அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:-
*“சுவர்க்கம் என்பது: வெறும் மரங்கள், கனிகள், உணவு, பானம், கண்ணழகிகள், ஆறுகள், மாளிகைகள் இருக்கின்ற இடத்திற்குரிய பெயர் மாத்திரம் கிடையாது. இந்த சுவர்க்கத்தை அறிந்து கொள்கின்ற விடயத்தில் மனிதர்களில் அதிகமானோர் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.*
*பூரணத்துவமான முறையில், பொதுவான அமைப்பில் இன்பங்கள் இருக்கின்ற வீட்டிற்குப் பெயர்தான் சுவர்க்கம்!. அல்லாஹ்வின் சங்கையான முகத்தைப் பார்த்துக்கொண்டும், அவன் பேச்சைக் கேட்டுக்கொண்டும், அவனுக்கு நெருக்கமாக இருந்து கண்குளிர்ச்சியடைந்து கொண்டும், அவனது திருப்தியைப் பெற்றுக்கொண்டும் அடைகின்ற இன்பம்தான் சுவனத்து இன்பங்களில் ஆகப்பெரிய இன்பமாகும்!.*
*சுவர்க்கத்திலிருக்கின்ற உணவு, குடிபானம், ஆடை, காட்சிகள் போன்ற இன்பத்தை இவ்வுலக இன்பத்தோடு இணைத்துத் தொடர்புபடுத்தி ஒருபோதும் பார்க்கவே முடியாது!!”*
{ நூல்: 'மதாரிஜுஸ் ஸாலிகீன்', 02/80 }
🔰➖➖➖➖➖➖➖➖🔰
قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-
*[ الجنة ليست إسما لمجرد الأشجار، والفواكه، والطعام، والشراب، والحور العين، والأنهار، والقصور ! وأكثر الناس يغلطون في مسمى الجنة.*
*فإن الجنة إسم لدار النعيم المطلق الكامل. ومن أعظم نعيم الجنة: التمتع بالنظر إلى وجهه الكريم، وسماع كلامه، وقرة العين بالقرب منه، وبرضوانه!.*
*فلا نسبة للذة ما فيها: من المأكول، والمشروب، والملبوس والصور؛ إلى هذه اللذة أبدا ]!*
{ مدارج السالكين، ٢/٨٠ }
🔰➖➖➖➖➖➖➖➖🔰
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க்
*N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா