அக்ல் & நக்ல்

العقل 
அக்ல் - பகுத்தறிவு.
النقل
நக்ல் - குர்ஆன் ஹதீஸில் வரும் ஷரீஆவின் தெளிவான ஆதாரம்.

நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அவர்களின் வழியில் பயணித்த தாபியீன்கள் இமாம்களும் மற்றும் பல நூறு இமாம்களும் பகுத்தறிவை விட நக்ல் என்ற தெளிவான சான்றையே எப்போதும் முன்னிலைப்படுத்துவார்கள்.

அதாவது  மண்ணறை வாழ்வு, மீண்டும் எழுப்பப்படும் மஹ்ஷர் நிகழ்வு போன்ற மறைவான ஈமானிய அம்சங்களை தமது பகுத்தறிவு கொண்டு இறைமறுப்பாளர்களான காஃபிர்கள் மறுத்த போது வஹிதான் உண்மையானது.
பகுத்தறிவை இதில் புகுத்துவது குஃப்ர் என்ற ஈமானிய நிலைப்பட்டை எடுத்தனர்.

தக்ல் தமது குறுகிய பகுத்தறிவிற்கு உடன்படாது முரண்பட்ட போதிலும் நக்லை அசைக்க முடியாத ஆதாரமாகவும் ஈமானாகவும் எடுத்துக் கொள்வார்கள். 

உதாரணமாக மிஃராஜ் சம்பவம் 
கப்ரில் கேள்வி கணக்கு,
பர்ஸக் வாழ்வு,
சொர்க்கம், நரகம்,
அல்லாஹ் அர்ஷின் மீதிருந்தவனாக ஆட்சி செய்வது மற்றும் பல.

அதே வேளை; தங்களை பகுத்தறிவுவாதிகளாக கூறிக் கொள்வோர், மற்றும் முஃதஸிலா,  அஷ்அரிய்யா போன்ற பிரிவுக் கொள்கையாளர்கள் அல்லாஹ்வின் ஒரு சான்று, அல்லது தூதரின் ஆதாரப்பூர்வமான ஒரு கூற்று தமது குறுகிய பகுத்தறிவுக்கு முரண்பாடானவைகளா? எனப் பார்த்தே அவற்றை நம்பிக்கை கொள்வார்கள். 

இது பிற்காலத்தில் இவர்களாக தோற்றுவித்த ஒரு வழிபாடும் வழிகேடுமாகும். 

குறிப்பாக நம்பிக்கை கோட்பாடுகள் சார்ந்த விஷயங்களில் இதனை அவர்கள் அமுல்படுத்துவதோடு, குர்ஆன் வசனத்தில் வெளிப்படையில் பொருள் கொடுப்பது #குஃப்ர் இறை மறுப்பு என வாதம் வேறு பேசி உள்ளனர்.

இதில் மரண வேளையில் தவ்பா செய்தவராக கூறப்படும் இரு இமாம்களான அல்ஜுவைனி,
அல்-பக்ருர் ராஸீ,
மற்றும்
அல்-ஆமிதீ,
அல்கஸ்ஸாலீ
அஸ்ஸனூஸி போன்ற அறிஞர்கள் இந்த நிலைப்பாட்டில் இருந்தவர்களே! 

இவர்கள் போதித்த அகீதா கோட்பாடு இந்த வகை சார்ந்ததே!
அதாவது ஒரு சான்றுக்கு நேரடியான பொருள் இருக்க அதனை மறுத்த, அதற்கு வேறு பொருள் தந்து விளக்கமளிப்பது. 
உதாரணமாக அல்லாஹ்வின் இரு கரம் என்றால் இரு அருள் எனக் கூறும் புதுமை.  

பிற்கால அறிஞர்கள் கீறிய கோடுகளைத் தாண்டாது பயணிப்பதன்  காரணமாகவே அஷ்அரிய்யா பிரிவினருக்கு அல்லாஹ்வைப் பற்றிய போதிய  அறிவு இல்லாமல் இன்றும் தடுமாறிய நிலையில் இருக்கின்றனர்.

மறுமையில் காணும் அல்லாஹ்வுக்கு ஒரு அழகிய தோற்றம் இருக்கின்றது என்றால் இம்மையில் அவன் இவ்வுலகில் நாம் கற்பனை செய்ய முடியாத அவனது அழகிய தோற்றம் இன்றி எப்படி சுத்த சூனியமாகிப் போனான் என்ற கேள்விக்கு தடுமாற்றமே அஷ்அரிய்யாக்களின் பதிலாக இருக்கும்.

இமாம் ஷாஃபிஈ ரஹி வின் அகீதா பற்றித் தேடாது பிற்கால அதுவும் தவ்பா செய்து இமாம் அஹ்மத் வழியில் அகீதாவை சரி கண்ட இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ  இமாமின் அகீதா பற்றிப் பேசுவதும் இந்த பகுத்தறிவின் தாக்கத்தில் விளைந்ததாகும்.

இந்த தாக்கமே ஷேக் கஸ்ஸாலி மற்றும்  தற்கால ஹதீஸ் மறுப்பாளரான நாஸ்தீக விளக்கம் தரும் பீ.ஜே போன்ற வர்களிடம் ஒரு ஹதீஸ் குர்ஆனுக்கும் உலக நடைமுறைக்கும் மாற்றமின்றி இருத்தல் என்ற மற்றொரு புதிய பித்ஆ சிந்தனையாகும்.

இமாம் இப்னு தைமிய்யாவின்
درء تعارض العقل والنقل 
என்ற நூலில் இந்த நோய்க்கு நிறைய நிவாரணிகள் உண்டு. 

எம்.ஜே. எம். ரிஸ்வான் மதனி

Previous Post Next Post