பொய் வராதபடி பேச்சில் அவதானம் தேவை


         இமாம் அபூ ரவ்ஹ், ஹாதம் பின் யூசுப் (ரஹ்) கூறுகின்றார்கள்:-

         நான் புfழைல் பின் இயாழ் (ரஹ்) அவர்களின் வாசல் படி சென்று, அவருக்கு சலாம் கூறி, *“அலியின் தந்தை (புfழைல்) அவர்களே! என்னிடம் ஐந்து நபிமொழிகள் இருக்கின்றன; (உங்களிடம்  உறுதிப்படுத்தி எழுதிக்கொள்வதற்காக) நீங்கள் அனுமதித்தால் அவற்றை உங்களுக்கு வாசித்துக் காட்டுவேன்!”* என்று சொல்லி (அவர் அனுமதிக்க) வாசித்துக் காட்டினேன். ஆனால் அதுவோ ஆறு நபிமொழிகளாக இருந்தன. உடனே என்னிடம் அவர்கள், *“அடச் சீ; எழுந்து விடு மகனே! (முதலில்) உண்மை பேசக் கற்றுக் கொள்; பின்னர், நபிமொழியை நீ எழுதிக்கொள்!”* என எனக்குக் கூறினார்கள்.

{ நூல்: 'தாரீஹு திமிஷ்க்' லிப்னி அசாகிர் , 48/430 }


            قال أبو روح حاتم بن يوسف رحمه الله تعالى:-

          أتيت باب الفضيل بن عياض فسلّمت عليه، فقلت: *"يا أبا علي! معي خمسة أحاديث إن تأذن لي فأقرأ عليك، فقرأت؛ فإذا هو ستة! "*

فقال لي: *" أف؛ قم يا بني! تعلّم الصدق، ثم أكتب الحديث "*.

{تاريخ دمشق لابن عساكر ، ٤٨/٤٣٠ }

➖➖➖➖➖➖➖➖➖➖


❇👉🏿  அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) அவர்கள், *“உண்மையாளர்களிடம் அவர்களது உண்மையைப் பற்றி அவன் விசாரணை செய்வதற்காக (உறுதிமொழி எடுத்தான்)”*(அல்குர்ஆன், 33: 08) என்ற இவ்வசனத்திற்கு இவ்வாறு தனது கருத்தைப் பதிவு செய்கிறார்கள்:-

           *“உண்மையாளர்கள், அவர்களது உண்மை குறித்து வினவப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்றிருக்குமாக இருந்தால், பொய்யர்களின் நிலைமை குறித்து என்னதான் நினைத்துப் பார்க்க இருக்கிறது?!”*

{ நூல்: 'இஆஸதுல் லஹ்பாfன்', 01/83 }


               

          قال تعالى: *« ليسأل الصادقين عن صدقهم »*

            قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-

              *[ فإذا سئل الصادقون وحوسبوا على صدقهم، فما الظن بالكاذبين؟! ]*

{ إغاثة اللهفان،  ١/٨٣ }

➖➖➖➖➖➖➖➖➖➖

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post