அஷ்ஷெய்க் ஸாஹிர் பின் முஹம்மத் அஷ்ஷஹ்ரீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:
“பெருமைக்கென பயங்கர ஆபத்துக்கள் இருக்கின்றன. அவ்வாபத்துக்களை பின்வரும் இரண்டு வார்த்தைகளில் நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் உள்ளடக்கிக் கூறினார்கள். *“(ஆணவத்தோடு) உண்மையை மறுப்பது, மக்களைக் கேவலமாக மதிப்பது ஆகியவைதான் பெருமையாகும்!"* (நூல்: ஸஹீஹ் முஸ்லிம் - 147)
*🔅ஆபத்து 01: உண்மையை மறுப்பது:*
“அதாவது, அல்லாஹ்வின் அடியார்களில் யாராவது ஒருவரிடமிருந்து உண்மை வெளிவந்ததை ஒருவர் செவிமடுக்கிறார்; பின்னர், பெருமைக்காகவும் சுய கெளரவத்துக்காகவும் அம்மறுப்பில் அவர் கடுமையாக இருக்கிறார்; அத்தோடு, பிறரை அவர் கேவலமாகவும் மதித்து, கடைசி வரைக்கும் உண்மைக்குக் கட்டுப்பட்டு நடக்கவும் அவர் மறுத்து வருகிறார்!” என்பதுதான் இதனுடைய விளக்கமாகும். நிராகரிப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்களிடம் காணப்படுகின்ற மோசமான பண்புகளின் ரகசியம் இதுதான்.
எவராவது ஒருவரின் நாவிலிருந்து வந்தது சத்தியம்தான் என்பது ஒருவருக்குத் தெளிவாகியும் ஆணவம் கொண்டு அதை ஏற்க அவர் மறுக்கிறார். அல்லது, 'உண்மை வெல்ல வேண்டும்; அதை வரப்பிரசாதமாகவும் பொக்கிஷமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்' என்பதற்காக அல்லாமல் விவாதத்தில் வெற்றிபெற்று, அடுத்தவரை வாயடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக விவாதம் செய்கிறார் என்றால் இவரும் இம்மோசமான பண்பில் நிராகரிப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்களுடன் கூட்டுச் சேர்ந்து விடுகின்றார். நல்லுபதேசத்தை ஏற்றுக்கொள்ளாதிருக்க பெருமை யாரைத் தூண்டுகிறதோ அவரும் இவ்வாறேதான். அல்லாஹ் கூறுகிறான்: *“அல்லாஹ்வை அஞ்சிக்கொள் என அவனிடம் கூறப்பட்டால் (அவனது) வரட்டு கெளரவம் அவனைப் பாவத்தில் தள்ளிவிடுகிறது. அதனால் நரகமே அவனுக்குப் போதுமானதாகும்”*. (அல்குர்ஆன், 02:206).
*🔅ஆபத்து - 02: மக்களை கேவலமாக மதிப்பது:*
எவனெல்லாம் தான் மற்றவரை விடச் சிறந்தவன் எனக் கருதி தன் சகோதரனை இழிவுபடுத்திக் கேவலப்படுத்துவதோடு, சிறுமைக் கண் கொண்டும் அவனைப் பார்க்கின்றானோ அவனும் நிச்சயமாக பெருமையடித்துவிட்டான்!”.
[ நூல்: 'ரிசாலதுல் கிப்ர்', பக்கம்: 20,21 ]
قال الشيخ محمد الشهري حفظه الله تعالى:
{ للكبر آفات عظيمة جمعها النّبيّ صلّى الله عليه وسلم في كلمتين جامعتين وهي قوله: *« الكبر بطر الحق، وغمط النّاس »*. < رواه مسلم، رقم الحديث - ١٤٧ >
*الآفة الأولى:* بطر الحق؛ أي ردّه.
إن من سمع الحق من عبد من عباد الله واستنكف عن قبوله وتشمّر لجحده، فما ذاك إلّا للترفّع والتعاظم، واستحقاره غيره حتى يأبى أن ينقاد له، وذلك سرّ أخلاق الكافرين والمنافقين.
فكل من يتضح له الحق على لسان أحد، ويأنف من قبوله أو يناظر للغلبة والإفحام، لا ليغتنم الحق إذا ظفر به فقد شاركهم في هذا الخلق. وكذلك من تحمله الأنفة على عدم قبول الوعظ، قال تعالى: *( وإذا قيل له اتّق الله أخذته العزّة بالإثم فحسبه جهنم )* « سورة البقرة، الآية - ٢٠٦ ».
*الآفة الثانية:* غمط الناس.
أي: ازدراؤهم واستحقارهم، فكل من رأى أنه خير من أخيه، واحتقر أخاه وازدراه، ونظر إليه بعين الإستصغار فقدتكبّر }.
[ المصدر: 'رسالة الكبر' لزاهر بن محمد الشهري، ص - ٢٠ ، ٢١ ]
🎁➖➖➖➖➖➖➖➖🎁
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா