பருவ வயதை அடையாத சிறுவர்களை fபஜ்ர் தொழுகைக்காக எழுப்புதல் பற்றிய சட்டம் என்ன?


          அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர்கள் அளித்த பதிலும் வருமாறு:

*👉🏿 கேள்வி:* எனது மகன் எட்டு வயதை அடைந்திருக்கின்றான். தூக்கத்திலிருக்கும் அவனை fபஜ்ர் தொழுகைக்காக நான் எழுப்ப வேண்டுமா? (எழும்பியிருந்தும்) அவன் தொழவில்லையென்றால் எனக்குப் பாவமா?

*🔅பதில்:* இவ்விடயம்  பின்வருமாறு நோக்கப்பட வேண்டும் என்பதுவே இதன் வெளிப்படையான பார்வையாகும்.

👉🏿 உதாரணமாக, மாரிகால நாட்களில், குளிரும் சிரமுமுள்ள நாட்களில் இது இருக்குமாக இருப்பின் (fபஜ்ர் தொழுகைக்கு எழுப்பப்படாமல்) அச்சிறுவன் விட்டுவிடப்படுவதில் பிரச்சினை கிடையாது. (எழுப்பிய நேரத்தில்) அவன் எழுந்துவிட்டால், 'நீ தொழுதுகொள்!' என்று அவனுக்குச் சொல்லப்பட வேண்டும்.

👉🏿 காலநிலை சீராக இருந்து, எழுப்பி விடுவதில் சிறுவனுக்கு தீங்கெதுவும் இல்லை என்று இருக்குமாக இருந்தால், அவன்  மக்களோடு சேர்ந்து  தொழ வேண்டும்; அதை அவன் வழமையாக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவனை நீர் எழுப்பி விடுவீராக.

         அல்ஹம்து லில்லாஹ்! இப்போது,  ஏழுக்கும் பத்துக்கும் இடைப்பட்ட வயதையுடைய சிறுவர்கள் சிலர்  இருக்கவே செய்கின்றார்கள். அவர்கள் fபஜ்ர் தொழுகையில் கலந்துகொள்வதற்காக வேண்டி தமது தகப்பன்மார்களுடன் செல்வதை நாம் கண்டுகொண்டிருக்கிறோம். சிறுவன் தனது ஆரம்ப வயதிலேயே இதன்மீது (தன் செயல்பாட்டை) வழமையாக்கிக் கொண்டால் இதில் அவனுக்கு நிறைய நலவுகள் இருந்துகொண்டிருக்கும்.

👉🏿  (எழப்புவதால்) சிரமமும் கஷ்டமும் சிறுவர்களுக்கு இருக்குமாக இருப்பின் அவர்களை நீர்  எழுப்புவது உம் மீது கடமை கிடையாது. என்றாலும்,   தூக்கத்திலிருந்து அவர்கள் விழித்துக்கொண்டுவிட்டால் தொழும்படியாக அவர்களுக்கு நீர் ஏவ வேண்டும்!”.

{ நூல்: 'அல்லிகாவுஷ் ஷஹ்ரீ ', பக்கம்:40 }


         سئل العلاّمة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:

*🔅السؤال:* إبني يبلغ من العمر ثمان سنوات، هل أوقظه لصلاة الفجر؟ وإذا لم يصلّ هل أنا آثم؟

*🔅الجواب:* الظاهر أن هذا ينظر: إذا كان مثلا في أيام الشتاء وأيام البرد والمشقة فلا بأس أن يترك؛ وإذا قام، يقال له: صلّ.

         وأمّا إذا كان الجوّ معتدلا ولا ضرر عليه في الإقامة فأقمه حتى يعتاد ويصلّي مع النّاس.

         ويوجد والحمد لله الآن صبيان صغار ما بين السابعة إلى العاشرة نراهم يأتون مع آبائهم في صلاة الفجر، فإذا اعتاد الصّبيّ على ذلك من أول عمره صار في هذا خير كثير. أمّا مع المشقة فإنه لا يجب عليك أن توقظهم، لكن إذا استيقظوا مرهم بالصّلاة ».

[ المصدر: اللقاء الشهري، ص- ٤٠ ]

🌻➖➖➖➖➖➖➖➖🌻

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم