மண்ணறையை உயர்த்திக் கட்டுவதோ அதில் தோண்டப்பட்ட மண்ணை விட அதிகம் சேர்ப்பதோ கூடாது.

கப்ர் - மண்ணறையை உயர்த்திக் கட்டுவதோ அதில் தோண்டப்பட்ட மண்ணை விட அதிகம் சேர்ப்பதோ கூடாது. 

ஆதாரங்கள் ஷாஃபிஈ மத்ஹப் நூல்களில் இருந்து தரப்படுகின்றன. 

"فصل: ولا يزاد في التراب الذي أخرج من القبر فإن زادوا فلا بأس ويشخص القبر من الأرض قدر شبر لما روى القاسم بن محمد قال: دخلت على عائشة ﵂ فقلت: اكشفي لي عن قبر رسول الله ﷺ وصاحبيه فكشفت لي عن ثلاثة قبور لا مشرفة ولا واطئة ويسطح القبر ويوضع عليه الحصى لأن النبي ﷺ سطح قبر ابنه إبراهيم عليه السلام ووضع عليه حصى من حصى العرصة"

கப்ரில் தோண்டப்பட்ட மண்ணை விட கூடுதலான மண்  சேர்க்கலாகாது. சில போது அதை விட சற்று அதிகரித்தால் பரவாயில்லை. கப்ர் மண்ணறையானது ஒரு சாண் அளவு பூமியில் இருந்து தெரியலாம். 

காஸிம் பின் முஹம்மத் (ரஹி) குறிப்பிடுகின்றார்கள்:

நான் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் நுழைந்து எனக்கு இறைத் தூதரின் மண்ணறையையும் அவர்களின் இரு தோழர்களின் மண்ணறைகளையும் திரையை நீக்கி காட்டுமாறு கேட்க உடனே அவர்கள் அம்மூன்று கப்ரின் திரையையும்  நீக்கி  காண்பித்தார்கள். அவை உயர்ந்து தெரியும்படியோ, நன்றாகவே (மண்ணுடன் ஒட்டி) மட்டப்படுத்தப்பட்டதாவோ இருக்கவில்லை எனக் குறிப்பிடும் இந்த செய்தியே கப்ரின் மண்ணைவிட கூடுதலான மண் இருக்க கூடாது என்பதற்கான ஆதாரமாகும்.

கப்ர் சமப்படுத்தப்பட்டதாகவே இருக்க வேண்டும். ஏனெனில்  நபி (ஸல்) அவர்கள் தனது அன்புப் புதல்வர்  இப்ராஹீமின் கப்ரை அவ்வாறே செய்து அடையாளத்திற்காக அதன் மேல் உர்ஸா எனப்படும் இன கல் ஒன்றை வைத்தார்கள்.

((அல்முஹஸ்ஸப் - இமாம் ஷீராஷி அஷ்ஷாஃபிஈ))

ஷாஃபிஈ மத்ஹபின் சட்ட நூலான அல்உம்மு தரும் பின்வரும் தகவல் இதற்கு மேலும் தெளிவைத் தருகின்றது .

" وَلَا نُحِبُّ أَنْ يُزْدَادَ فِي الْقَبْرِ أَكْثَرُ مِنْ تُرَابِهِ لَيْسَ لِأَنَّهُ يَحْرُمُ ذَلِكَ، وَلَكِنْ لِئَلَّا يَرْتَفِعَ جِدًّا، وَيُشَخَّصُ الْقَبْرُ عَنْ وَجْهِ الْأَرْضِ نَحْوَ مِنْ شِبْرٍ، وَيُسَطَّحُ، وَيُوضَعُ عَلَيْهِ حَصْبَاءُ"
கப்ரில் (தோண்டப்பட்ட) அதன் மண்ணை விட கூடுதலான மண் சேர்ப்பதை நாம் விரும்பமாட்டோம். அது ஹராம் என்பதைக் குறிப்பிடுவதற்காக அல்ல. மாறாக; அதனால் அது பாரியளவு உயர்ந்து விடும் என்பதற்காகவே! எனவே கப்ரு பூமியில் இருந்து ஒரு சாண் அளவு உயரத் தெரியும்படி செய்யப்படும். அது  மட்டப்படுத்தப்படும்.  (அடையாளமாக) அதன் மேல்
கல் ஒன்றும்  வைக்கப்படும்.

