அய்யாமுத் தஷ்ரீக் என்பது துல் ஹஜ் மாதத்தின் பெருநாளை அடுத்த மூன்று நாட்கள் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் ஆகும்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அய்யாமுத் தஷ்ரீக் (எனும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த மூன்று) நாட்கள், உண்பதற்கும் பருகுவதற்கும், அல்லாஹ்வை நினைவு கூர்(ந்து திக்ர் செய்)வதற்கும் உரிய நாட்களாகும்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2099)
அய்யாமுத் தஷ்ரீக் பெயர் வர காரணம் :
இப்பெயரைக் கொண்டு இந்நாட்கள் அழைக்கப்படுவதற்கான காரணம் : ஆரம்ப காலத்தில் இம்மூன்று நாட்களிலும் மனிதர்கள் உழ்ஹிய்யஹ் இறைச்சிகளைப் பாதுகாத்து வைப்பதற்காக! அவற்றை வெட்டித் துண்டாக்கி, உப்பிட்டுப் பதப்படுத்தி வெயிலில் காய்வதற்கு விடக் கூடியவர்களாக இருந்தனர்! இவ்வாறு பதப்படுத்தும் செயல்பாட்டுக்கு தஷ்ரீக் என்று அறபியில் கூறப்படும்!
அய்யாமுத் தஷ்ரீக் நாட்களின் சிறப்புகள் :
1) ஈதுல் அழ்ஹா நாளில் குர்பானி கொடுக்க முடியாதவர்கள் இந்த மூன்று நாட்களில் குர்பானி கொடுக்கலாம்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும்!
(நூல் : ஸஹீஹ் தாரகுத்னீ : 4 / 284)
2) அய்யாமுத் தஷ்ரீக் மூன்று நாட்களிலும் நாம் நோன்பு வைக்க கூடாது! இந்த மூன்று நாட்களும் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அய்யாமுத் தஷ்ரீக் (எனும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த மூன்று) நாட்கள், உண்பதற்கும் பருகுவதற்கும், அல்லாஹ்வை நினைவு கூர்(ந்து திக்ர் செய்)வதற்கும் உரிய நாட்களாகும்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2099)
3) ஹஜ்ஜில் இருப்பவர்களுக்கு 'ஹதீ' (هدي) என்னும் குர்பானிப் பிராணி கிடைக்கவில்லை என்றால் மட்டும் இதற்கு பதிலாக அவர்கள் நோன்பு வைக்க அனுமதி உண்டு!
ஆயிஷா (ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் கூறியதாவது :
குர்பானிப் பிராணி கிடைக்காதவர் தவிர மற்றவர்கள் தஷ்ரீக்குடைய நாட்களில் நோன்பு நோற்க அனுமதிக்கப்படவில்லை!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1998)
4) இந்த் மூன்று நாட்களிலும் நாம் அதிகமாக அல்லாஹ்வை திக்ர் செய்வதற்குரிய நாட்களாகும்! அல்லாஹ் நமக்கு கொடுத்து உள்ள உணவிற்கும் மகிழ்ச்சியானா வாழ்விற்கும் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்!
5) இந்த நாட்கள் பற்றி இஸ்லாம் கூறுவதன் மூலம் இஸ்லாத்தின் இலகுவான தன்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது! இந்நாட்களில் நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டு உள்ளது ! இந்த நாட்களில் தாராளமாக வீண்விரையமின்றி உண்டு, பருகி குடும்பத்தினர் உடன் சந்தோசப்படுவதை இஸ்லாம் வரவேற்கிறது! முழு வருடமும் நோன்பு நோற்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது!
@அல்லாஹ் போதுமானவன்