வாசிப்புத் திறன்

வாசிப்புத் திறன்-Reading skills-مهارة القراءة இன்று சமூகத்தில் நிலவும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு புத்தக வாசிப்பில் இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது என்று அடியேன் கருதுகிறேன் ,

இவர் இதைப் பற்றி இப்படி சொன்னார் அவர் அதைப் பற்றி  இப்படி சொல்கிறார் எது சரியானது ? என்று நாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாமல்  ஒரு துறையில் சிந்தனை தெளிவில்லாமல் இருந்தால் முதலில் நமக்கு தேவை வாசிப்பு அதை நாம் முதலில் சுவாசிக்க வேண்டும்.....

சமகால அறிஞர்களில் ஒருவரான அஷ்ஷைக் முஸன்னா பின் அப்துல் அஜீஸ் அல்ஜர்பா ஹஃபிழஹுல்லாஹு
அவர்கள் ஒரு அற்புதமான கருத்தை தெரிவிக்கிறார்கள், குறிப்பாக இந்த தகவலை இங்கு பதிவதற்கு அடிப்படையான காரணம் நாம் கொண்டிருக்கும் சித்தாந்தம் நாம் கொண்டிருக்கும் இயக்கச் சிந்தனை நாம் வாசித்த புத்தகங்கள் என்று தம்மை ஒரு சிறு வட்டத்திற்குள் சுருக்கி விடாமல் துறை சார்ந்த விடயங்களில் நமக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் அதையும் வாசிக்க வேண்டும்.

இந்த செய்தி இஸ்லாமிய அழைப்பாளர்கள் குறிப்பாக ஆலிம் உலமாகக்கள், இஸ்லாமிய கல்வி நிலையங்களில் படிக்கும் அடியேனைப் போன்ற மாணவர்களுக்கும் சமர்ப்பணம்....

இமாம் தஹபி அவர்கள் தங்களது புத்தகமான ஸியர் அல்அஃலாமுன் நுபலா (سير أعلام النبلاء) என்ற வரலாற்று புத்தகத்தில் பதினெட்டாம் வால்யமில் 
இமாம் இஸ் பின் அப்துஸ் ஸலாம் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் கீழ்கண்ட புத்தகங்களை போல் நான் இஸ்லாத்தில் சிறந்த புத்தகங்களை கண்டதில்லை என்று 4   புத்தகங்களை குறிப்பிடுகிறார்கள்.

1- அல்முஹல்லா - இமாம் இப்னு ஹஸ்ம் அல்ழாஹிரி ரஹிமஹுல்லாஹ்

المحلى في شرح المجلى بالحجج والآثار لمؤلفه الأمام علي بن حزم الأندلسي

2- அல்முக்னீ - இமாம் இப்னுல் குதாமா ரஹிமஹுல்லாஹ்
المغني لابن قدامة

3- அஸ்ஸுனனுல் குப்ரா - இமாம் அல்பைஹகி 

السنن الكبرىأبو بكر أحمد بن الحسين بن علي بن موسى البيهقي

4- அத்தம்ஹீத் - இமாம் இப்னுல் பர் ரஹிமஹுல்லாஹ் 

التمهيد لما في الموطأ من المعاني والأسانيد هو شرح للأحاديث المرفوعة في الموطأ، ألفه الحافظ ابن عبد البر

சில அறிஞர்கள் கூடுதலாக கீழ்காணும் இந்த மூன்று புத்தகங்களையும் ஒரு ஆலிம் படித்தால் அவர் துறைச் சார்ந்த நிபுணராக ஆகலாம் என்று ஆர்வப்படுத்துகிறார்கள்

5-அத்தப்ஃஸீர் அத்தபரி - இமாம் தபரி

جامع البيان في تفسير القرآن أو جامع البيان عن تأويل آي القرآن أو جامع البيان في تأويل القرآن المعروف بـ «تفسير الطبري» للإمام محمد بن جرير بن يزيد بن كثير بن غالب الشهير بالإمام أبو جعفر الطبري

6- பஃத்ஹுல் பாரி - இமாம் இப்னுல் ஹஜர் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ்

فتح الباري بشرح صحيح البخاري ألفه الحافظ ابن حجر العسقلاني

7- மஜ்மூஃ அல்பஃதாவா - ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ்

مجموعُ الفتاوىٰ هو كتاب يجمع فتاوى شيخ الإسلام ابن تيمية

இந்த புத்தகங்கள் குறிப்பிட்ட பிஃக்ஹுத்துறை சார்ந்ததல்ல, இதில் ஹனபிஃ, ஹம்பளி,மாலிகி, ஷாஃபிஈ, ழாஹிரி போன்ற பிஃக்ஹுத்துறை சிந்தனை பள்ளிகளைச் சார்ந்த இமாம்களின் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன ஒவ்வொரு புத்தகமும் 15 வாலியம்களுக்கும் அதிகமானது,

இஸ்லாமிய கல்வியில் மிகப்பெரிய கலைக்களஞ்சியம் என்று சொல்லலாம்,
அதேபோல் தப்ஸீர் திருக்குர்ஆன் விளக்கவுரை நபி மொழிகளின் விளக்க உரை, இஸ்லாத்தின் அதிகப்படியான துறைகளில் மார்க்க தீர்ப்புகள் என்ற இந்த ஏழு புத்தகங்களை ஒரு மார்க்க அறிஞர் முழுவதும் படித்து விளங்கினால் அவரிடம் இருந்து சமூகத்திற்கு மிகப்பெரிய மறுமலர்ச்சியும் மாற்றமும் வரும் என்று நம்பலாம்.

இந்த புத்தகங்களில் இமாம்கள் பெரும்பாலும் ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் அவர்களுக்குள் சிந்தனை ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பாருங்கள் எவ்வாறு தங்களுக்கு எதிராக மாற்றுக்கருத்துடைய உலமாக்களின் புத்தகத்தை மதிக்க தெரிந்திருக்கிறது நாம் இன்று ஒரு சில நபி மொழிகளை வசனங்களை விளங்கியவுடன் மாற்றுக்கருத்தினர்களை சபிக்க ஆரம்பித்து விடுகிறோம்.

இதற்கு மாற்றமாக குறிப்பிட்ட சிந்தனை பள்ளியை மையமாக வைத்து ஒரு சில புத்தகங்களை படித்து அதை மட்டுமே மார்க்கமாக கருதி அழைப்பு பணி செய்வதால் ஏற்படும் விளைவு சமூகத்தில் பிளவுகளும் ஒற்றுமையின்மையும் உருவாகிறது.

வாருங்கள் புத்தக வாசிப்பை அதிகப்படுத்துவோம் கல்வி ஞானத்தை மெருகூட்டுவோம் மக்களுக்கு குழப்பம் இல்லாத மார்க்க போதனைகளை வழிகாட்டுவோம்.

அரபு மொழியில் இந்த விடயங்களை கேட்பதற்கு கீழ்க்காணும் யூடியூப் சுட்டியை சொடுக்கவும்.

https://youtu.be/ye-rwRepdhE

-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி
Previous Post Next Post