(இமாம் ஷாஃபிஈ ரஹி- நூல்- அல் உம்மு)

தெளிவு:

மேற்படி நூற்கள் ஷாஃபிஈ மத்ஹபின் சட்டங்களை ஆய்வு செய்வதில் முதல் முக்கிய இடம் பெறும் நூற்களாகும். 

ஷாஃபிஈ மத்ஹபினராக இருக்கின்ற மௌலவி சகோதரர்கள் இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவது கடமையாகும்.

அதை விடுத்து கப்ரைக் கட்டி வணங்கும் பிற்காலத்தில் வந்த சூஃபிகள், ஷீஆ மதத்தவரின் வழிமுறையைக் கடைப்பிடித்து கட்டப்படக் கூடாத கப்ருகளைக் கட்டி பராமரிப்பது இஸ்லாமிய ஆன்மீகமோ அஹ்லுஸ்ஸுன்னாக்களின் வழிமுறையாகவோ கிடையாது என்பதை கவனிக்க வேண்டும். 

➔ الأم للشافعي     الشافعي (ت ٢٠٤)

 وَأُحِبُّ أَنْ لَا يُزَادَ فِي الْقَبْرِ تُرَابٌ مِنْ غَيْرِهِ وَلَيْسَ بِأَنْ يَكُونَ فِيهِ تُرَابٌ مِنْ غَيْرِهِ بَأْسٌ إذًا إذَا زِيدَ فِيهِ تُرَابٌ مِنْ غَيْرِهِ ارْتَفَعَ جِدًّا، وَإِنَّمَا أُحِبُّ أَنْ يُشَخِّصَ عَلَى وَجْهِ الْأَرْضِ شِبْرًا أَوْ نَحْوَهُ وَأُحِبُّ أَنْ لَا يُبْنَى، وَلَا يُجَصَّصَ فَإِنَّ ذَلِكَ يُشْبِهُ الزِّينَةَ وَالْخُيَلَاءَ، وَلَيْسَ الْمَوْتُ مَوْضِعَ وَاحِدٍ مِنْهُمَا، وَلَمْ أَرَ قُبُورَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ مُجَصَّصَةً (قَالَ الرَّاوِي) : عَنْ طَاوُسٍ: «إنَّ رَسُولَ اللَّهِ - ﷺ - نَهَى أَنْ تُبْنَى الْقُبُورُ أَوْ تُجَصَّصَ» (قَالَ الشَّافِعِيُّ) : وَقَدْ رَأَيْت مِنْ الْوُلَاةِ مَنْ يَهْدِمَ بِمَكَّةَ مَا يُبْنَى فِيهَا فَلَمْ أَرَ الْفُقَهَاءَ يَعِيبُونَ ذَلِكَ

சுருக்கப் பொருள்:

அடக்கம் செய்கின்ற கப்ருக்கு அதன் மண்ணையே போட வேண்டும். மற்ற மண் போடுவதால் அது உயர்ந்து விடவும் கூடாது. 

ஒரு சாண் அளவே கப்ர் தெரிய வேண்டும். 

மதீனா மண்ணில் அன்ஸாரிகள், முஹாஜிர்களின் கப்ருகள் கட்டப்பட்டிருக்க தான் கண்டதில்லை.

ஷாஃபிஈ இமாம் கால ஆட்சியாளர்கள் மக்காவில் கட்டப்பட்டிருந்த  கப்ருகளை தகர்த்த போதும் ஃபுகஹாக்கள் அதைக் குறைகாணவில்லை

