புகைக்கும் ஒருவருடன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கலாமா?


           இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்)  கூறுகின்றார்கள்:

           “புகைக்கும் பழக்கமுடைய ஒருவர் உனக்குப் பக்கத்தில் இருக்கிறார். அவர் புகைக்க முற்படும்போது  அவருக்கு நீ,  *'எனதருமைச் சகோதரா!  இது ஹராம் (தடுக்கப்பட்டிருக்கிறது); உமக்கு இது ஆகாது'* என்று இரக்கமாகவும் நளினமாகவும் அவருக்கு நீ உபதேசம் செய்ய வேண்டும். அப்படி நீ செய்தால், - என் எண்ணப்படி - தன் செயலிலிருந்து சீக்கிரம் அவர் விலகிக்கொள்ளக்கூடும். இதை நாமும் பரீட்சித்துப் பார்த்திருக்கின்றோம். வேறு பலரும் பரீட்சித்துப் பார்த்துள்ளனர். 

         நீ உபதேசித்தும் புகை பிடிப்பதை விட்டும்  அவர் விலகிக்கொள்ளவில்லை என்றால் கீழ்க்காணும் இறைவாக்குக்கு அமைய அவரிலிருந்து நீ பிரிந்திருக்க வேண்டியது உனக்குக் கட்டாயமாகும். *“அல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுவதையும், அவை கேலி செய்யப்படுவதையும் நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சில் ஈடுபடும் வரை அவர்களுடன் உட்கார்ந்திருக்காதீர்கள் என்று உங்கள் மீது அல்லாஹ் இவ்வேதத்தில் இறக்கியுள்ளான். (அவ்வாறு நீங்கள் உட்கார்ந்துகொண்டிருந்தால்) நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றவர்களே”*. (அல்குர்ஆன், 04:140)

             பொது இடங்களில் இருக்கின்ற போதுதான் இச்சட்டமாகும். மாறாக,   ஒருவர் தான் தொழில் செய்யும் இடத்தில் இருந்துகொண்டு புகைக்கிறார். நீயும் அதே இடத்தில் தொழில் செய்துகொண்டு புகைக்க வேண்டாம் என்று அவருக்கு உபதேசம் செய்கிறாய். ஆனால், அவர் விலகி நடக்கவில்லை என்றால் அப்போது நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் அவரை விட்டு நீ பிரிந்து செல்லாமலும் எழுந்து செல்லாமலும் அங்கேயே நீ இருப்பதில் உன்மீது குற்றமில்லை. ஏனெனில், (ஒன்றாக தொழில் செய்து வருகின்ற இடம் என்பதால் வேலையை விட்டுவிட்டு) அவரிலிருந்து உன்னால் பிரிந்திருக்க முடியாது”.

[ நூல்: 'லிகாஉல் பாbபில் மப்fதூஹ்', 23/54 ]


🎯 قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله:

            { فإذا صار إلى جنبك مدخن وأراد أن يدخن فانصحه بلطف ورفق قل له: "يا أخي هذا حرام ولا يحلّ لك". وفي ظني أنك إذا نصحته بلطف ورفق أنه سوف ينزجر، كما جرّب ذلك غيرنا وجرّبناه نحن أيضا.

            فإن لم ينته عن شرب الدخان فالواجب عليك أن تفارقه لقوله تعالى: *« وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّىٰ يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ ۚ إِنَّكُمْ إِذًا مِّثْلُهُمْ...»* (سورة النساء، الآية - ١٤٠ )

            ولكن هذا في الأماكن العامة، أما إذا كان في مكان الوظيفة ونصحته فلم ينته فحينئذ لا حرج عليك أن تبقى؛ لأنه ضرورة، ولا تستطيع أن تتخلص منه ».

[ لقاء الباب المفتوح ٥٤/٢٣ ]

🌀🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌀

              *✍தமிழில்✍*

                அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா.

    

Previous Post Next Post