மூன்று வகையான நஃப்ஸுகள்

- அஷ்ஷைஃக் இப்னு உ'தைமீன் ரஹிமஹுல்லாஹ்

நஃப்ஸுகள் மூன்று (வகைப்படும்), நஃப்ஸுகள் மூன்று (வகைப்படும்). 

1. நஃப்ஸுன் ஷிர்ரீராஹ் (தீய நஃப்ஸ்): அது பாவம் செய்யும்படி அதிகம் தூண்டக்கூடியது. 

2. நஃப்ஸுன் ஃகய்யிறாஹ் (நல்ல நஃப்ஸ்): அது அமைதிபெற்ற ஒன்று, நன்மையை ஏவக்கூடியது. 

3. நஃப்ஸுன் லவ்வாமாஹ் (மிக நிந்திக்கக்கூடிய நஃப்ஸ்).

இவையனைத்தும் அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

தீமையை அதிகம் ஏவக்கூடிய தீய நஃப்ஸானது, எந்த ஸூராவில் குறிப்பிடப்பட்டுள்ளது? ஸூரா யூஸுஃபில் உள்ளது. 

وَمَاۤ اُبَرِّئُ نَفْسِىْ‌ اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌ بِالسُّوْٓءِ

“மேலும், நான் என் மனதை (தவறுகளிலிருந்து தூய்மையானது என்று கூறி) பரிசுத்தப்படுத்தவில்லை; (ஏனெனில், மனிதனுடைய) மனம் பாவம் செய்யும்படி அதிகம் தூண்டக்கூடியதாகவே இருக்கின்றது. (அல்குர்ஆன் 12:53)

நன்மையை ஏவக்கூடிய அமைதி பெற்ற நல்ல நஃப்ஸானது, எந்த ஸூராவில் குறிப்பிடப்பட்டுள்ளது? ஸூரத்துல் ஃபஜ்ரில் உள்ளது. 

يٰۤاَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَٮِٕنَّةُ ارْجِعِىْۤ اِلٰى رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً‌ فَادْخُلِىْ فِىْ عِبٰدِىۙ‏ وَادْخُلِىْ جَنَّتِى‏
 ‏
(அல்லாஹ்வின் கட்டளைகளை உண்மைப்படுத்துவது கொண்டு) அமைதிபெற்ற ஆத்மாவே! நீ உன் இறைவனின் பக்கம் (அவனைத்) திருப்தியடைந்த நிலையிலும், (அவனிடம்) பொருந்திக் கொள்ளப்பட்ட நிலையிலும் மீள்வாயாக! நீ எனது அடியார்(களான நல்லோர்களின் கூட்டங்)களில் பிரவேசிப்பாயாக! மேலும், என்னுடைய சுவனத்தில் நீ நுழைந்துவிடுவாயாக! (அல்குர்ஆன் : 89:27-30)

மிக நிந்திக்கக்கூடிய நஃப்ஸானது, ஸூரத்துல் கியாமாவில் குறிப்பிடப்பட்டுள்ளது:

لَاۤ اُقْسِمُ بِيَوْمِ الْقِيٰمَةِۙ‏ وَلَاۤ اُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ‏ 

மறுமைநாளைக் கொண்டு நான் சத்தியம் செய்கிறேன். மிக நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவைக் கொண்டும் நான் சத்தியம் செய்கிறேன். (அல்குர்ஆன் 75:1,2)

மிக நிந்திக்கக்கூடிய நஃப்ஸானது, நல்ல மற்றும் தீய நஃப்ஸல்லாத வேறொன்றா, அல்லது அது அவ்விரண்டு நஃப்ஸுகளுடைய (ஒரு பண்பா)?

அறிஞர்களில் சிலர் “அது மூன்றாவது (வகை) நஃப்ஸாகும்” என்று கூறுகின்றனர். மேலும் அவர்களில் சிலர், “மாறாக அது முன் சென்ற இரு நஃப்ஸுகளின் ஒரு பண்பாகும்” என்று கூறுகின்றனர்.

உதாரணத்திற்கு, நல்ல நஃப்ஸானது உன்னை நிந்திக்கும், எப்பொழுது? ஒரு தீமையை நீ செய்தால் அல்லது ஒரு கடமையில் நீ குறைவைத்தால், உன்னை அது நிந்திக்கும்.

தீய நஃப்ஸானது உன்னை நிந்திக்கும், எப்பொழுது? ஒரு நன்மையை நீ செய்தால் அல்லது ஒரு ஹராமான காரியத்தை விட்டு நீ தவிர்ந்து கொண்டால், உன்னை அது நிந்திக்கும்; “உனது நஃப்ஸை (பாவத்தை விட்டும்) எவ்வாறு நீ தடுப்பாய்? ஏன் நீ சுதந்திரமாக இல்லை? ஏன் நீ விரும்பியவற்றையெல்லாம் செய்யக்கூடாது?” என்று தீமையை அதிகம் ஏவுகின்ற நஃப்ஸானது கூறும்.

நல்ல ஆன்மாவைப் பொறுத்தவரையில், தீமையை செய்யும் பொழுதும், நன்மையை விடும் பொழுதும் நிந்திக்கும். தீய ஆன்மாவோ அதற்கு மாற்றமானதாகும் (நன்மையை செய்யும் பொழுதும், தீமையை விடும் பொழுதும் நிந்திக்கும்).

🔗 https://alathar.net/home/esound/index.php?op=codevi&coid=165543

அரபியுடன் வாசிக்க:
https://docs.google.com/document/d/e/2PACX-1vSKzCa4mDZaoRn1DTGxM7lzHhDjxbHVQBWlsJgsOl8Wrom661i82CCm21jQ_2qSuWwiCid3ID9V47kH/pub 

மேலும் பல மொழிபெயர்ப்புகளைக் காண:
t.me/salafimaktabahmpm

- மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.
Previous Post Next Post