நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள் :
"நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுள்ள, செல்வந்தனான, மறைந்து கொள்கின்ற அடியானை நேசிக்கின்றான்."
இமாம் இப்னு உதைமீன் றஹ் அவர்கள் இந்த ஹதீஸில் வரும் அடியானின் மூன்று பண்புகளுக்கும் விளக்கம் அளித்துள்ளார்கள் :
இறைச்சமுள்ளவன் :
அல்லாஹ்வின் ஏவல்களைப் பேணியும், விலக்கல்களை விட்டு விலகியும் வாழ்வதன் மூலம் அல்லாஹ்வை அஞ்சி வாழ்பவன்.
செல்வந்தன் :
பிற மனிதர்களின் தயவை நாடாது வாழ்பவன்.
மறைத்துக் கொள்பவன் :
தன்னை வெளிப்படுத்தி காட்டிக் கொள்ளாது , மக்கள் முன் தோன்றுவதில் அக்கறை காட்டாது மறைந்து வாழ்பவன்.