இமாம் சுப்fயான் இப்னு உயைனா (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, தான் ஒரு பெண்ணைத் திருமணம் முடித்து, அவளிடம் தான் எல்லாவற்றையும் விட மிக இழிவானவராகவும் மிகக் கேவலமானவராகவும் இருந்து வருவதாக முறையிட்டார். அதாவது, தன்னை மனைவி இழிவுபடுத்துவதாகச் சொன்னார்.
*"கண்ணியத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகத்தான் அவளை நீர் விரும்பியிருக்கின்றீர் போல! அப்படித்தானே!?"* என இமாமவர்கள் அம்மனிதரிடம் கேட்க அவர், *"ஆம்!"*என்று சொன்னார்.
_அப்போது இமாம் சுப்fயான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள்:_
*"(மணப்பெண் தேர்வு விடயத்தில்) எவன் கண்ணியத்தின்பால் செல்வானோ, அவன் இழிவைக்கொண்டு சோதிக்கப்படுவான்; எவன் சொத்து செல்வத்தின்பால் செல்வானோ அவன் வறுமையைக்கொண்டு சோதிக்கப்படுவான்; எவர் மார்க்கத்தின்பால் செல்வாரோ அவருக்கு அல்லாஹ் மார்க்கத்துடன் சேர்த்து கண்ணியத்தையும் செல்வத்தையும் ஒன்றுசேரக் கொடுப்பான்!".*எனக் கூறினார்கள்.
_{ நூல்: 'ஹில்யதுல் அவ்லியா', 7/289 }_
🌷➖➖➖➖➖➖➖➖🌷
اشتكى رجل عند سفيان بن عيينة رحمه الله أنه تزوج إمرأة، فصار أذل الأشياء عندها وأحقرها: أي أنها تذله.
_فقال سفيان:_*"لعلك رغبت إليها لتزداد عزا؟!"*
_قال:_*"نعم!"*
_فقال سفيان: *"من ذهب إلى العز أبتلي بالذل، ومن ذهب إلى المال أبتلي بالفقر، ومن ذهب إلى الدين يجمع الله له العز والمال مع الدين!"*
_{ حلية الأولياء، ٧/ ٢٨٩ }_
🌷➖➖➖➖➖➖➖➖🌷
✍தமிழில்✍
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா