சோதனைகள் ஏற்பட்டதற்காகச் சோர்ந்துபோய் விடாதீர்கள்


         ஷுரைஹ் அல்காழீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           *“சோதனையால் நிச்சயமாக  நான் பீடிக்கப்படுவேன். அப்போது, அதற்காக நான்கு தடவைகள் அல்லாஹ்வை நான் புகழ்ந்து கொள்வேன்.*

*👉🏿 ஏற்பட்ட சோதனை, அதைவிட மிகப்பெரியதாக இருக்கவில்லை என்பதற்காகப் புகழ்வேன்.*

*👉🏿 அதற்காகப் பொறுமையுடன் இருக்கும் பாக்கியத்தை அவன் தந்துள்ளான் என்பதற்காகப் புகழ்வேன்.*

*👉🏿 நற்கூலியை நான் ஆதரவு வைத்துப் பெறுவதற்காக, 'இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்' ௭ன்று சொல்லும் பாக்கியத்தை அவன் எனக்குத் தந்துவிட்டான் என்பதற்காகப் புகழ்வேன்.*

*👉🏿 எனது மார்க்க விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக அச்சோதனையை அவன் ஆக்கவில்லை என்பதற்காகப் புகழ்வேன்!”*

{ நூல்: 'சியரு அஃலாமின் நுபbலா', 04/105 }


           قال شريح القاضي رحمه الله تعالى: *[ إنّي لأصاب بالمصيبة، فأحمد الله عليها أربع مرات:-*

🏓 أحمد إذ لم يكن أعظم منها.

🏓 وأحمد إذ رزقني الصّبر عليها.

🏓 وأحمد إذ وفّقني للإسترجاع لما أرجو من الثواب.

🏓 وأحمد إذ لم يجعلها في ديني.

{ سير أعلام النبلاء، ٤/١٠٥ }

➖➖👇👇👇👇👇👇➖➖

*👉🏿 அல்லாஹ் கூறுகிறான்:* “நிச்சயமாக நாம் ஓரளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளாலும் உங்களைச் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு (நபியே) நீர் நன்மாராயம் கூறுவீராக!🔅அவர்கள் யாரெனில், தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது 'இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்' (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!') என்று கூறுவார்கள்.🔅இத்தகையோருக்கே அவர்களின் இரட்சகனிடமிருந்து புகழுரைகளும், கருணையும் உண்டாகும். அவர்களே நேர்வழி பெற்றவர்கள்!”.

(அல்குர்ஆன், 02:155 -157)

🎉➖➖➖➖➖➖➖➖🎉

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post