பொய்ச் சத்தியம் செய்து சம்பாதிப்பவற்றில் 'பரக்கத்' (அருள்வளம்) இருக்காது

🎯 நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்)  அவர்கள் கூற தான் செவியேற்றதாக நபித்தோழர் அபூஹுரைரா ரழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் இவ்வாறு  அறிவிக்கிறார்கள்: *“(பொய்ச்) சத்தியம் செய்வது பொருளை விலைபோகச் செய்யும்;  ஆனால், அருள்வளத்தை அது  அழித்து விடும்!”* (நூல்: புகாரி, ஹதீஸ் இலக்கம் - 2087).

             இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்)  கூறுகின்றார்கள்:-

          “வியாபாரப் பொருளை விற்பதற்காகச் செய்யப்படும் பொய்ச் சத்தியம் பல வகைகளாக இருக்கின்றன. குறிப்பிட்ட பொருளையே பற்றியதான சத்தியமாக சிலவேளை அது இருக்கும்.  'சத்தியமாக! இது  பிரபல்யமான இந்தக் கம்பனியுடைய  பொருள்தான்; இது  தரமிக்கது!' என்று வியாபாரி செய்யும் சத்தியத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஆனால் அவன் சொன்ன அந்தக் கம்பனிப் பொருளாக அது இருக்காது. அல்லது பொருளின் வகை பற்றியதாக அச்சத்தியம் இருக்கும். உதாரணமாக,  'இப்பொருள் இரும்பினால் செய்யப்பட்டது!' என வியாபாரி  சத்தியமிட்டுக் கூறுவான். ஆனால், பொருள் பலகையினால் செய்யப்பட்டதாக இருக்கும். அல்லது பொருளின் தன்மை பற்றியதாக அச்சத்தியம் இருக்கும்.  உதாரணமாக, 'இது நல்ல பொருள்' என சத்தியமிட்டு வியாபாரி கூறுவான். ஆனால், பொருள் மோசமானதாக இருக்கும். அல்லது பொருளின் பெறுமதி பற்றியதாக அச்சத்தியம் இருக்கலாம். உதாரணமாக, 'இப்பொருளின் விலை பத்து நாணயங்கள் என்று அவன் சத்தியமிட்டுக் கூறுவான். ஆனால், பொருளின் விலையோ எட்டு நாணயங்கள் பெறுமதிகொண்டதாகவே இருக்கும். 

           *“அருள்வளத்தை அது அழித்து விடும்!”* என்ற நபிமொழி வாசகத்தில் வரும் *'அழிவு'* என்பது வெளியில் தெரியும்படியான வெளிப்படை அழிவையும் குறிக்கும். வெளியே தெரியாதிருக்கின்ற மறைமுக அழிவையும் அது குறிக்கும். வெளிப்படையான அழிவைப் பொறுத்தளவில் அது இவ்வாறு ஏற்படலாம்:  அதாவது, பொய்ச் சத்தியம் செய்து பொருளீட்டியவனின் பணத்தில் அல்லது சொத்தில் தீப்பிடித்தல், அல்லது அது அபகரிப்புக்கு உட்படல் என்ற ஏதாவதொரு அழிவைக்கொடுத்து அல்லாஹ் அதிகாரம் செலுத்துவதாகும். அல்லது இடைவிடாத நோயை அல்லாஹ்  அவனுக்குக் கொடுக்க சிகிச்சையிலேயே தனது பணத்தையும், சொத்தையும் அவன் அழித்து விடுவதாகும். மறைமுகமான அழிவு என்பது  மார்க்கத்திற்கும் பயனில்லாத வகையில், உலகத்திற்கும் பயனில்லாத அமைப்பில் அவனது பணத்திலும் சொத்திலும் உள்ள அருள்வளத்தை அல்லாஹ் கழட்டி எடுத்து விடுவதாகும். எத்தனையோ மனிதர்களை நாம் பார்க்கிறோம்! அவர்களிடம் சொற்ப சொத்தும் பணமும்தான் இருந்துகொண்டிருக்கும். என்றாலும், அதன்மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பயனைக் கொடுக்கின்றான்; அதில் பிறருக்கும் பயனடைக் கொடுக்கிறான்; பின்னால் வரக்கூடியவர்களுக்கும் பயன்மிக்கதாகவே அது இருந்துகொண்டிருக்கிறது. இன்னும் எத்தனையோ மனிதர்களை நாம் பார்க்கிறோம்! அவர்களிடம் நிறைய பணமும், சொத்துக்களும் இருக்கின்றன. இருந்தாலும் அவற்றைக்கொண்டு அவர்கள்  பயனடைவதில்லை; இதனால், ஏழைகளின் வாழ்க்கையை வாழும் கஞ்சர்களாக அவர்கள் மாறிவிட்டார்கள்! காரணம், அருள்வளம் அழிக்கப்பட்டுவிட்டது. அல்லாஹ் பாதுகாப்பானாக!!”.

[ நூல்: 'அல்கவ்லுல் முfபீத் அலா கிதாபித் தவ்ஹீத்' லில்உஸைமீன், 03/275,276 ]


🎯 عن أبي هريرة رضي الله عنه قال، سمعت رسول الله صلّى الله عليه وسلم يقول: *{ الحلف منفّقة للسّلعة، ممحقة للبركة }* « رواه البخاري، رقم الحديث - ٢٠٨٧ ». 

              قال العلاّمة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

              « الحلف على السّلعة قد يكون حلفا على ذاتها كأن يحلف أنها من المصنع الفلاني المشهور بالجودة وليست منه؛ أو نوعها كأن يحلف أنها من الحديد وهي من الخشب؛ أو وصفها كأن يحلف أنها طيبة وهي رديئة؛ أو قيمتها كأن يحلف أن قيمتها بعشرة وهي بثمانية.

           وقوله *« ممحقة للبركة »* : أي: متلفة له. والإتلاف  يشمل الإتلاف الحسّي بأن يسلط الله على ماله شيئا يتلفه من حريق أو نهب أو مرض يلحق صاحب المال فيتلفه في العلاج، والإتلاف المعنوي بأن ينزع الله البركة من ماله فلا ينتفع به لا دينا ولا دنيا. وكم من إنسان عنده مال قليل، لكن نفعه الله به ونفع غيره ومن وراءه! وكم من إنسان عنده أموال لكن لم ينتفع بها صار - والعياذ بالله - بخيلا يعيش عيشة الفقراء وهو غنيّ؛ لأن البركة قد محقت ».

[ المصدر: 'القول المفيد على كتاب التوحيد' للعثيمين، ٣/٢٧٥،٢٧٦ ].

💢🥏🥏🥏🥏🥏🥏🥏🥏💢

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post