அறிவுக்கடல் இமாம் ஷாபிஈ ரஹிமஹுள்ளாஹ் அவர்கள்.

அர்ரபீஉ பின் சுலைமான் (ரஹ்) கூறுவதாவது ;

 ''இமாம் ஷாபிஈ அவர்கள் இரவை மூன்று பகுதிகளாகப் பிரித்து முதல் பகுதியில் எழுதுபராகவும், இரண்டாவது பகுதியில் தொழுபவராகவும், மூன்றாவது பகுதியில் தூங்குபவராகவும் இருந்தார்.''

(ஹில்யதுல் அவ்லியா: 09/135)

யூனுஸ் அஸ்ஸத்பிf (ரஹ்) கூறுவதாவது ;

நான் இமாம் ஷாபிஈயை விட சிறந்த அறிஞரைப் பார்க்கவில்லை, ஒருதடவை ஓர் மார்க்க விசயத்தில் இமாம் அவர்களுடன் வாக்குவாதப்பட்டேன் பிறகு பிரிந்து சென்றோம், (பிறிதொரு சந்தர்ப்பத்தில்) என்னை சந்தித்து இரு கைகளையும் பிடித்து "அபூ மூஸாவே! நாம் ஒரு மார்க்க சட்டத்தில் ஒன்றுபடாவில்லை என்றாலும் நம் சகோதரத்துவம் உறுதிபெறாதா?" என கேட்டுக்கொண்டார்.

(ஸியரு அஃலாமின்னுபலா 10/16)

அல்மைமூனி (ரஹ்)  இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) இடம் கேட்டதாகக் கூறுவதாவது ; 

"ஆறுநபர்கள் அவர்களுக்காக வேண்டி ஸஹர் நேரத்தில் அள்ளாஹ்விடம் பிரார்த்தனை புரிகிறேன் அவர்களுள் இமாம் ஷாபிஈயும் ஒருவர்" 

(ஸிபfதுஸ் ஸப்fவா : 02/250)

இமாம் ஷாபிஈ (ரஹ்) அர்களே கூறுவதாவது;

 நான் சொன்ன எல்லாவற்றையும் நபி (ஸல்) அவர்கள் சொன்னவற்றைக்கு நேர்மாறாக இருந்தால் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸே மிக ஏற்றமானது. என்னைப் பின்பற்றாதீர்கள்.

(ஸியரு அஃலாமின்னுபலா : 10/33)

ஒன்றல்ல இரண்டல்ல இமாம் ஷாபிஈ (ரஹ்) பற்றி பல அறிஞர்கள் பற்பல கருத்துகளை அடுக்கியுள்ளனர். 

ஆனால் ஒரு சில உஸுல் தெரியாத அறிவிலிகள்  குர்ஆன் ஸுன்னா என்று சொல்லிக்கொண்டு மத்ஹப்புகளை விமர்சிக்கிறேன் என்றும் தக்லீதை விமர்சிக்கிறேன் என்றும் இமாம் ஷாபிஈ மற்றும் ஏனைய ஸலப்f அறிஞர்களையும் கண்மூடித்தனமாக தரக்குறைவாக விமர்சனம் செய்கின்றனர்.

மார்கத்திற்கு செய்த அவர்களின் சேவைகளை ஆராய்ந்து பார்த்தால் நாம் இஸ்லாத்திற்க்கு அப்படி என்னதான் செய்திருக்கிறோம்.!? முகம் சுழிக்கும். 

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களுக்கு அள்ளாஹ் அருள் புரிவானாக!!!

நபிமார்கள் சித்தீகீன்கள் ஷுஹதாக்களுடன் உயர்ந்த ஜன்னதுல் பிர்தவ்ஸில் எம்மை ஒன்று சேர்ப்பானாக!!!

 ஆமீன்.

தமிழில்,தொகுப்பு;
Ahsan Asman Muhajiri
Previous Post Next Post