இப்பவாவது ஷாஃபிஈ இமாமின் மத்ஹபு எது என்பதைத் தெளிவாக அறிந்து செயல்படுவோம். 
والله الهادي إلى سواء السبيل 

 https://app.turath.io/book/1655#:~:text=%D9%88%D9%8E%D9%84%D9%8E%D8%A7%20%D9%86%D9%8F%D8%AD%D9%90%D8%A8%D9%91%D9%8F%20%D8%A3%D9%8E%D9%86%D9%92%20%D9%8A%D9%8F%D8%B2%D9%92%D8%AF%D9%8E%D8%A7%D8%AF%D9%8E%20%D9%81%D9%90%D9%8A%20%D8%A7%D9%84%D9%92%D9%82%D9%8E%D8%A8%D9%92%D8%B1%D9%90%20%D8%A3%D9%8E%D9%83%D9%92%D8%AB%D9%8E%D8%B1%D9%8F%20%D9%85%D9%90%D9%86%D9%92%20%D8%AA%D9%8F%D8%B1%D9%8E%D8%A7%D8%A8%D9%90%D9%87%D9%90%20%D9%84%D9%8E%D9%8A%D9%92%D8%B3%D9%8E%20%D9%84%D9%90%D8%A3%D9%8E%D9%86%D9%91%D9%8E%D9%87%D9%8F%20%D9%8A%D9%8E%D8%AD%D9%92%D8%B1%D9%8F%D9%85%D9%8F%20%D8%B0%D9%8E%D9%84%D9%90%D9%83%D9%8E%D8%8C%20%D9%88%D9%8E%D9%84%D9%8E%D9%83%D9%90%D9%86%D9%92%20%D9%84%D9%90%D8%A6%D9%8E%D9%84%D9%91%D9%8E%D8%A7%20%D9%8A%D9%8E%D8%B1%D9%92%D8%AA%D9%8E%D9%81%D9%90%D8%B9%D9%8E%20%D8%AC%D9%90%D8%AF%D9%91%D9%8B%D8%A7%D8%8C%20%D9%88%D9%8E%D9%8A%D9%8F%D8%B4%D9%8E%D8%AE%D9%91%D9%8E%D8%B5%D9%8F%20%D8%A7%D9%84%D9%92%D9%82%D9%8E%D8%A8%D9%92%D8%B1%D9%8F%20%D8%B9%D9%8E%D9%86%D9%92%20%D9%88%D9%8E%D8%AC%D9%92%D9%87%D9%90%20%D8%A7%D9%84%D9%92%D8%A3%D9%8E%D8%B1%D9%92%D8%B6%D9%90%20%D9%86%D9%8E%D8%AD%D9%92%D9%88%D9%8E%20%D9%85%D9%90%D9%86%D9%92%20%D8%B4%D9%90%D8%A8%D9%92%D8%B1%D9%8D%D8%8C%20%D9%88%D9%8E%D9%8A%D9%8F%D8%B3%D9%8E%D8%B7%D9%91%D9%8E%D8%AD%D9%8F%D8%8C%20%D9%88%D9%8E%D9%8A%D9%8F%D9%88%D8%B6%D9%8E%D8%B9%D9%8F%20%D8%B9%D9%8E%D9%84%D9%8E%D9%8A%D9%92%D9%87%D9%90%20%D8%AD%D9%8E%D8%B5%D9%92%D8%A8%D9%8E%D8%A7%D8%A1%D9%8F


மேலும் மரணம் நிகழ்ந்த வீட்டிற்கு அயலவரே உணவு சமைத்து தர வேண்டும்.

"مسألة:
قال الشافعي ﵁: " وَأُحِبُّ لِقَرَابَةِ الْمَيِّتِ وَجِيرَانِهِ أَنْ يَعْمَلُوا لِأَهْلِ الْمَيِّتِ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ طَعَامًا يَسَعُهُمْ فَإِنَّهُ سُنَّةٌ وَفِعْلُ أَهْلِ الْخَيْرِ ".

மரணம் நடைபெற்ற வீட்டாருக்கு அதன் அண்டை அயலவரே அவர்களுக்குப் போதுமான அளவு இரவு, பகல் உணவைத் தயார் செய்து தருவதை நான் விருப்பமாகக் காண்கின்றேன். அதுவே சுன்னத்தும், நன்மையாளர் செயலும் என இமாம் ஷாஃபிஈ (ரஹி) அவர்கள் குறிப்பிட்டுளளார்கள்.
((நூல்:அல்ஹாவி))

தெளிவு- இதுவே மரண வீட்டில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறையாக இருக்க ஷாஃபிஈ இமாம் பெயரில் கத்தம் ஃபாத்திஹா கூத்து போடுவது பெரும் தவறாகும்.


-எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
Previous Post Next Post