் கூட இலவசமாக அளிக்கப்பட்டது. இதற்கும் மேலாக ,அவர்கள் சுகமடைந்து வெளியேறுகையில் அவர்கள் வேலை செய்யும் காலப்பகுதியில் தொழில் புரியாது தங்கியிருந்தமைற்காக உணவும் பணமும் வழங்கப்பட்டன.

அல்-மன்ஸூரி மருத்துவமனை கட்டப்பட்டதிலிருந்து 07 நூற்றாண்டுகளாக தனது சேவையை வழங்கியது. தற்போது கிழாவுன் மருத்துவமனை எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

அதனது கவர்ச்சிகரமான பழமைவாய்ந்த கதவு தற்போது கெய்ரோவின் நூதனசாலையில் பாதுகாக்கப்படுகிறது.

வட ஆபிரிக்கா –

தூனூசியா –

கி.பி.830ல் இளவரசர் ஷியாத்துல்லாஹ் கைரவான் நகரில் அத்திம்னா மருத்துவமனையை நிறுவினார்.
தூனூசியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் கிழக்கில் அவர்கள் அழைக்கின்ற மிமாரிஸ்தான் என்பதற்குப் பதிலாக திம்னா என்றே அழைக்கின்றனர்.

பாரசீக மொழியில் இதற்கு மருத்துவமனை என்று பொருளாகும்.

நோயாளிகளைப் பார்ப்பதற்கு என தனி அறையும் ஒதுக்கப்பட்டிருந்தது. பெண் தாதிகள்   சூடானிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர். தொழுகை அறைகளும் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்தன.

மொறோக்கோ –

கி.பி 1190ல் அல்மன்ஸூர் யஃகூப் பின் யூசுப் தலைநகரான மராகேஸில் ஒரு மருத்துவமனையை நிர்மாணித்தார்.அதற்கு மராகேஷ் மருத்துவமனை எனப் பெயரிட்டார். இது மிகப் பிரம்மாண்டமான அழகிய தரைத்தோற்றத்தையும் பூமரங்களையும் கொண்டதாக அமைக்கப்பட்டது. அங்கு நோயாளிகளுக்கு 02 விதமான ஆடைகள் கொடுக்கப்பட்டன.

ஒன்று குளிருக்கும் மற்றது கோடைக்கும் ஏற்றதாக அமைந்திருந்தது.

ஸைதலிய்யா எனும் மருந்தகங்களும் விஷேட நிபுணர்கள் ஊடாக பராமரிக்கப்பட்டன. அங்கு  பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த ஒரு பகுதியில் சிகிச்சை பெற விரும்பினால் 1000 வருடங்களுக்கு முன்பு இன்றைய நாணயப் பெறுமதியில் 1,501 டொலர் ஒரு நாளைக்கு நோயாளர்களிடமிருந்து கட்டணமாக அறவிடப்பட்டது.

அந்தலூசியா –

கி.பி.1366ல் இளவரசர் முஹம்மத் பின் யூஸிப் பின் நாஸா கிரணடா நகரில் கிரணடா மருத்துவமனையை நிர்மாணித்தார்.அரை மில்லியன் சனத்தொகைமக்கள் அதனால் பயன் பெற முடியுமாக இருந்தது.
அன்றைய ஸ்பெய்னில் இஸ்லாமிய அறபு கட்டிடக் கலைக்கு மிக அழகிய உதாரணமாகத் திகழ்ந்ததோடு கி.பி.1492ல் கிரணடா வீழ்ச்சியுறும் வரைக்கும் மக்களுக்குத் தனது சேவையை வழங்கிக் கொண்டேயிருந்தது.

- Dr. HOSSAN ARAFA
Previous Post Next Post