எதிரியிடமிருந்து பாதுகாப்புத் தேட மறவாதீர்கள்


🎯 நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும்போது, *“அழ்ழாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹுப்ஸி வல்ஹபாயிஸி” (இறைவா! அருவருக்கத்தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும்) ஆண், பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்!”* என்று ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள் என அனஸ் இப்னு மாலிக் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி - 142, 6322)

         இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் ஸாலிஹ் ஆலு பbஸ்ஸாம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இந்த நபிமொழிக்கு இவ்வாறு விளக்கம் கூறுகின்றார்கள்:-

         “நபியவர்களுக்கு பணிவிடை செய்துகொண்டு அவர்களின் நடவடிக்கைகளை அவதானித்து வந்த அனஸ் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள், (மலசல) இயற்கைத் தேவையை நிறைவேற்றும் சமயத்தில் நபிகளார்  கடைப்பிடித்து வந்த ஒழுங்கை இந்நபிமொழியில் எமக்குக் கூறுகின்றார்கள். பாதுகாப்புக்காக தன் இரட்சகனிடம் அதிகமாக ஒதுங்கிக்கொள்ளும் நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தன் இரட்சகனை நினைவுகூர்வதையோ, எந்நிலையிலும் அவனிடம் உதவி தேடுவதையோ விட்டு விடாதவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

         மலசலத் தேவையை முடிப்பதற்காக நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்)  அவர்கள் கழிவறைக்குள் பிரவேசிக்க நாடினால் அல்லாஹ்விடம் அவர்கள் உதவி தேடுவார்கள்; அசுத்தம் என்ற தீங்கிலிருந்து தன்னைக் காக்கும்படியும், முஸ்லிமின் மார்க்க மற்றும் அவனது வணக்க வழிபாட்டை எல்லா நிலையிலும் பாழாக்க முயற்சிக்கும் ஷைத்தான்களிலிருந்து தன்னைப் பாதுகாக்கும்படியும் அல்லாஹ்விடம் அவர்கள் கோரியிருக்கின்றார்கள்.

         பாதுகாப்பால் சூழப்பட்டிருக்கும் நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களே தீங்கையும், தீங்கு விளைவிப்போரையும் பயந்திருக்கிறார்கள் என்றால் எமது பயம் எவ்வளவு கடுமையானதாக இருக்க வேண்டும்! எமது எதிரியிடமிருந்து எமது மார்க்கத்தைப் பாதுகாக்கத் தேவையான  நடவடிக்கைகள் அனைத்தையும் எந்தளவுக்கு நாம் எடுக்க வேண்டும்!! என்பதையே இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்”.

{ நூல்: 'தய்சீருல் அல்லாம் ஷர்ஹு உம்ததில் அஹ்காம்', 01/46 }


🎯 عن أنس بن مالك رضي الله عنه أنّ النّبيّ صلّى الله عليه وسلم كان إذا دخل الخلاء قال: *« أللهمّ إني أعوذ بك من الخبث والخبائث »* (رواه البخاري، رقم الحديث:  )

          قال الشيخ عبدالله بن عبدالرحمن بن صالح آل بسّام رحمه الله: 

         « أنس بن مالك المتشرّف بخدمة النّبي صلّى الله عليه وسلم يذكر لنا في هذا الحديث أدب النّبي صلّى الله عليه وسلم حين قضاء حاجته، وهو أنّه - صلّى الله عليه وسلم - من كثرة التجائه إلى ربّه لا يدع ذكره والإستعانة به على أيّة حال.

             فهو صلّى الله عليه وسلم إذا أراد دخول المكان الذي سيقضي فيه حاجته، إستعاذ بالله والتجأ إليه أن يقيه من الشّرّ الذي منه النجاسة، وأن يعصمه من الخبائث، وهم الشياطين الذين يحاولون في كل حال أن يفسدوا على المسلم أمر دينه وعبادته.

         فإذا كان النّبي صلّى الله عليه وسلم - وهو المحفوف بالعصمة - يخاف من الشّرّ وأهله، فجدير بنا أن يكون خوفنا أشدّ، وأن نأخذ بالإحتياط لديننا من عدوّنا ».

{ المصدر: ' تيسير العلّام شرح عمدة الأحكام' ، ١/٤٦ }

🌀➖➖➖➖➖➖➖➖🌀

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم