மனைவிக்கு அழகு சேர்ப்பது உண்மையில் அக அழகுதான்


        அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

        “நாம் முன்னர் குறிப்பிட்டது போல *ஒன்று:* இல்லற இன்பம் அனுபவித்தல். *இரண்டு:*  நல்லதொரு குடும்பத்தை உருவாக்கி,  சீரான சமூகமொன்றைத் தோற்றுவித்தல் ஆகியவையே திருமணத்தின் மூலம் நாடப்படுகின்ற  நோக்கமாகும். இந்த அடிப்படையில், இவ்விரு முக்கிய கடமையிரண்டையும் பூரணத்துவமான முறையில் சாத்தியப்படுத்த முடியுமான பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதே இங்கு  அவசியமாகும். புற அழகையும், அக அழகையும் அணிகலனாகப் பெற்றுள்ளவள்தான் அந்தப் பெண் ஆவாள்!

*🔅புற அழகுடைய பெண்:*  (குறையேதுமில்லாது) உடல் அமைப்பு பூரணத்துவம் பெற்றவளாக இருப்பவள்தான் இப்பெண்ணாவாள். அழகிய தோற்றமும், இனிமையான பேச்சும் உடையவளாக மனைவி இருக்கும்போதெல்லாம் அவளைப் பார்த்துவிட்டாலே கணவனின் கண் குளிர்ச்சியடையும்; அவள் பேச்சை காது நன்கு செவிதாழ்த்திக் கேட்கும்; அவளுக்காக உள்ளம் திறந்து கொடுக்கும்; அவளுக்காக மனமும் விரிவடையும்; அவளின்பால் ஆன்மாவும் அமைதி பெறும்; கீழ்க்காணும் அல்லாஹ்வின் கூற்றும் அவளில் உறுதிப்படுத்தப்படும். *“நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவியர்களை உங்களிலிருந்தே அவன் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும்,  நேசத்தையும் உண்டுபண்ணியிருப்பதும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும்”* (அல்குர்ஆன், 30: 21)

*🔅அக அழகுடைய பெண்:* இந்தப் பெண் மார்க்கமும், நற்பண்பும் உடையவளாக இருப்பாள். அதிக மார்க்கப் பற்றும், பரிபூரண நற்பண்புமுடையவளாக மனைவி இருக்கும் போதெல்லாம் மனதுக்கு அதிக விருப்புடையவளாகவும், இறுதி முடிவு மிகச் சீராக இருக்கக் காரணமானவளாகவும் அவள் ஆகிவிடுவாள். ஏனெனில், மார்க்கப் பற்றுடைய பெண்தான் அல்லாஹ்வின் ஏவலை எடுத்து நடப்பாள்; தன் கணவனின் உரிமைகளைப் பேணி நடப்பதோடு அவனின் படுக்கையையும், அவனின் பிள்ளைகளையும்,  அவனது சொத்துபத்தையும் பாதுகாப்பாள்; அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் விடயத்தில் அவனுக்கு உதவியாகவும்  இருப்பாள்; (இறைக்கட்டளையை நிறைவேற்ற) அவன் மறந்து விட்டால் அவனுக்கு நினைவூட்டுவாள்; அவன் சோர்வடைந்தால் அவனை உற்சாகப்படுத்துவாள்; அவன் கோபப்பட்டால் அவனைத் திருப்திப்படுத்துவாள்.

        ஒழுக்கமுள்ள பெண்தான் தன் கணவனிடம் இரக்கமாக நடந்துகொள்வாள்; அவனை கண்ணியமும் படுத்துவாள்; அவள் முற்படுத்திச் செய்ய  வேண்டும் என்று கணவன் விரும்புகின்ற விடயத்தில் பிற்படுத்தல் செய்யமாட்டாள்; எதில் அவளின் பிற்படுத்தல் இருக்க வேண்டும் என்று அவன் விரும்புகிறானோ அதில் அவள் முற்படுத்தல் செய்யவுமாட்டாள். *“மனைவிமார்களில் மிகச்சிறந்தவள் யார்?”* என்று நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், *“கணவன் பார்த்தால் அவனை அவள்  சந்தோசப்படுத்துவாள்; அவன் கட்டளையிட்டால் அவனுக்கு அவள்  கட்டுப்படுவாள்; அவன் வெறுக்கும் விவகாரத்தில் தன்னோடு சம்பந்தப்பட்ட விடயமாயினும், அவனோடு சம்பந்தப்பட்ட சொத்துபத்து விடயமாயினும்  அவனுக்கு மாறுசெய்து நடக்கமாட்டாள்!”* என்று கூறினார்கள்.

            இந்த வகையில், புற அழகும் அக அழகும் உள்ளதை சாத்தியப்படுத்தும் பெண்ணொருவளை மனைவியாகப் பெற்றுக்கொள்ள ஒருவருக்கு முடியுமாக இருக்குமாயின் அல்லாஹ்வின் பேரருளால் அதுதான் பூரணத்துவமும் மகிழ்ச்சியுமாகும்!”.

{ நூல்: 'அஸ்ஸவாஜு வ மஜ்மூஅது அஸ்இலதின் fபீ அஹ்காமிஹி', பக்கம்: 19,20 }

💐➖➖➖➖➖➖➖➖💐

          قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

      { النكاح يراد للإستمتاع وتكوين أسرة صالحة ومجتمع سليم كما قلنا فيما سبق. وعلى هذا فالمرأة التي ينبغي نكاحها هي التي يتحقق فيها إستكمال هذين الفرضين: وهي التي إتّصفت بالجمال الحسّيّ والمعنويّ.

*🔅فالجمال الحسّيّ:* كمال الخلقة؛ لأن المرأة كلّما كانت جميلة المنظر، عذبة المنطق، قرّت العين بالنظر إليها، وأصغت الأذن إلى منطقها، فينفتح لها القلب، وينشرح لها الصدر، وتسكن إليها النفس، ويتحقق فيها قوله تعالى: *« ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لّتسكنوا إليها وجعل بينكم مودّة وّرحمة »* (سورة الروم: الآية - ٢١ )

*🔅والجمال المعنويّ:* كمال الدّين والخلق. فكلّما كانت المرأة أدين وأكمل خلقا كانت أحبّ إلى النفس، وأسلم عاقبة.فالمرأة ذات الدّين قائمة بأمر الله؛ حافظة لحقوق زوجها وفراشه، وأولاده، وماله؛ معينة له على طاعة الله تعالى؛ إن نسي ذكرته، وإن تثاقل نشطته، وإن غضب أرضته.

        والمرأة الأديبة تتودّد إلى زوجها، وتحترمه، ولا تتأخر عن شيئ يحب ان تتقدم فيه، ولا تتقدم في شيئ يحب أن تتأخر فيه. ولقد سئل النّبي صلّى الله عليه وسلم، أيّ النّساء خير؟ قال: *« التي تسرّه إذا نظر، وتطيعه إذا أمر، ولا تخالفه في نفسها، ولا ماله بما يكره »*.

          فإذا أمكن تحصيل إمرأة يتحقق فيها جمال الظاهر، وجمال الباطن فهذا هو الكمال والسعادة بتوفيق الله! }

   [ *المصدر:* الزواج ومجموع أسئلة في أحكامه، ص - ١٩،٢٠ ]

💐➖➖➖➖➖➖🔅➖💐

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post