ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு கணவனாகவே இருக்க தகுதியற்ற ஆண் :

1. ஐந்து வேளை தொழாதவன்.

2. கல்யாணத்துக்கு முன் அல்லது கல்யாணம் ஆன பிறகு மனைவி அல்லாத வேறு ஒரு பெண்ணுடன் தன் மறைவிடத்தை மறைக்காதவன்...

3. Dhayooth -தன் மனைவி மேல் எந்த ரோஷமும் இல்லாதவன்.. (தன் மனைவி விபச்சாரம் செய்தாலும் கோபம் அல்லது கவலை கொல்லாதவன்)

(மேல் உள்ளவை NO compromise)

(கீழ் உள்ளவை திருத்தபட்டால் compromise செய்யலாம்)
சிறந்த கணவனாக இருக்க தகுதியற்ற ஆண் :

1. மனைவி யுடன் இல்லறம் ஈடுபட நாட்டம் இல்லாதவன், அல்லது திருப்தி படுத்த நாடாதவன்.

2. மனைவிக்கு ஆபத்து என்று வந்தால் விட்டு ஓடக்கூடிய கோழை..

3. அல்லாஹ் தடுத்த  மது அல்லது புகை பிடிப்பவன்..

4. ஹராமன வருமானம் ஈட்டுபவன்..

3. மனைவி மக்களுக்காக உழைத்து சம்பாத்தியம் தேடாத சோம்பேறி

4. மனைவி வீட்டில் இருந்து வரதட்சணை, நகைகள், சீதனம் அல்லது மனைவி வேலை வருமானத்தை எதிற்பாப்பவன்.

5. இரண்டு மனைவிகள் இருந்தால், சமமாக நடத்தாதவன்

6. மனைவியை அடிமை போல நடத்துபவன்.

7. மனைவியை மென்மையாக நடத்தாமல் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவன்.

8. மனைவி பற்றி மற்றவரிடம் அவதூறு அல்லது புரம்பேசுபவன்..

9. மனைவி முன்னால் மற்ற பெண்களை பற்றி உயர்வாக பேசுபவன்

10. மனைவியின் தாய் தந்தையை மதிக்காதவன்..

மேல் அதிக சிறப்பான கணவன் :

1. மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்பவன்
2. எப்போதும் மனைவிக்காக தன்னை அலங்கரிப்பவன்.
3. காது கொடுத்து மனைவி சொல்வதை கேட்பவன், அதிக நேரம் மனைவியோடு செலவு செய்பவன்..
4. அன்பளிப்பு வாங்கி கொடுப்பவன்

“இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : திர்மிதி எண்: 1082

- Masoud Ali
Previous Post Next Post