உலகத்தில் வசிக்கும் மனைவிமார்களின் மீது ரோஷப்படும் வானில் உள்ள ஹுருல்ஈன்கள்.

எப்பொழுதும் பெண்கள் கணவன்மார்களை குறை சொல்வது ஒரு புறம் இருக்க கணவன்மார்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய தவறும் சில பெண்கள் மறுபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள்,

எத்தனையோ குடும்பங்களில் ஆண்கள் ஒழுக்கம் தவற அந்த பெண்களே காரணமாக இருக்கிறார்கள், ஒரு மனைவிக்கு தன் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து காரியங்களையும் பூர்த்தி செய்வதற்காக காலையிலிருந்து மாலை வரை கடுமையான உழைப்புகளை மன உளைச்சல்களையும் ஒரு ஆண் முன்னோக்குகிறார்,

மாலையில் வீடு திரும்பும் பொழுது தனது மனைவியை சொர்க்கத்தின் ஹுருல்ஈன்களாக தான் பார்க்கிறார், ஆனால் அவளிடம் இருந்து எதிர்வினைகள் கடுமையாக இருக்கின்றன,

சிரித்த முகத்துடன் தன்னை அலங்கரித்து கணவனை வரவேற்கத் தவறும் எத்தனையோ பெண்கள் உள்ளே நுழையும் கணவனுக்கு ஒரு மிடர் தண்ணீர் கூட கொடுப்பதில்லை.

நபிமொழிகளில் நிறைந்திருக்கும் கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ற தலைப்பில் பேசினால் இங்கு இடம் பற்றாக்குறையாக ஆகிவிடும்.

பெண்கள் அதிகமாக நரகம் போவதின் காரணம் தனது கணவன்மார்களுக்கு மாறு செய்வதனால் என்ற நபி மொழிகளையும் நாம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

ஒரு பெண் தன் கணவனால் அழைக்கப்பட்டு தனது ஹலாலான விருப்பத்தை அந்த பெண் நிறைவேற்ற வில்லை என்று சொன்னால் அந்த இரவு முழுவதும் மலக்குகளின் சாபத்திற்கு அந்த பெண் ஆளாகிறார் என்பதை மறந்து விடுகிறார்கள்.

மலக்குகளின் சாபம் என்பது வானிலிருந்து இறங்கும் ஒரு வகையான ஆபத்து என்பது உணர்வதில்லை.

அது சில சமயம் உடலை வருத்தக்கூடிய நோயாகவும் இருக்கலாம் மனதை உருக்கக் கூடிய கவலைகளாக இருக்கலாம் என்பதை பெண்கள் நீங்கள் மறந்து விடாதீர்கள்.

ஒரு ஆண் நேர்மையை இழப்பதில் மனைவிக்கும் பங்கு உண்டு, வீணான ஆடம்பர செலவுகளினால் ஆண்களை ஹராமான வருமானத்திற்கும் சில பெண்கள் தள்ளி விடுகிறார்கள்.

நாம் இந்த கருத்தை பெண்களின் மனம் கஷ்டப்படுவதற்காக வேண்டி எழுதவில்லை , சாலிஹான பல பெண்கள் இருக்கும் நிலையில் ஒரு சிலர் செய்யும் தவறுகளினால் இந்த கருத்துக்களை பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.

மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவன்மார்களுக்கு இதோ அற்புதமான நபிமொழி.....

முஆத் பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ﷺ அவர்கள் சொன்னதாக சொல்கிறார்கள்...

உலகில் ஒரு மனைவி தனது கணவருக்கு நோவினை செய்யும் பொழுது அவருடைய  ஹுருல்ஈன்களான மனைவிகள் கூறுவார்களாம்.

"அவரை நோவினை செய்யாதே அல்லாஹ் உன்னை அழித்து விடுவானாக !! அவர் உன்னிடத்தில் விருந்தாளியாக வருகை தந்திருக்கிறார் வெகு விரைவில் உன்னை விட்டு பிரிந்து எங்களிடம் வருவார்".

நூல் -திர்மிதி-1174
தரம்- ஸஹீஹ்

-தமிழில்
உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி
Previous Post Next Post